உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை; உள்துறை செயலருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை; உள்துறை செயலருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் படி, தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந் தவர் எஸ்.பிரமீளா. இவர், ஜார்ஜ் டவுன் இரண்டாவது சந்து பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gi2w3n0h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆக்கிரமிப்புகள்

இந்த வழக்கை விசா ரித்த உயர் நீதிமன்றம், சாலை ஆக்கிரமிப்பை ஆறு மாதங்களுக்குள் அகற்றும்படி, கடந் தாண்டு மார்ச் 5ல் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றவில்லை என, பிரமீளா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி கள் எஸ்.எம்.சுப்பிரம ணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனு தாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பி ரமணியன் ஆஜராகி, 'நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.“எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என்றார்.அப்போது, மாநக ராட்சி தரப்பில், 'ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஐந்து முறை போலீசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்காததால், ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டது. அதற்கு போலீசார் தரப்பில், 'மாநகராட்சி தரப்பில் எழுதப்பட்ட கடிதம் தெளிவாக இல்லை' என, பதில் அளிக்கப் பட்டது.

ஒழுங்கு நடவடிக்கை

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசின் இரு துறை களுக்கு இடையே ஒத் துழைப்பு இல்லாமல் இருந்தால், அது பொது மக்களை பாதிக்கும். அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல் படுவது என்பது நிர்வா கத்தின் அடிப்படை. எனவே, இந்த வழக்கில் உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோரை தாமாக முன்வந்து இணைக்கிறோம்.நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகளை நிறைவேற்றாத அதி காரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டது குறித்து, அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும். ஜனவரி 5ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
டிச 10, 2025 20:47

இது வரைய்ய இல்லாத அளவிற்கு மோசமான குரூர ஆட்சி தான் இப்போ நடக்குது. திருப்பரம்குன்றத்து முருக பெருமான் தண்டனை வழங்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். சில தெய்வங்க்ளின் தண்டனை படு மோசமான விளைவுகள் கொடுக்கும். சுப்ரமணியரும் ஒருவர். மற்ற கடவுளர்களிடம் செய்யும் சேட்டையை இவருடன் விளையாடினால் மன்னிப்பு என்பதே கிடையாது. தண்டனை அனுபவிக்க தான் வேண்டி இருக்கும்.


Barakat Ali
டிச 10, 2025 20:24

அனைத்துத் துறைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் .......


M Ramachandran
டிச 10, 2025 17:47

ஆட்சியாளர்களிடம் இருந்து எந்த வாய் மொழி உத்தரவு வந்தாலும் IAS /டிப்ஸ் /IPS க்கள் நடவடிக்கை எடுக்க கூடாது. எழுத்து மூலம் தான் உத்தரவு வர வேண்டும் என்று அரசியல் சாசனம் மாற்ற பட வேண்டும். எல்லாம் சரியாக திருட்டு கும்பல் கும்முடி பூண்டி தாண்டி ஆந்திராவுக்கு அரசியலை விட்டு ஓடும்.


Sivak
டிச 10, 2025 14:46

முதல்ல ஆக்ரமிப்பு வழக்குல நீதிமன்ற உத்தரவு .. மதிக்கல.. அதுக்கப்பறம் திருப்பவும் வழக்கு ... நீதி மன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவு.. இதையும் மதிக்கலைன்னா என்ன செய்வாங்க ?? வழக்கு தொடுக்கறதும் வேஸ்ட் அதுக்கு ஒரு நீதிமன்ற தீர்ப்பும் வேஸ்ட் ....


surya krishna
டிச 10, 2025 14:39

இந்துக்கள் இழிச்சவர்கள் என்று நினைத்துக் கொண்டு எப்படி அவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு சிறுபான்மையினரை திருப்திப்படுத்த அவர்களின் ஓட்டு பிச்சைக்கு ஓட்டு பிச்சைக்காக எந்த அளவுக்கு திராவிட திருட்டு கட்சி செல்கிறது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ஓர் இந்து ஓட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது. இதுக்கும் இதற்கு மேலேயும் இந்துக்கள் திமுக கட்சி கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் நம்மளை விட மானங்கெட்டவர்கள் பைத்தியக்காரர்கள் இளிச்சவாயர்கள் யாரும் இல்லை


cpv s
டிச 10, 2025 12:52

government must be dismissed using by 356 articals if not implement court order


S Lakshmana Kumar
டிச 10, 2025 11:52

இப்போ இந்த அதிகாரிகளுக்கு தண்டனை கிடைத்தவுடன் திமுக கட்சியில் இருந்து படியளக்குமா? கையும் களவுமாக சிக்கியுள்ளார்கள். நீதிமன்றம் சும்மா விடாது. காரணம் நீதிமன்ரத்தின் ஆன்மாவை ஆட்டி பார்த்திருப்பதன் காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை நிச்சயமாக இருக்கும்.


சிந்தனை
டிச 10, 2025 10:26

அருமை அருமை


Gopal
டிச 10, 2025 09:07

The utter disregard of High Court order by TN Govt is highly deplorable. They do not have any intention of showing a due care for the welfare of the people.


VENKATASUBRAMANIAN
டிச 10, 2025 08:20

இது நாட்டுக்கு நல்லதல்ல. நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும். இதற்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை