மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
2 hour(s) ago | 1
படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
2 hour(s) ago | 1
சென்னை: இம்மாதம் 30க்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பு வெளிப்படையாக இல்லாததால் வீட்டு உரிமையாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஏப்., மாதத்தில் சொத்து வரி வசூல் பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. மக்களை ஊக்குவிக்க ஏப்., 30க்குள் சொத்து வரி செலுத்தினால், 5 சதவீதம் தள்ளுபடி அல்லது ஊக்கத்தொகை திட்டத்தை, சென்னை மாநகராட்சி சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.கடந்த நிதியாண்டில், தமிழகம் முழுதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இச்சலுகை வழங்கப்பட்டது. இந்த வகையில், 2024 - 25ம் நிதியாண்டிலும், 5 சதவீத சலுகையை வழங்க, தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இதுகுறித்த அறிவிப்புகளை முறையாக வெளியிடவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு நிதியாண்டு துவக்கத்தில், தேர்தல் பணிகள் காரணமாக, சொத்து வரி சலுகை குறித்த முறையான விளம்பரம், பிரசாரம் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் மட்டுமே, இச்சலுகை இருப்பது போன்ற தகவல் நிலவுகிறது. மற்ற உள்ளாட்சிகளில், இதுகுறித்த வெளிப்படையான அறிவிப்பு இல்லாததால், இதற்கான கால வரம்பை மே 31 வரை நீட்டிக்க, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.தேர்தல் காரணமாக பொது மக்களும், அதிகாரிகளும், இதில் கவனம் செலுத்த முடியாமல் போனதை கருத்தில் வைத்து, அரசு இதில் முடிவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 1