உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2ம் வகுப்பு பாடத்தை கூட வாசிக்க தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்!: தமிழகத்தில் ஆரம்ப கல்வியின் தரம் குறித்த பகீர் தகவல்

2ம் வகுப்பு பாடத்தை கூட வாசிக்க தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்!: தமிழகத்தில் ஆரம்ப கல்வியின் தரம் குறித்த பகீர் தகவல்

தமிழக கிராமங்களில், எட்டாம்ம் வகுப்பு மாணவர்களில், 64 சதவீதம் பேரும், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 35 சதவீதம் பேரும், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிரதம் அறக்கட்டளை' என்ற அமைப்பு நடத்திய, நாட்டின் கல்வி நிலை குறித்த, 'ஏசெர்' அறிக்கை, நேற்று முன்தினம் டில்லியில் வெளியிடப்பட்டது. அதில், மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக, கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும், 30 மாவட்டங்களைச் சேர்ந்த, 876 கிராமங்களில், மூன்று முதல், 16 வயது வரையுள்ள, 28,984 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுஉள்ளது. அதில், தமிழகத்தின் தற்போதைய துவக்கக்கல்வி நிலை, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மாநிலங்களை விட சரிந்தும், கர்நாடகா, தெலுங்கானாவை விட உயர்ந்தும் உள்ளது.

'ஸ்மார்ட் போன்'

கொரோனா தொற்று பரவலின் போது, 'ஸ்மார்ட் போன்' வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டது. அதன் வாயிலாக, 14 முதல், 16 வயதுடையோரில், 90 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரிந்தவர்களாக உள்ளனர்.தேசிய அளவிலும், இதே சதவீதம் தான் உள்ளது. அத்துடன், 'ஆன்லைன்' பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்தவர்களாகவும் மாணவர்கள் உள்ளனர். மற்றவர்களை விட, சமூக ஊடக கணக்குகளை முடக்குவது, ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது குறித்த புரிதலும் உள்ளது. அதேநேரம், ஸ்மார்ட் போனை கல்விக்காக பயன்படுத்துவதில், மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளனர்.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 5- முதல், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கே சென்று இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.அதில், முதல் வகுப்பு மாணவர்களில், 43.4 சதவீதம்; இரண்டாம் வகுப்பு மாணவர்களில், 16.9 சதவீதம்; மூன்றாம் வகுப்பு மாணவர்களில், 8.6 சதவீதம் பேருக்கு, ஒரு எழுத்தை கூட வாசிக்க தெரியவில்லை.

வாசிப்பு திறன்

மேலும், மூன்றாம் வகுப்பில், 24.8 சதவீதம்; நான்காம் வகுப்பில், 30 சதவீதம்; ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், 34 சதவீதம் பேரால், முதல் வகுப்பு பாடப்புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை.அதேபோல, ஐந்தாம் வகுப்பில், 35 சதவீதம்; 6ம் வகுப்பில் 45; ஏழாம் வகுப்பில் 56; எட்டாம் வகுப்பில் 64 சதவீதம் மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை கூட வாசிக்க தெரியவில்லை. அத்துடன், 2018ம் ஆண்டு 2.3; 2022ல், 1.9; 2024ல் 1.8 சதவீதம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.கல்வியில் பின் தங்கியவர்கள் சதவீத விபரம்:* 2ம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வாசிக்க தெரியாத, 5ம் வகுப்பு மாணவர்கள், 35 சதவீதம்* எழுத்துக்களை அறியாத, 3ம் வகுப்பு மாணவர்கள், 8.6 சதவீதம்* எழுத்து தெரிந்தும் சேர்த்து படிக்க தெரியாத மாணவர்கள், 18.2 சதவீதம்* அர்த்தம் புரியாமல் படிப்போர், 36.3 சதவீதம்* முதல் வகுப்பில் 32; இரண்டாம் வகுப்பில் 10.5; மூன்றாம் வகுப்பில் 5.9 சதவீதம் பேருக்கு எண்கள் தெரியவில்லைவாசிக்க தெரிந்த மாணவர்கள் சதவீதம்* 2ம் வகுப்பு பாடத்தை படிக்க முடிந்த 3ம் வகுப்பு மாணவர்கள்2018/2022/202411.6/4.7/13.2------------* 2ம் வகுப்பு பாடத்தை படிக்கத் தெரிந்த 5ம் வகுப்பு மாணவர்கள்2018/2022/202446.3/26.0/37.0-----------வாசிப்பு திறன் நிலவரம்வகுப்பு/எழுத்து தெரியாதவர்கள்/ தெரிந்தவர்கள்/ வார்த்தைகளை படிக்க தெரியாதவர்கள் /ஒன்றாம் வகுப்பு பாடத்தை வாசிக்க தெரியாதவர்கள் / 2ம் வகுப்பு பாடத்தை வாசிக்க தெரியாதவர்கள்/ 1/43.4/38.2/15.02/.2/1.2/2/16.9/32.4/36.0/24.8/12.03/8.6/18.2/36.3/24.8/12.0/4/3.4/10.2/31.2/330.7/24.55/2.9/6.0/20.6/34.8/35.0/6/1.7/4.4/16.5/32.1/45.3/7/1.6/2.7/11.8/27.8/56.1/8/0.4/1.9/9.5/24.0/64.2/***

இலக்கை அடைவோம்கொரோனா காலத்தில், பள்ளியில் சேர்ந்து வகுப்புக்கு செல்லாதவர்களுக்கு, பள்ளி சூழலை உருவாக்கவே, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை செயல்படுத்தினோம்.தற்போது வரை, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் வாயிலாக அடிப்படை எண், எழுத்து, வாசிப்பு, கணக்கு பயிற்சிகளை, பயிற்சி குறிப்பேடுகளின் வாயிலாக, பயிற்சி அளிக்கிறோம்.கல்வி, மற்ற திட்டங்களை போன்றது அல்ல. அது, விதை போட்டு செடி வளர்ப்பது போன்றது. தேசிய இலக்கை விட, தமிழக குழந்தைகள் முன்னேறும் வகையில் தொடர் பயிற்சி அளிக்கிறோம்.- ஆர்த்தி,மாநில இயக்குனர்,தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்டம். - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

subramanian
ஜன 31, 2025 20:47

திருட்டு விடியா மாடல் ஓங்கோல் வந்தேறி , தமிழ் தமிழ் னு கூவுவார். தமிழை அழிப்பது இவர்களின் நோக்கம்.


அப்பாவி
ஜன 31, 2025 17:40

படிக்கிறவன் படிச்சிட்டுதான் இருக்கான்.


அருணாசலம்
ஜன 31, 2025 21:13

கல்வியில் தரம் குறைந்த நிலை உள்ளது என்று செய்தி. படிக்கிறவன் படிச்சிட்டு இருக்கான். அறிவாளியின் கருத்து. அட..தூ


Saai Sundharamurthy AVK
ஜன 31, 2025 16:21

இடஒதுக்கீது தான் மிக முக்கிய காரணம். நன்கு படித்து நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்களால் மட்டுமே தரமான கல்வி கற்பிக்க முடியும். வேலையில் திறமையுடன் சாதிக்க முடியும். இட ஒதுக்கீட்டினால் சுதந்திரம் பறி போய் விடுகிறது. சட்டங்கள் குறுக்கே நிற்கும். குப்பையுடன் ஒரு குப்பையாக மட்டுமே இருக்க முடியும். தமிழ்நாடும், தமிழக அரசாங்கமும் சரியாக இயங்க முடியாது. அந்த காலத்தில் ஒரு பொன்மொழி சொல்வார்கள். அறிவுபலம் இல்லாத அரசாங்க ஊழியர்களால் நாட்டை சரியான முறையில் நிர்வகிக்க முடியாது என்று.....! தனியார் நிறுவனங்களைப் பாருங்கள் !!!! படிப்பறிவு, தெளிவு மற்றும் வேலை திறன் இல்லாதவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அமெரிக்கா இன்று உயர்ந்து நிற்கிறது என்றால் அங்கு இடஒதுக்கீடு என்கிற மோசமான கொள்கையை அவர்கள் பின்பற்றுவதில்லை.


Ram
ஜன 31, 2025 14:46

தகுதி இல்லாதவர்கள் ஆசிரியர்கள் ஆனாதினால் மட்டுமே இன்று இந்த நிலமை 37000 பேர் தாய் மொழி தமிழில் தோல்வி ஆன காரணமும் இது தான். ஆயிரம் காரணம் சொல்லி மடை மாற்றினாலும் தகுதிதான் முக்கியம் அது இல்லாத எதுவுமே சரிவராது. தகுதி இல்லாதவர்களை வேலை வழங்கி ஆதரிக்கும் சட்டம் நாட்டை சுடுகாடாக மாற்றும்.


lana
ஜன 31, 2025 14:24

அகில உலக துணை நடிகர் சங்க தலைவன் எல்லாம் முந்திரி ஆக இருக்கும் போது இது தான் நடக்கும்


Ramesh Sargam
ஜன 31, 2025 12:35

ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுப்பதையே சரியாக படிக்கத்தெரியாத முதல்வர் இருக்கும் மாநிலத்தில், இது ஒன்றும் ஆச்சர்யமான விஷயமில்லை. மன்னன் எவ்வழி, மாணவர்கள் அவ்வழி. இது புதுமொழி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 31, 2025 12:15

நல்ல வேளை எம்பிபிஎஸ் படிப்புக்கு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு கொண்டு வந்தது. மதிப்பிற்குரிய மாண்புமிகு உலகப் பொருளாதார மேதை திருமதி சோனியா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரு.சிதம்பரம் அவர்களின் மனைவி திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நீட்டுக்காக வாதாடி நீட் வாங்கி கொடுத்தார்கள். இல்லை என்றால் யோசித்து பாருங்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் படிக்க திணறினால் நோயாளின் நிலைமை என்னவாகி இருக்கும்.


ஆரூர் ரங்
ஜன 31, 2025 10:23

துண்டுச் சீட்டில் எழுதிப் படிக்கவைக்க முயற்சிக்கலாமே. முதல் பதவிக்கு முன்னேற முதல் தகுதி கிடைத்துவிடும்.


குமரன்
ஜன 31, 2025 09:50

அரசின் மெத்தனபோக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்று சொன்னாலும் பல ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தொழிலைவிட ரியல் எஸ்டேட் வட்டி கொடுக்கல் வாங்கல் என்று நேரம் போதவில்லை இதில் மாணவர்களை கண்டித்தால் பெற்றோர்கள புகார் விசாரணை ஆர்ப்பாட்டம் அமளி துமளி


Balasubramanian
ஜன 31, 2025 05:22

தமிழ் தேவை இல்லை போய்யா! அது காட்டு மிராண்டி பாஷை என்று சொன்னவர் கொண்டாட பட்டு சிலை எடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினால் இதுவும் நடக்கும்


முக்கிய வீடியோ