உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பணம் வாங்கி கொண்டு பதவி; விஜய் கட்சியில் கிளம்பும் பூதம்

பணம் வாங்கி கொண்டு பதவி; விஜய் கட்சியில் கிளம்பும் பூதம்

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தில், கோவை கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகி ஒருவர், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, மாவட்ட பொறுப்பு கொடுத்திருப்பதாக, கலகக்குரல் கிளம்பியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின், கொங்கு மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், கோவையில் சமீபத்தில் நடந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, கட்சியினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் இருக்காது. ஊழல் செய்ய விடவும் மாட்டோம்' என முழங்கினார். கோவை மாவட்டத்தில் கட்சி ரீதியாக கோவை மாநகர், தெற்கு, கிழக்கு, புறநகர் கிழக்கு, புறநகர் வடக்கு ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், கிழக்கு மாவட்டத்தில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவி கொடுக்காமல், மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக, தலைமைக்கு புகார்கள் சென்றிருக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறியதாவது: கட்சிக்காக வேலை செய்வோருக்கு பதவி வழங்க, தலைமை அறிவுறுத்தல் வழங்கியது. ஆனால், கோவை கிழக்கு மாவட்டத்தில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்கவில்லை. கட்சி மாறி வந்தவர்கள் சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகி ஒருவர், தன்னிச்சையாக செயல்பட்டு இந்தக் காரியத்தை செய்திருக்கிறார். அதற்காக பணம் பெற்று இருப்பதாக சொல்கின்றனர். கட்சியில் சேர்ந்து இரண்டு மாதமே ஆன ஒரு பெண்ணுக்கு, மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதியைச் சேர்ந்த சிலருக்கு, கிழக்கு மாவட்டத்தில் பொறுப்பு வழங்கி உள்ளனர். இது தொடர்பாக, கட்சி தலைமைக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பினோம். விசாரணை குழு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இதனால், கட்சியில் இருப்போர் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகம் முழுதும் இப்படி பல இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. இதுகுறித்து, கட்சித் தலைவர் விஜய் தீவிரமாக விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விசாரித்தபின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

த.வெ.க.,வில் ஒழுங்கு நடவடிக்கை குழு

த.வெ.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: கட்சி விதிகளின்படி, த.வெ.க., தலைவர் விஜய், தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவராக செயல்படுவார். பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலர் விஜயலட்சுமி ஆகியோர், தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். த.வெ.க., நிர்வாகிகள், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் மீது இக்குழு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
மே 01, 2025 21:56

நான் ஒன்னும் யோக்கியன் இல்லை. எல்லா கட்சியிலும் இப்படித்தான் செய்கிறார்கள்.


ராமகிருஷ்ணன்
மே 01, 2025 14:19

ஊழல் பற்றி பேசும் போதே விஜய்க்கு சிரிப்பு வந்திருக்கும். கழக களவாணிகள் நிறைந்த தமிழகத்தில் ஊழல்களில் ஊறி சுபிட்சமாக வாழும் திமுக, அதிமுகவினரை பார்த்து TVK க்கு வந்துள்ளவர்கள் நிச்சயம் ஊழல் செய்யாமல் இருக்கவே முடியாது.


தொளபதி
மே 01, 2025 10:26

எல்லா கட்சிகளிலும் ஆட்சியை பிடித்த பின்பு தான் பதவிக்காக, ஓட்டுக்காக என பணம் புகுந்து விளையாடும். ஆனால் எங்கள் தாவெக எப்போதும் அட்வான்ஸ்டு தான். சினிமாவில இருக்கிறப்பவே அவர் தான் நம்பர் ஒன் என்று பில்டப் கொடுக்க பலவழிகளிலும் பணம் செலவழிக்கப்பட்டது. இப்போது கட்சி ஆரம்பித்ததும் கீழ் மட்டத்துலயே இப்படின்னா ஆட்சியை மட்டும் கொடுத்து பாருங்க. இரு கழகங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டு எங்கயோ போய் விடுவோம். எதிலயுமே நாங்க தான் நம்பர் ஒன்.


கண்ணன்
மே 01, 2025 10:17

இவர்கள் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்…!


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 01, 2025 09:34

தவெக திமுக பெற்றெடுத்த குழந்தை. இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். 2026 தேர்தல் அதற்கு பின் 2029 பாராளுமன்ற தேர்தல் பின்னர் கமல்ஹாசன் திமுகவின் திருவடி நிழலில் இளைபாருவது போல் ஜோசப் விஜய் திமுகவின் மலரடி நிழலில் அமைதியாக உறங்க சென்று விடுவார். யாரும் ஏமாந்து போக வேண்டாம். வேண்டுமானால் தவெகவில் இருந்து எவ்வளவு தேற்ற முடியுமோ அவ்வளவு தேற்றி கொள்ளலாம்.


அப்பாவி
மே 01, 2025 09:32

தப்பே இல்லை. பா.ஜ வுக்கு 10600 கோடி நன்கொடையா கிடைச்சிருக்காம். அவ்ளோ பணத்தை கார்பரேட்கள் சும்மா தூக்கி குடுத்துருவாங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை