உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 68,321 பூத் செயலர்கள் த.வெ.க.,வில் நியமனம்?

68,321 பூத் செயலர்கள் த.வெ.க.,வில் நியமனம்?

சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், த.வெ.க.,வில், 68,321 பூத் செயலர்களை நியமிக்க, அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.அக்கட்சிக்கு 120 மாவட்ட செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 95 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கான தேர்தல் வியூகத்தை, பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் வகுத்துத் தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விஜயுடன், அவர் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தல் வியூக கட்டணம் தொடர்பாக, மூன்று இலக்கத்தில் பெரிய தொகை, கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட அலுவலகம் ஆகியவற்றை, பிரசாந்த் கிஷோர் கேட்டுள்ளார். இது விஜய் பரிசீலனையில் உள்ளது.மேலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி அடிப்படை கட்டமைப்பு முழுமையாக இல்லை. எனவே, பூத் வாரியாக செயலர்களை நியமிக்க வேண்டும். அதன் பின்னரே, தேர்தல் வியூக பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும் என, விஜயிடம் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அவரது பரிந்துரைப்படி, 68,321 பூத் செயலர்களை நியமிக்க, மாவட்ட செயலர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அசோகன்
பிப் 14, 2025 17:46

இது திமுகவின் பி டீம்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 14, 2025 14:33

இவ்வளவு செலவு செய்து மெனகெடுவது மக்கள் பணி செய்வதற்கா? அல்லது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தனக்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு பதிலடி தரவா ???


Anbuselvan
பிப் 14, 2025 13:44

எப்போதுமே தலைவருக்கான தேர்தலை முதல் முறை சந்திக்கும் தொண்டர்கள் பணத்துக்காகவோ அல்லது வசதிக்காகவோ வேலை செய்ய மாட்டார்கள். அவர்கள் பணத்தை தலைவருக்காக செலவு செய்வார்கள். வளர்ந்த பிறகு தலைவர் செலவு செய்ய வேண்டும் என நினைப்பார்கள்


ஆரூர் ரங்
பிப் 14, 2025 10:56

வாங்கும் கட்டணத்தில் பிரசாந்த் தனது ஊரிலிருந்தே ஆட்களை பூத் ஏஜெண்ட்டாக கொண்டு வந்து தரலாம். சீப்பா முடியும். இங்க தினம் தினம் சரக்கு பிரியாணி பிளஸ் ஆயிரம் கேட்பாங்க. கட்டுப்படியாகாது.


Krish Sankaran
பிப் 14, 2025 06:44

68321 வெட்டிப் பயலுக கட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை