உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் உச்சகட்டம்

அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் உச்சகட்டம்

சில தினங்களுக்கு முன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சில கருத்துகளை தெரிவிக்க, பதிலுக்கு அண்ணாமலை அவரை கடுமையான சொற்களால் சாடினார்.அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.அண்ணாமலையை கண்டித்து, மதுரை, சிவகங்கை உட்பட சில இடங்களில், அவரது உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர். இரு கட்சி தலைமைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல், நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இது நேற்று, இரு கட்சி தலைவர்கள் பேட்டி மற்றும் அறிக்கையில் வெளிப்பட்டது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:

அ.தி.மு.க., குறித்து பேச, அண்ணாமலைக்கு தகுதி கிடையாது. அ.தி.மு.க.,வை ஒழிக்க, விட்டில் பூச்சியான அண்ணாமலையால் முடியாது. அ.தி.மு.க.,வை தொட்டவர்கள் கெட்டுப் போவர் என்பது வரலாறு.அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளார். முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ளார். இருவரும் என்ன பேசப் போகின்றனர் எனத் தெரியவில்லை. அண்ணாமலை ஒரு கம்பெனி மேலாளர். பழனிசாமி பெரிய கட்சியின் பொதுச் செயலர். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி பகல் கனவு. அடுத்த தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ., கூட வெற்றி பெற முடியாது.

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன்:

அ.தி.மு.க., நான்காக சிதறியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாமல், தொண்டர்கள் பரிதவித்து வருகின்றனர். பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக, மக்கள் ஏற்கவில்லை. அ.தி.மு.க.,வினர் மீதான ஊழல் வழக்குகளை, ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில் அடுக்குவோம். பழனிசாமி மீதுள்ள வழக்குகளை விரைவுபடுத்த, நீதிமன்றங்களை நாடுவோம்.உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை, நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம். ஜெயலலிதாவின் லட்சியங்களை செயல்படுத்தும் இயக்கம் பா.ஜ.,தான் என்று, அ.தி.மு.க., தொண்டர்கள் நினைக்கத் துவங்கி விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Thanjavur K. Mani
ஆக 30, 2024 07:37

அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையைப்பற்றி பேசலாம். ஆனால், அண்ணாமலை அதிமுக பற்றி பேசக்கூடாது என்பது எந்த விதத்ததில் நியாயம் என்று தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. ஏன் இந்த ஒரு வழி சாலை முறையை பின்பற்றவேண்டும்.


Almighty
ஆக 28, 2024 23:27

பழனிச்சாமி அதிமுகவை பிடித்த சனி. ஆமை புகுந்த வீடும், எடப்பாடி பெறும் பதவியும் ஒன்று. இரண்டுமே காலப்போக்கில் கரைத்து போகும்.


அனுஷா
ஆக 28, 2024 18:38

நல்லா அடுச்சிக்கோங்க. ரெண்டு பக்கமும் தலைமை சரியில்லை.


Rajah
ஆக 28, 2024 16:31

எம்ஜிஆர் மரணத்துடன் அதிமுக மரணித்து விட்டது. அதன் பின்னர் கொள்ளையர்கள் கையில் சிக்கி விட்டது. மாறி மாறி கொள்ளைக் கூட்டத்திடமும் விஞ்சானக் கொள்ளையர்களிடமும் தமிழகம் சிக்கி சின்னா பின்னமாகிவிட்டது.


S. Balakrishnan
ஆக 28, 2024 14:19

எம்ஜிஆர், அம்மா அவர்கள் அதிமுக தொண்டர்களால் மட்டும் அல்ல தமிழக அனைத்து கட்சியினராலும் மரியாதைக்குரிய தலைவர்களாக ஏற்றுக் கொள்ள பட்டவர்கள். பழனிச்சாமி அவர்களுடைய இடத்தில் அமரும் தகுதி கூட இல்லாதவராகவும் அதிமுக தொண்டர்களின் ஆதரவும் இல்லாத - இரண்டாம் கட்ட தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத தலைவராக இருப்பதை உணர வேண்டும்.


S.L.Narasimman
ஆக 28, 2024 13:53

கருநாநிதி படம் போட்ட காசு அச்சடித்து புழாங்கிதம் அடைஞ்சு கொண்டாடுங்க மாக்களா..


S.L.Narasimman
ஆக 28, 2024 13:49

ஜெயலலிதாவின் லட்சியங்களை பிசெபி நிறைவேற்றுமாம். இப்பிடி பேசி அடுத்த கட்சிக்காரர்கள் சேருவார்களென நம்பி கேவலமா திரியிராங்க. கிராமம் வரை சென்று கட்சியை வளர்க்க பாருங்க சோம்பேறிகளா.


கோவிந்தராசு
ஆக 28, 2024 11:01

அ.தி.முக மக்கள் இயக்கம் கத்து குட்டிகளால் கத்த தான் முடியும்


VENKATASUBRAMANIAN
ஆக 28, 2024 08:42

இவர்கள் அடித்துக் கொள்வது திமுகவுக்கும் ஆர் எஸ் பாரதி ஊடகங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. தினமும் இதுதான் விவாதம். பத்திரிக்கையாளர் என்ற பெயரில் ஷமீர கார்த்திகேயன் ப்ரியன் இன்னும் சிலர் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பார்கள். பாஜகவின் பேச்சாளர்கள் பேச தெரியாமல் உளறுவார்கள். திமுகவினர் கத்தி யாரையுமே பேச விடமாட்டார்கள். நெறியாளர் என்ற பெயரில் சுகிதா கார்த்திகேயன் கார்த்திகைச்செல்வன் தம்பி விஜயன் போன்றவர்கள் திமுகவினர் பேச முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். இவர்களே திமுகவின் சார்பாக பதில் சொல்லுவார்கள். இதுதான் இன்றைய நிலை


A Viswanathan
ஆக 28, 2024 08:01

பழனிசாமி முதலமைச்சராக இருந்தவர் என்பதை மறந்து மூன்றாம் கட்ட தலைவராய் பேசுவது எம்ஜிஆர் தொடங்கிய கட்சிக்கு களங்கம்.அவர் வகித்த பதவி மற்றும் வயதிற்கு உட்பட்டு பேச வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை