உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எந்த பாடத்திட்டம் சிறப்பானது?

எந்த பாடத்திட்டம் சிறப்பானது?

'8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது பாடம் படிக்க தெரியலை'

சென்னை : ''புதிய தேசிய கல்விக் கொள்கையின், 'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தால், மாணவர்களின் தரம் மேம்படும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.தமிழக கவர்னர் ரவி, 300 ஆசிரியர்களுடன் கலந்துரையாடும், 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து, கவர்னர் ரவி பேசியதாவது: சுதந்திரத்துக்கு முன், நம் பொருளாதாரமும், கல்வியும் சிறப்பாக இருந்தது. மாணவர்கள் குருகுல வழியில், ஆசிரியர்களிடம் இருந்து வாழ்வியலோடு சேர்ந்த கல்வியை கற்றனர். நம் கல்வித் தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவையை உணர்ந்து, நாடு முழுதும் உள்ள வல்லுனர்கள் கூடி, புதிய கல்வி கொள்கையை உருவாக்கினர். இதில், கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதை ஏற்று தமிழகம் முதலில் கையெழுத்திட்டது. தற்போது, அதில் உள்ள பலவற்றை ஏற்கமாட்டோம் என்கிறது.பொதுவாக, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக, மேல்நிலைப் பள்ளிகளில், தரம் வாய்ந்த ஆய்வகங்களை கட்டமைக்க, மத்திய அரசு நிதி வழங்குகிறது. இதை பெற்ற மாநிலங்கள், மாணவர்களின் தரத்தை மேம்படுத்தி உள்ளன. தமிழக கிராமங்களிலும் கல்வியை வளர்க்க, முன்னாள் முதல்வர் காமராஜர் அரசு பள்ளிகளை அதிகப்படுத்தினார். தற்போது, கல்வியின் இன்ஜின் எனக்கூறும் தமிழக அரசு பள்ளிகளில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 75 சதவீதம் பேருக்கு, மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க, இரண்டிலக்க எண்களை அறிய முடியவில்லை. இதை மேம்படுத்தாவிட்டால், கல்வித் தரத்தை நாம் இழந்து விடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

'வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் வம்படியாக பேசுகின்றனர்'

சென்னை : ''தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதை பிடிக்காத, வயிற்றெரிச்சல் பிடித்த சிலர், தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுகின்றனர்,'' என, கவர்னர் ரவியை மறைமுகமாக தாக்கி, அமைச்சர் உதயநிதி பேசினார். சென்னையில் நேற்று நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது: 'தமிழகத்தின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை' என, சிலர் அவதுாறு கிளப்புகின்றனர். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர், அரசு பள்ளியில் படித்து, இஸ்ரோ விஞ்ஞானிகளாகி உள்ளனர். அரசு பள்ளியில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதை பிடிக்காத, வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தான் தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுகின்றனர். வம்படியாக பேச வேண்டும் என்பதற்காவே இப்படியெல்லாம் பேசுகின்றனர். தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுவது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம். இதற்கு முதல்வர் எந்த காலத்திலும் இடம் கொடுக்க மாட்டார்.புதிய கல்விக் கொள்கையை துாக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, தரம் மிகுந்த மாநில கல்வித் திட்டத்தின் பாடத்தை குறை கூறுகின்றனர். இதற்கு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில் சொல்லி விட்டார். நுாலகம் தோறும் சென்று பாருங்கள்; அங்கிருக்கும் மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தைத்தான் போட்டித் தேர்வுக்காக படிக்கின்றனர். தேவையானால், மாநில கல்வித் திட்ட பாடத்தை குறை கூறுகிறவர்கள், இந்த உண்மையை நேரடியாக சென்றும் அறியலாம். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Dharmavaan
செப் 06, 2024 17:00

தமிழ் ஆட்டின் படித்து உயர்வாக உள்ளவர்கள் காமராஜ் காலத்தில் படித்தவர்கள்.திராவிட காலத்தில் கேவலமாகி விட்டது மடையனுக்கும் புரியவில்லை


Gopalakrishnan
செப் 06, 2024 13:07

Mr.Venugopal, மகள் படித்தது state syllabusஆகவே இருக்கட்டும் ..... கேள்வி படித்தது அரசு பள்ளியா இல்லை தனியார் பள்ளியா ???


Ramesh Sargam
செப் 06, 2024 11:49

வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் என்று பேசும் உதயநிதி எந்த அரசு பள்ளியில் பயின்று இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சர் ஆகி இருக்கிறான்? மேலும் அவன் குடும்பத்தில் எத்தனை பேர் தனியார் பள்ளியின் சொந்தக்காரர்கள் என்று அவனுக்கே தெரியுமோ தெரியாதோ...?


venugopal s
செப் 06, 2024 10:53

என் மகன் சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தார் , மகள் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் படித்தார். இரண்டுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை!


Hari
செப் 06, 2024 13:20

Why this partiality venugopal.... One daughter in cbse and one daughter in govt??


vbs manian
செப் 06, 2024 09:37

தரமான பாடத்திட்டம் கழகத்துக்கு வேப்பங்காய். அறிவியல் பொருளாதாரம் இவற்றை விட திராவிட சிந்தனைகள் எதிர் மறை மரபுகள் பாடத்திட்டங்களில் சேர்க்க பெரும் முயற்சி. திசை திரும்பும் புள்ளிமான்கள்.


Saai Sundharamurthy AVK
செப் 06, 2024 09:35

ஒரு அமைச்சர் பதவியில் உள்ள உதயநிதிக்கு யாரைப் பற்றி என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரீகம் கூட தெரியவில்லை.


karunamoorthi Karuna
செப் 06, 2024 08:59

வசதி படைத்தவர்கள் பல வகையான மொழிகள் கற்கலாம் வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் மட்டும் கற்கலாம் இதில் எந்த திட்டம் நல்லது.இது கூட ஒரு விதமான தீண்டாமை தான் இரட்டை குவளை முறை மாதிரி


Gopalakrishnan
செப் 06, 2024 07:53

100 சதவீதம் உண்மை திரு.மோகனசுந்தரம் சார்..... அரும் பெருந்தலைவர் திரு காமராஜர் ஐயாவையே....பொய்களாலும், புரட்டுகளாலும் தோற்கடித்த வம்சத்தின் வாரிசு ஆயிற்றே பிறகு எப்படி நாகரீகமாக பேசுவார்.... நான் வேற்று மாநிலத்தவன் என்னை கேட்டால்.....திமுக என்ற கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்....அப்படி அகற்றினால் தான் தமிழகம் சுபீட்சமடையும்....!!!


T.sthivinayagam
செப் 06, 2024 07:00

திரு கவர்னர்அவர்களே ஆங்கிலத்திலே பேசுகிறார் பயன்படுத்துகிறார் தாய்மொழியை அல்லது ஹிந்தியில் பேசுவது கூட கிடையாது் பின் என்ன தாய் மொழீ மற்றும்ஆங்கிலம் உள்ள பாடதிட்டமே பெஸ்ட்


மோகனசுந்தரம்
செப் 06, 2024 06:45

இவன் ஒரு அடி ....... என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறான். அவர்களெல்லாம் 30, 40 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்கள். இந்தத் திருட்டு திராவிட அயோக்கிய ஆட்சியில் படித்தவர்கள் அல்ல. தாத்தாவினுடைய அங்கீகாரத்தை வைத்துக் கொண்ட ஆடாத ஆட்டம் ஆடும் இவன் எல்லாம் ஒரு காலத்தில் எங்கே போவான் என்று கடவுளுக்கு தான் தெரியும். சொத்தை. இடியட்


A Viswanathan
செப் 06, 2024 16:39

அறிவு ஜீவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை