உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதன் பின்னணி என்ன?

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதன் பின்னணி என்ன?

சென்னை: சுவாமி விவேகானந்தரின், 'வளர்ந்த இந்தியா' என்ற பார்வையை உயிர்ப்பிக்கச் செய்யவே, பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலுக்காக, மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.பிரசாரத்தின் முடிவில், பிரதமர் மோடி, ஆன்மிக பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, நாளை மதியம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் மோடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். ஜூன், 1 வரை அங்கேயே தங்குகிறார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சுவாமி விவேகானந்தர், பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரி. அங்கு கடலில் அமைந்துள்ள பாறை, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புத்தரின் வாழ்வில் சாரநாத் சிறப்பு இடம் பெற்றதை போல, சுவாமி விவேகானந்தரின் வாழ்வில், இந்தப் பாறை ஒரு சிறப்பு இடத்தை பெற்றுள்ளது என, மக்கள் நம்புகின்றனர். அவர், நாடு முழுதும் சென்று, பின் கன்னியாகுமரி வந்து மூன்று நாட்கள் தியானம் இருந்து, வளர்ந்த இந்தியாவை நோக்கிய பார்வையை அடைந்தார். அதே இடத்தில் தியானம் செய்வதன் வாயிலாக, விவேகானந்தரின் வளர்ந்த இந்தியாவின் பார்வையை உயிர்ப்பிக்க செய்வதில், பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. பார்வதி தேவியும், அதே இடத்தில் பகவான் சிவனுக்காக காத்திருந்தபடி, ஒரே காலில் தியானம் செய்தார். கன்னியாகுமரி, நாட்டின் தென்பகுதியின் கடைகோடி முனை. மேலும், இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகியவை சங்கமிக்கும் இடம்.கன்னியாகுமரிக்கு சென்று தேச ஒற்றுமையை பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். தேர்தல் முடிந்த பின்னரும், அவர் தமிழகத்திற்கு வருவது, தமிழகத்தின் மீதான மோடியின் ஆழ்ந்த அர்ப்பணிப்பையும், அன்பையும் காட்டுகிறது.கடந்த, 2019ல் தேர்தல் பிரசாரம் நிறைவில் பிரதமர் மோடி, உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் சென்றார். அதற்கு முன், 2014ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிவாஜி பிரதாப்கர் சென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

anbu
மே 30, 2024 08:59

ஒரிசாவில் தமிழனை பற்றி தவறாக பேசியத்திற்காக, கூல் செய்ய வருகிறார்


Mohan das GANDHI
மே 30, 2024 01:19

மிகப்பெருமை தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் என்பதே இந்த பாரத பிரதமரின் தியானம் தெய்வீக ஆன்மீக வழிபாடு என்பதே இதனால் நாம் கண்டிப்பாக பெருமையடைய வேண்டும். தமிழகத்தில் தாமரை கண்டிப்பாக மலரும் ஜூன் 4ல் ரிசல்ட் தெரிந்தவுடன் அடுத்த பாரத பிரதமர் திரு.மோடிஜி தான் அதுபோல திராவிட ஊழல் திருடர்கள் கோபாலபுரம் திமுக தமிழ்நாட்டைவிட்டே அடித்து விரட்டப்படும். இனி தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஐபிஎஸ், EXRAW OFFICER ஆட்சி தமிழகத்தில் 6 மாதம் நடக்கவிருக்கிறது பின் கண்டிப்பாக திரு அண்ணாமலை IPS தான் அடுத்த முதலமைச்சர் தமிழகத்திற்கு ஜெய் ஸ்ரீ ராம்.


subramanian
மே 29, 2024 23:22

நம் பிரதமர் கன்னியாகுமரி வந்து தவம் செய்வது தமிழ் நாட்டுக்கு பெருமை . அவரின் கோரிக்கை ஆண்டவன் காதில் கேட்கும். எல்லாம் வல்ல இறைவன் கண்ணை திறந்து பார்க்கிறார். கெட்ட எண்ணம் கொண்டு தவறாக பேசினால் , இயற்கை பொங்கும். தவறானவர்கள் தண்டிக்கப்படுவர்.


ஆரூர் ரங்
மே 29, 2024 20:51

அந்தப் பாறையில் ஆலயமெதுவுமே கிடையாது. வழிபாட்டுத் தலமுமில்லை. மதம் சம்பந்தப்பட்ட ஒன்றுமில்லை. அங்கு தியானம் செய்வது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் எனக் கூறுவது அபத்தம். பைத்தியக்காரத்தனம். விவேகானந்தர் எனும் நரேந்திரர் தியானம் செய்த இடத்தில் நரேந்திர தாமோதரதாஸ் தியானம் செய்யப் போகிறார். அவ்வளவுதான்.


தஞ்சை மன்னர்
மே 29, 2024 20:29

புதுசு புதுசா கம்பி கட்டுன கதையெல்லாம் அவுத்து விடுறாங்க பாருங்க கொஞ்சம் உண்மை நிறைய பொய் அதுவே வந்தேறிகளின் கட்டுமானம்


Kasimani Baskaran
ஜூன் 03, 2024 05:24

திராவிடன்தான் தமிழகத்துக்கு வந்தேறி மன்னா...


தஞ்சை மன்னர்
மே 29, 2024 20:24

ஏதாவது கதைய அவுத்து வேண்டியது தானே கொஞ்சம் உண்மை நிறைய பொய் அதுவே ஆரிய கூத்தடியின் கவனம் , அதுக்கு ஒத்து போகும் சூத்திர அடிமை இந்த நரேந்திர தமோதிரதாஸ்.


தஞ்சை மன்னர்
மே 29, 2024 20:21

ஒரு மானவும் கிடையாது அங்கே ஒடிசாவில் தமிழர்களை பற்றி கேவலமாக பேசிவிட்டோம் எங்கே அப்புறம் பதவி இல்லாதபோது மீண்டும் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்த நாடகம் பதவி இருக்கும்போதே பிரதமர் என்ற மரியாதையை இல்லாமல் கருப்பு பலூன் விட்ட கும்பல் அது அப்புறம் போனால் செருப்பு வீச கூட தயங்கமாட்டார்கள் என்ற பயம் வந்து விட்டது.


ஆரூர் ரங்
மே 29, 2024 20:52

தமிழர்களை என்ன கூறிவிட்டார் என்று ஆதாரத்துடன் கூற முடியுமா? உங்களுக்குதான் ஹிந்தி தெரியாதே.


முருகன்
மே 29, 2024 17:11

வெயில் தாங்காமல் ஒய்வு எடுக்க வரும் இவருக்கு இப்படி ஒரு பில்டப் காச பணமா அடித்து விட வேண்டியது தான்


subramanian
மே 29, 2024 23:14

முருகன், செய்தியில் உள்ளது உண்மை. விவேகானந்தர், பார்வதி தேவி அங்கு தவம் செய்தது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது பொய்யா ?


A1Suresh
மே 29, 2024 12:59

தியானம் என்பது வெற்றிக்கான சாதனங்களில் ஒன்று என நமது ஆகமங்கள் விவரிக்கின்றன. பிரதமர் தானே அதனை பின்பற்றி நமக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். பொலிக பொலிக பொலிக


venugopal s
மே 29, 2024 11:28

ஏதோ அப்படியாவது நல்ல புத்தி வந்தால் மகிழ்ச்சி தான்!


Muralidharan S
மே 29, 2024 12:05

ஆமாம், மோடியின் சிரத்தை, மனவலிமை, நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனையை பார்த்தாலாவது திருட்டு கட்சிகளுக்கு நல்ல புத்தி வரட்டும்.


பேசும் தமிழன்
மே 29, 2024 13:07

அவர் எப்போதும் நாட்டை நேசிக்கும் நல்ல சிந்தனை கொண்டவர் தான்..... ஆனால் இங்கே இருக்கும் உங்களை போன்ற சிலர் தான்... நாட்டை கேவலமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.


V Venkatachalam, Chennai-87
மே 29, 2024 16:42

ஆஹா, முகமூடி வேணுகோபால் க்கு நல்ல புத்தி வருதாம்.. மகிழ்ச்சி.. வரவேற்போம்.. ஜெய்ஹிந்த்..


subramanian
மே 29, 2024 23:30

வேணுகோபால் எங்கேயா இருக்கீங்க. மோடியை பிடிக்கவில்லை உமக்கு, அது உமது விருப்பம். சரியான விமர்சனம் செய்யுங்க. தியானம் செய்வது அவர் உரிமை. அதை கேலி செய்வது உங்களை அழுத்தும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ