உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓய்வுபெறும் ஆசிரியர்களிடம் பேக்கேஜ் வசூல் முறையா? கல்வித்துறையில் கதறல்

ஓய்வுபெறும் ஆசிரியர்களிடம் பேக்கேஜ் வசூல் முறையா? கல்வித்துறையில் கதறல்

மதுரை : கல்வித்துறையில் ஓய்வு, விருப்ப ஓய்வு பெறும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்கள் பணப் பலன்களை பெறும்போது ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப 'பேக்கேஜ்' முறையில் அலுவலகங்களில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.இக்கல்வியாண்டில் கல்வித்துறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இத்துறையில் மட்டுமே கல்வியாண்டிற்கு இடையே ஓய்வு பெற்றாலும் ஆசிரியர் உபரி இல்லாத நிலையில் கல்வியாண்டு முடியும் வரை பணியில் நீடிக்கலாம். அதற்கான முழு சம்பளமும் வழங்கப்படும்.ஓய்வு பெறுவோர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்தால் அவர்களின் ஜி.பி.எப்.,பை நிறைவு செய்வது, பணிக்கொடை, சிறப்பு பி.எப்., ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு கணக்கீடு ஆவணங்கள் தயாரிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் 6 ஆவணங்கள் தயாரிக்க வேண்டும். இவ்வகை ஆவணங்களை வட்டார (தொடக்க), மாவட்ட (இடைநிலை) கல்வி அலுவலர்கள் உரிய நேரத்தில் தயாரித்து சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் பணப்பலன் சரியான நேரத்தில் கிடைக்கும். ஆனால் பணப் பலன் வழங்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிலர் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை 'பேக்கேஜ்' போல் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். இல்லையென்றால் பணப் பலன் கிடைப்பதை மாதக்கணக்கில் இழுத்தடிப்பதாக மதுரை உட்பட பல மாவட்டங்களில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயலாளர், இயக்குநர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளன.ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஓய்வு பெறுவோர் பணப் பலன்களை பெறுவதற்குள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக 'பேக்கேஜ்' வசூல் தொடக்க கல்வி அலுவலங்களில் அதிகம் உள்ளன. மாநிலத்தில் மின்துறையில் மட்டும் ஓய்வு பெறும் நாளில் அவர்களுக்கு பணப் பலன்களை ஒரே நாளில் வழங்கப்படுகின்றன. கல்வித்துறையிலும் அதுபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.பணப் பலன் வழங்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிலர் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை 'பேக்கேஜ்' போல் நிர்ணயித்து வசூலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subramanian an
மே 01, 2024 21:07

ஆண்டு காலம் நல்ல முறையில் பணி செய்து ஓய்வு காலப் பலன் பெற தண்டம் கட்ட வேண்டிய இழி நிலை கண்டிக்கப்பட வேண்டியது மட்டும் அல்ல பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் இதில் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மன நிலை மாற வேண்டும்


Sundar Jiju
ஏப் 30, 2024 22:28

பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமல்ல, கல்லூரிக் கல்வித் துறையில் நடப்பது கொடுமையிலும் கொடுமை குறிப்பாக திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் நடப்பதோ பகல் கொள்ளை


R KUMAR
ஏப் 29, 2024 15:34

இதுபோன்ற செயல்பாடுகள் கல்வித்துறையில் மட்டுமல்ல, அனைத்து தமிழக அரசின் துறைகளிலும் உள்ளது ஊதியக்குழுவினால் திருத்தப்பட்ட ஊதிய நிர்ணயம் பரிந்துரை ஆணை வழங்கப்படும் நிலைகளில், நிலுவைத் தொகையைப்பெற ஒரு அலுவலகத்தில் நேரடியாக பேரம் பேசியதையும், டி சி ஆர் ஜி தொகைபெற கருவூல அலுவலகங்களில் லஞ்சம் அளிக்காமல் தொகைபெற இயலாது இது உண்மை


Krishnan
ஏப் 28, 2024 10:22

பண பலன் பெற தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் இதற்கு உடந்தையாக பள்ளி தாளாளர்களும் கல்வி துறை அதிகாரியும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர்


ரிஷி கௌதம்
ஏப் 27, 2024 21:22

60 வயதில் இவர்களால் எந்த ஆசிரியப் பணியும் செய்ய முடியாது இந்த நிலையில் மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு என்பது கொஞ்சம் கூட நியாயமில்லை... பணம் கொடுத்தால் எல்லாமே இங்கு சாத்தியமே. பாதிப்பது ஏழை அப்பாவி மாணவர்கள் மட்டுமே...


தமிழ்வேள்
ஏப் 27, 2024 11:21

திமுகவை கண்மூடித்தனமாக ஆதரித்து , தேர்தலில் ஊழல்கள் செய்ய உறுதுணையாக இருந்து , மாணவ சமூகத்தில் ஒழுக்கம் தர்மம் ஆகியவற்றை கெடுத்து , தகுதிக்கு மேலாக உழைக்காமல் ஊதியம் பெறும் வாத்தியார் சமூகம் , அந்த காசில் கொஞ்சத்தை திமுக கும்பலுக்கும் கொடுப்பதில் என்ன தயக்கம் ?


Kumar
ஏப் 28, 2024 10:21

அரசு ஆசிரியர்கள் தண்ட சம்பளம் வாங்குகிறார்கள் என்று தான் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது ஒரே இடத்தில் பணி செய்ய, இட மாறுதல் பெற, பதவி உயர்வு பெற என்று லஞ்சம் கொடுத்து முன்னேறிவிட்டது பிறகு ஓய்வு பெறும்போது வாங்கப்போகும்பணப் பலனுக்கும் பசகஜ் கொடுத்தால் தவறே இல்லை என்பது மக்கள் கருத்து எந்த பொது மக்களும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்த போதும் மக்கள் ஒருவர் கூட ஆதரவு தரவில்லை அரசு கல்வி தரம் அந்த அளவு இருக்கிறது அதிக பட்சம் பதினைந்து விழுக்காடு ஆசிரியர்கள் மட்டுமே வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக உழைத்து இருப்பார்கள்


சசி
ஏப் 27, 2024 08:41

திராவிடமாடல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரனம்ப்பா!!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை