உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்டாயமாகிறது லைசென்சுடன் ஆதார் இணைப்பு

கட்டாயமாகிறது லைசென்சுடன் ஆதார் இணைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'டிரைவிங் லைசென்ஸ்' மற்றும் வாகனப்பதிவு சான்றிதழுடன், ஆதார் முகவரி, மொபைல் போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.'சாரதி' மற்றும் 'வாஹன்' இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழான ஆர்.சி., தரவுகள், 10 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்டவையாக உள்ளன. பலவற்றில் ஆதார் எண்களோ, மொபைல் போன் எண்களோ முழுமையாக இல்லை. இதனால், அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது.வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகம் வைத்திருப்பவர்கள், அவற்றில் உள்ள முகவரியை, ஆதார் எண் மற்றும் மொபைல் போன் எண் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.'சாலை விதிமுறைகளை மீறியதாக அனுப்பப்பட்ட மின்னணு சலான்கள் பலவும் நிலுவையில் உள்ளதால், அபராதம் வசூலாகாமல் உள்ளது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

nb
பிப் 17, 2025 18:24

இப்படி தான் வாக்காளர் அட்டை ஆதார் இனணச்சாங்க...ஒரு பிரயோஜனமும் இல்ல


மணிமொழி
பிப் 17, 2025 16:00

தொப்புள் கொடியோட ஆதாரை இணைச்சுடுங்க.


வாக்காளன் பாரதம்
பிப் 17, 2025 12:57

அப்படியே வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும்... அதிக போலி ஒட்டு திராவிடம் பேசுபவர்களிடம் உள்ளது. இரட்டை ஒட்டு, கள்ள ஒட்டுக்களை மொத்தமாக தடுக்க முடியும்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 17, 2025 16:50

அப்படியே போலி ஆதார் அட்டையுடன் போலி வாக்காளர் அட்டையையும் இணைக்க வேண்டும்


RAJA
பிப் 17, 2025 12:45

ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் இவர்கள் சென்ற முறை ஆதார் கார்டுடன் பேன் கார்டை இணைக்கச் சொல்லி அலைக்கழித்தனர் இப்போது புதியதாக ஒரு அலைக்கழிப்பு. மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.


Ramesh Sargam
பிப் 17, 2025 12:27

அப்படிப்பட்ட இணைப்பை வீட்டிலிருந்தே அல்லது மொபைல் போன் மூலம் இணைய வசதி உள்ளவர்கள் செய்துகொள்ளும்படி ஒரு வசதியை சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் செய்யவேண்டும். போக்குவரத்து அலுவலகத்து சென்று, அங்கு ஒரு நீண்ட வரிசையில் நின்று, லஞ்சம் கொடுத்து செய்யும்படியாக செய்துவிடாதீர்கள். மேலும் இடைத்தரகர்கள் கையில் சிக்காமல் மக்களை காப்பாற்றுங்கள்.


டிரைவர்ராமுடு
பிப் 17, 2025 10:50

அடப்பாவிங்களா. டிரைவிங் லைசன்ஸ் குடுக்கும் போதே ஆதார் கேட்டு வாங்குறீங்களே. இனிமே ஆதார் குடுக்கறதுக்கு டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம்னு சொல்லுவீங்க போலிருக்கே..


நிக்கோல்தாம்சன்
பிப் 17, 2025 05:46

அடப்பாவிகளா அப்போ கட்சி கொடி கட்டுவதற்கும் ஆதார் இணைப்பு வேண்டுமா ?


முக்கிய வீடியோ