உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆட்சியில் பங்கு கேட்கலாம்.. இப்போதைக்கு சூழல் இல்லை: சுருதி குறைந்த திருமாவளவன்

ஆட்சியில் பங்கு கேட்கலாம்.. இப்போதைக்கு சூழல் இல்லை: சுருதி குறைந்த திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: ஆட்சியில் பங்கு கேட்கலாம் தான். ஆனால், இப்போதைக்கு அதற்கான சூழ்நிலை இல்லை. சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனையும், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டுதான் எந்த முடிவையும் எடுப்போம். தொடர்ந்து அப்படித்தான் செயல்படுவோம். எங்களுடைய கட்சியையும் மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். அந்த காலத்தை, முன் கூட்டியே கணித்து சொல்ல முடியாது. மாநில கட்சியாக மக்கள் அங்கீகரித்து இருக்கின்றனர். இனிவரும் காலங்களில் அதிகாரமிக்க வலிமையான கட்சியாகவும் அங்கீகரிப்பர். மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். வட இந்தியாவிலிருந்து வரக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது.நாம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நமக்கு ஹிந்தி தெரியாது; புரிந்து கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்த பின்பும், ஹிந்தியிலேயே பேசுகின்றனர். ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை; அதனாலேயே இந்த சிக்கல் என்பது என்னுடைய கருத்து.ஹிந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லி கொடுக்கட்டும். யாரும் யாரையும் தடுக்கவில்லை. ஆனால், ஹிந்தியை எங்கும் திணிக்கக்கூடாது. திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியாக கொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மதுரை, சிவகங்கை பகுதியில் சிறுவர்களை கொலை செய்கின்றனர். மாணவர்களை தாக்கும் சம்பவம் நடக்கிறது. ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, புலனாய்வு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்; அதை அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

c.mohanraj raj
மார் 14, 2025 23:43

ஓரமாக இருக்க வேண்டியதுதான் வேறு வழி இல்லை


saravan
மார் 14, 2025 21:07

அடிக்கும் கமிஷனில் வேணும்னா பங்கு கேட்கலாம்...


Balamurugan
மார் 14, 2025 18:42

அட மானங்கெட்ட பிக்காலி பயலே


Balamurugan
மார் 14, 2025 18:40

ஆமாம் அப்புறம் இந்த கொத்தடிமைக்கும் டாஸ்மாக் ஊழலில் பங்கு இருக்குதுன்னு சின்ன பகவதி போட்டுக்குடுத்தார்னா என்ன செய்வது.


krishna
மார் 14, 2025 14:55

GOPALAPURAM KOTHADIMAI


பேசும் தமிழன்
மார் 14, 2025 12:04

பிச்சை எடுக்க ஆசை தான்...... ஆனால் பிச்சை போட மாட்டேன் என்று சொல்லி விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.... அதனால் இப்போது வேண்டாம்..... அப்படி தானே தெருமா ???


naranam
மார் 14, 2025 11:18

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே என்று வெட்கமில்லாமல் கதறுவான் இவன்.


ஆரூர் ரங்
மார் 14, 2025 09:39

அன்னிய முகலாய, ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நம்மை விட மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானார்கள் வடஇந்திய மக்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் அங்குதான் உள்நாட்டுப் பொருட்கள்., பண்பாடு, மொழி, சுதேசி பற்றிய பிரச்சாரம் உச்சத்தில் இருந்தது .அதனால் இயல்பாகவே அவர்களுக்கு அன்னிய மொழிகள் மீது வெறுப்புள்ளது. நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிப் படிப்பையே முடிக்காத சுற்றுலா வழிகாட்டிகள் ஏழு மொழிகளில்கூட உரையாடுகிறார்கள். நம் அறிவை வளர்த்துக் கொள்வதை நாமே வெறுப்பது சுய அழிவில்தான் விடும்.


vijai hindu
மார் 14, 2025 09:19

கீழே உட்கார்றதை விட பிளாஸ்டிக் சேர் மேல் என்று முடிவெடுத்து விட்டார்


rajan_subramanian manian
மார் 14, 2025 08:52

இந்த அண்ணனுக்கு உடையாத பிளாஸ்டிக் chair மட்டும் இந்த சட்டசபை தேர்தலில் தருவதாக தலைவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அடுத்த தேர்தலில் மர நாற்காலி, அடுத்த தேர்தலில் இரும்பு நாற்காலி, சோபா என்று என்னை திராவிட தலைவர் வாங்கிக் கொண்டு முன்னேற்றுவதாக சொல்லி உள்ளார். அடுத்த நூற்றாண்டில் கொடிக்கம்பம் நடுவதற்கு அதற்கு அடுத்த நூற்றாண்டில் வீட்டில் சாப்பிடவும் அனுமதி கொடுத்துள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டுமென்றால் அடுத்த மாநிலம் போக வேன்டும், இந்த சிறுத்தைக்கு இதற்கு மேல் எதுவும் கிடைக்காது.


சமீபத்திய செய்தி