உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விற்பனையில் வளைத்துக் கட்டும் மட்டன், சிக்கன் பிரியாணி; தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.11,000 கோடி

விற்பனையில் வளைத்துக் கட்டும் மட்டன், சிக்கன் பிரியாணி; தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.11,000 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அசைவ பிரியர்களின் அலாதியான ஐயிட்டமே பிரியாணி தான். மட்டன் பிரியாணி, சிக்கன் 65, கத்தரிக்காய் தொக்கு, பிரட் அல்வா... இந்த காம்பினேஷனுக்கு இணையே இல்லை என்பதே பிரியாணி பிரியர்களின் கருத்து. அதனால் தான், அசைவ உணவு வகையில் அனைத்தையும் விஞ்சி பிரியாணிக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.விருந்து, விசேஷம், கல்யாணம், காதுக்குத்து என எல்லா கொண்டாட்டத்திலும் இடம்பிடித்த பிரியாணி, இப்போது அன்றாட உணவாகி விட்டது. அதன் காரணமாக, விற்பனையும் களைகட்டுகிறது; உணவகங்களும் கல்லா கட்டுகின்றன.மட்டன், சிக்கன் என இரு வகையாக தினமும் தயாரிக்கப்படும் பிரியாணிகளில் பல ரகங்கள் உண்டு. ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, பாசுமதி பிரியாணி, மொகல் பிரியாணி உட்பட, 10 வகைகள் மார்க்கெட்டில் பேமஸ். பிரியாணி வகைகளும், பிரியர்களும் அதிகரித்து வருவதால், அதன் வியாபாரமும் விரிவடைந்துள்ளது.தமிழகத்தில் பிரியாணி விற்பனையில் ஈடுபட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத உணவகங்களில் ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கின்றன. அவற்றில், சென்னையின் பங்கு மட்டும் 5,500 கோடி ரூபாய். இது ஆண்டுதோறும், 10 சதவீதம் அதிகரித்து வருவது கூடுதல் தகவல்.சென்னை போன்ற பெரிய நகரங்களில், இன்றைக்கு பிரியாணிக்காக மட்டுமே தனி உணவகங்கள் திறக்கப்படும் அளவுக்கு, விற்பனை அதிகமாகி வருவது குறித்து, 'ஜூனியர் குப்பண்ணா' மேலாண் இயக்குனரும், இந்திய தேசிய உணவக சங்க சென்னை பிரிவு இணை தலைவருமான ஆர்.பாலசந்தர் கூறியதாவது:சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பிரியாணி. பிரியாணி வாங்கினால், 'சைடு டிஷ்' வாங்க தேவையில்லை என்பதால், பலரும் பிரியாணி சாப்பிட விரும்புகின்றனர். அதனால், பிரியாணி விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஜூனியர் குப்பண்ணாவுக்கு 49 கிளைகள் உள்ளன. அவற்றில் விற்பனையாகும் உணவு வகைகளில், 35 சதவீதம் பிரியாணி தான். ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பிளேட் என, ஆண்டுக்கு, 12 லட்சம் பிளேட் பிரியாணி விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக, 3,000 பிளேட் பிரியாணி விற்பனையாகிறது. இதேபோல், பல உணவகங்களில் பிரியாணி விற்பனை அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உணவகதொழிலில் ரூ.16,500 கோடி

தமிழகத்தில், சென்னையில் தான் அதிக உணவகங்கள் உள்ளன. குறிப்பாக, முறைப்படுத்தப்பட்ட பிரிவில் மட்டும், 66,000 உணவகங்கள் உள்ளன. முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத உணவகங்களில் ஆண்டுக்கு, 16,500 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. அதில், முறைப்படுத்தப்பட்ட உணவகங்களின் பங்கு 15,600 கோடி ரூபாய்.முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தாத உணவகங்களில் பிரியாணி விற்பனை ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய்க்கு நடக்கிறது. அதில் பிரபலமான, 25 உணவகங்களில் மட்டும், 1,500 கோடி - 2,500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.தேசிய அளவில் உணவக தொழிலில் டில்லி முதலிடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு இரண்டாவது, மூன்றாவது இடங்களிலும், சென்னை நான்காவது இடத்திலும் உள்ளது. தனிநபர் ஒருவர் சராசரியாக உணவகத்திற்கு செல்லும்போது, 925 ரூபாய் செலவு செய்கிறார். இது, சென்னையில், 845 ரூபாயாக உள்ளது.

உணவு

பிரியாணி, சாப்பாடு, புரோட்டா, சிக்கன் 65, பிரைடு ரைஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S. Gopalakrishnan
செப் 26, 2024 23:03

தமிழகத்தில் ஒரு தனி நபர் உணவகத்திற்கு செல்லும் போது ரூ. 845 சிலவு செய்கிறார். ஆனால் டோல் கட்ட, மற்ற வரிகள் கட்ட நேரும் போது மத்திய அரசு ரத்தத்தை உறிஞ்சுகிறது கும்பி எரிகிறது குடல் காய்கிறது என்றும் கூக்குரல் இடுவார்கள்.


N Sasikumar Yadhav
செப் 26, 2024 12:03

தமிழகத்தில் பிரியாணி வியாபாரம் அமோகம் அதுபோல கருத்தரிப்பு மைய வியாபாரமும் அமோகம் அரசு கடைகளில் சாராய வியாபாரம் எல்லாவற்றையும்விட அமோகம்


gopi
செப் 26, 2024 07:58

மருத்துவமனைகள் கொண்டாட்டம்


S BASKAR
செப் 26, 2024 07:35

அப்படின்னா Gst வருவாயில் பிரியாணியின் பங்கு முக்கியமானது


சாம்
செப் 26, 2024 06:16

நாய் பூனை காக்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை