உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வழங்கல்: ஸ்டாலின் கணினி குரல் அழைப்பால் அதிருப்தி

முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வழங்கல்: ஸ்டாலின் கணினி குரல் அழைப்பால் அதிருப்தி

முன்கூட்டியே வழங்கப்பட்ட உரிமைத்தொகை குறித்து, ஸ்டாலின் பேசும் கணினி குரல் அழைப்பு வந்ததால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்தனர்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்ட போதும், பணம் எதுவும் வழங்கப்படவில்லை. குடும்பத்தினர் பலரும் அதிருப்தி அடைந்தனர்.இதையறிந்து, மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு, நேற்று முன்தினம் மாலை முதல், வங்கியில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று, பயனாளிகளின் மொபைல் போன்களுக்கு, கணினி குரல் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

அதில், ஸ்டாலின் குரலில் பேசி இருப்பதாவது:

நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்... பொங்கலை முன்னிட்டு, மகளிர் உரிமை தொகை, 1,000 ரூபாய், வழக்கமாக வழங்கப்படும், 15ம் தேதிக்கு பதில், முன்கூட்டியே அனுப்பியுள்ளோம். தாய்வீட்டு சீர் மாதிரி, உங்க ஸ்டாலின், மாதந்தோறும் தரும் உரிமைத்தொகை தொடங்கியது முதல், இதுவரை, 17,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, மன நிறைவையும் தந்திருக்கிறது.உறுதியாக சொல்கிறேன்... சிறப்பான இத்திட்டம் எப்போதும் தொடரும். உங்கள் குடும்பத்துடன் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட அன்பு வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் பேசியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

raja
ஜன 16, 2025 04:27

இலவச வேஷ்டி சேலை இல்லை, அதிமுக ஆட்சியில் வருடம் தோரும் தவறாமல் கொடுக்க பட்ட மாணவர்களுக்கான மடி கணனி இல்லை சைக்கிள் இல்லை.. விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி இல்லை சொத்து வரியில் இருந்து அனைத்து வரிகளையும் ஏற்றி, மின்சார கட்டணம் பேருந்து கட்டணம் என்று அனைத்து கட்டணங்களையும் ஏற்றி காய்கறியில் இருந்து அனைத்து பொருட்களின் விலைகளையும் ஏற்றி மாநில வருவாயை கொள்ளை அடித்து மாடல் ஆட்சி என்று பெருமை பேசி வந்த மூன்றரை வருடத்தில் 3.5 லட்ச்சம் கொடி தமிழன் தலையில் கடன்... எல்லா வருடமும் தவறாமல் இவை அனைத்தையும் கொடுத்து பத்து வருடம் ஆண்டு மொத்த பத்து வருடத்துக்கும் சேர்த்தே வட்டியுடன் 5 லட்சம் கோடி கடன் வாங்கிய அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சிதான் என்று தமிழன் புரிந்து கொள்ளும் நேரம் இது...


sankar
ஜன 15, 2025 17:36

வேஸ்ட் பெல்லோ


ராமகிருஷ்ணன்
ஜன 15, 2025 15:02

5000 ரூபாய் கொடுக்க சொன்ன அதேவாயி இப்ப என்ன செய்யுது. திமுக எப்போதும் எதிர் கட்சியாக இருக்கதான் லாய்க்கு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் இலவச பொங்கல் பொருட்கள் மகா கேவலம்.


vijai
ஜன 15, 2025 12:48

இவனுங்க அப்பன் வீட்டு பணத்தை கொடுக்கிறானுங்க


krishna
ஜன 15, 2025 12:12

BUILD UP THARPERUMAI PHOTO SHOOT DRAMA IDHU MATTUME TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHI SAADHANAI.


krishna
ஜன 15, 2025 12:04

PESIYE MAKKALAI MUTTALAAGA VAIPPADHIL THURU PIDITHU IRUMBU KARAM MIGA PERIYA VEERAR.


Karthik
ஜன 15, 2025 11:54

விளம்பரத்துக்காகவே இவனுங்க ஆட்சி நடத்துறானுங்கன்னு தெளிவா புரியுது...


சம்பா
ஜன 15, 2025 09:01

2026ல் எடுபடாது கண்ணா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை