கடலுார்: கடலுாரில் நர்சிங் இன்ஸ்டியூட்டில், சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட தம்பதி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன்,55; இவரது மனைவி உமா மகேஸ்வரி, 40; புதுப்பாளையத்தில் எஸ்.ஐ.டி., நர்சிங் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் நர்சிங் கல்லுாரி நடத்தினர். இங்கு, கருக்கலைப்புக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகள் வைத்திருப்பதாக சுகாதாரத் துறை இணை இயக்குனர் மணிமேகலை, கடலுார் புதுநகர் போலீசில் புகார் அளித்தார். கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார், இணை இயக்குனர் மணிமேகலை, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் சிவ குருநாதனின் நர்சிங் இன்ஸ்டியூட்டில் நேற்று சோதனை நடத்தியதில், கருக்கலைப்பு சாதனங்கள், மாத்திரைகள், ஊசிகள் இருந்ததை கைப்பற்றி விசார ணை நடத்தினர். இதில், சிவகுருநாதன், உமா மகேஸ்வரி மருத்துவம் படிக்காமல் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதற்கு உடந்தையாக பண்ருட்டி, வைடிப்பாக்கம் மூர்த்தி,37; விருத்தாசலம் கார்மாங்குடி வீரமணி,36; நெல்லிக்குப்பம் அபியால்,50; கடலுார் அடுத்த பெரிய காரைக்காடு தங்கம்,43; ஆகியோர் இருந்ததும் தெரிந்தது. புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, சிவகுருநாதன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இது குறித்து எஸ்.பி.,ஜெயக்குமார் கூறுகையில், 'சிவகுருநாதன் பி.எஸ்சி., அக்ரி படித்தவர். டில்லியில் சித்தா படித்துவிட்டு, நர்சிங் இன்ஸ்டியூட் நடத்துவதாக கூறி, சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, சிவகுருநாதன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இது குறித்து எஸ்.பி.,ஜெயக்குமார் கூறுகையில், 'சிவகுருநாதன் பி.எஸ்சி., அக்ரி படித்தவர். டில்லியில் சித்தா படித்துவிட்டு, நர்சிங் இன்ஸ்டியூட் நடத்துவதாக கூறி, சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரிந்தது.அவரது மனைவி உமா மகேஸ்வரி நர்சிங் படித்தவர். மருந்து விற்பனை பிரதிநிதியாக மூர்த்தி பணியாற்றினார். வீரமணி விருத்தாசலத்தில் வி.ஐ.டி., நர்சிங் இன்ஸ்டியூட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தினார். அபியால் காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாகவும், தங்கம் அங்கேயே மருந்தாளுனராகவும் பணபுரிகின்றனர். மருத்துவ துறையோடு தொடர்புடைய 6 பேரும் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
தலைநகரிலேயே சட்ட விரோதம்
கடலுார் மாவட்டத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக இதுவரை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான விருத்தாசலம், மங்களூர், ராமநத்தம் பகுதிகளிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது மாவட்டத்தின் தலைநகரில், போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே சட்ட விரோத கருக்கலைப்பு நடந்தது. அங்கு பல பேருக்கு கருக்கலைப்பு நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதான இடத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு நடந்திருந்தும், சுகாதாரம் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த யாருக்கும் தெரியாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.