உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும்: ஸ்டாலினிடம் துரைமுருகன் எதிர்பார்ப்பு

கட்சியில் மாற்றம் செய்ய வேண்டும்: ஸ்டாலினிடம் துரைமுருகன் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார் : வேலுாரில் நேற்று நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தி.மு.க., பவள விழாவை முன்னிட்டு ஒவ்வொரு, தி.மு.க.,வினரின் வீட்டிலும் கொடியேற்ற வேண்டும். செப்., 15, 16, 17 தேதிகளில் தி.மு.க.,வின் கருப்பு - சிவப்பு துண்டு கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சட்டசபை தேர்தல் வர, இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது. தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின், கட்சியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எதிரிகள் கூட பாராட்டும் அளவுக்கு, இக்கட்சியில் நான் இருந்தததால் தான், இன்றைக்கு அண்ணாதுரை அமர்ந்த இடத்தில் நான் உள்ளேன். அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும்.நான் படாத அவமானமா, தோல்வியா, சந்திக்காத எதிர்ப்புகளா? இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும்.இன்றைய இளைஞர்கள் வரும்போதே தடம் பார்த்து அரசியலுக்கு வருகின்றனர். வந்ததுமே, என்ன கிடைக்கும் என ஆலாய் பறக்கின்றனர். அரசியலுக்கு வரும் இளைஞர்கள் கட்சிக்குள் நுழைந்ததுமே பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமகிருஷ்ணன்
செப் 13, 2024 05:46

என்ன மாற்றம் செய்தாலும் ஜெயிக்க முடியாது. மத ஓட்டு, பண ஓட்டு , கள்ள ஓட்டுகளால் தான் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து வந்தது. இப்போது கிறுத்தவ ஓட்டுக்கள் மொத்தமாய் போயிவிடும், ஏற்கனவே பி ஜே பி திமுகவின் ஓட்டு வங்கியை சரித்து விட்டது. எடப்பாடியை சொந்த கட்சியினர் சரியான கூட்டணி வைக்க வற்புறுத்தி வருகின்றனர். சரியான கூட்டணி அமைந்தால் திமுக 40 சீட் கூட ஜெயிக்காது. இந்த பயம் திமுகவிற்கு வந்து விட்டது.