உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் ஒரே மாதத்தில் 127 பாலியல் குற்றங்கள்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 127 பாலியல் குற்றங்கள்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, 127 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிராக 127 பாலியல் குற்றங்கள் அரங்கேறிய கொடூரம் நடந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவலநிலையின் கொடூர உச்சம் இது. கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் என, அனை த்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை என்றதும், தி.மு.க., அனுதாபி ஞானசேகரனால் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. க டந்த 2021ல், 4,465 ஆக இருந்த 'போக்சோ' வழக்குகள், தி.மு.க., ஆட்சியில் 6,975 ஆக அதிகரித்துள்ளன. தமிழகத்தில் குடும்ப வன்முறை குற்றங்கள் 21.2 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த வெட்கக்கேடான நிலைக்கு, பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு தலைகுனிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
அக் 03, 2025 13:10

கதறும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கூக்குரல் தன்னை அப்பா என்று சொல்லிக்கொண்ட ஒருவருக்குத்தான் கேட்கலை ....


Ramesh Sargam
அக் 03, 2025 09:46

தமிழகம் எல்லாவற்றிலும் முன்னேற்றம், வளர்ச்சி காண்கிறது, இல்லையா ஸ்டாலின் அவர்களே?


Balasubramanian
அக் 03, 2025 08:29

இந்த இராவணர்களை எரிக்க தமிழகத்தில் இராமர் மறு அவதாரம் எடுக்க வேண்டும்!


B N VISWANATHAN
அக் 03, 2025 07:49

இந்த விஷயத்தில், கட்சி, ஜாதி மற்றும் பண பலம் எதுவும் முக்கியம் இல்லை. எந்த மாதிரியான போதை வஸ்து உள்ள போகுது என்பது தான் முக்கியம். மது பழக்கம் பெரிய காரணம் ஆக உள்ளதால், ஒரு புதிய முயற்சியாக, டாஸ்மாக் கடைகளை 24 மணி நேரத்துக்கும் திறந்து வைக்கலாம். ஒரு வேளை இந்த முயற்சி வெற்றி பெற்றால், திராவிட மாடல் தேசத்திற்கே முன் மாதிரி யாக இருக்கும். 2026 வெற்றி கழகத்திற்கு 100 %


pmsamy
அக் 03, 2025 07:28

அந்தக் குற்றங்களில் முக்கால்வாசி பேர் அதிமுக பிரமுகர்கள் அதை சொல்ல மறந்துட்டியே


S Dhanavel
அக் 03, 2025 08:31

200% true


முக்கிய வீடியோ