உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணி பலம் இல்லாத நிலையில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அ.தி.மு.க.,

கூட்டணி பலம் இல்லாத நிலையில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அ.தி.மு.க.,

சென்னை: கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க., தலைமை, இப்போது பலமுனைகளில் இருந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.எம்.ஜி.ஆர்., தன்னுடைய ஆட்சிக்காலம் வரை, மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா, ராஜிவ் உடன் இணக்கமாகவே இருந்தார். ஜெயலலிதாவும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தார். ஆனால், பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., இருந்தபோது, எதிர்கட்சியாக இருந்த காங்கிரசையும் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.,வையும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.மத்தியில் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி இரண்டின் ஆதரவும் இல்லாததால், ஜெயலலிதா பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மக்கள் செல்வாக்கால் அதையும் மீறி அவரால் வெல்ல முடிந்தது. இப்போது ஆட்சியில் இல்லாத அ.தி.மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.,வுடான உறவை முறித்துக் கொண்டுள்ளது.எதிர்க்கட்சியான காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க., அணியில் உள்ளன. இதனால், டில்லி அரசியலில் எந்த ஆதரவும் இன்றி, அ.தி.மு.க., தவிக்கிறது. பிரிந்து சென்றவர்களை சேர்த்து அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, பா.ஜ., தலைமை விரும்புகிறது. இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுப்பதால், மத்தியில் அதிகாரத்தில் உள்ள பா.ஜ.,விடம் இருந்து, பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமி உறவினர்கள் வீடுகளில் வருமான வரி, அமலாக்கத் துறை சோதனை நடந்தது. மீண்டும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரமும் தேர்தல் ஆணையத்திடம் சென்று உள்ளது.இந்நிலையில்தான், பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான கோவை வடக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களால், தி.மு.க., அரசிடம் இருந்து ஏற்கனவே அ.தி.மு.க., நெருக்கடியை சந்தித்து வருகிறது.இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், 'இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் அஞ்சாது எதிர்கொள்வோம்' என, பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'தமிழகத்திலும் ஆட்சியில் இல்லை. டில்லியிலும் பகை. 1977ல் பிரதமராக இருந்த மொரார்ஜியின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், தஞ்சை இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்பியும் அதை மறுத்தார்; அதை எம்.ஜி.ஆர்., ஏற்கவில்லை. அதே நேரம், கருணாநிதி பா.ஜ.,வை எதிர்த்தாலும், 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என வாஜ்பாய் உடன் நட்பில் இருந்தார்.ஆனால், இப்போது மத்திய அரசை மட்டுமல்ல, அனைவரையும் பழனிசாமி எதிர்க்கிறார். இதனால் அவர் மட்டுமல்ல, அ.தி.மு.க.,வும் நெருக்கடியை சந்திக்கிறது' என்றனர்.

எதிர்த்து எவர்வரினும் அஞ்ச மாட்டோம்!

கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அம்மன் அர்ஜுனன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள, தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின், தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்கள் இடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தையும் உணர்ந்ததன் விளைவுதான், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. அ.தி.மு.க.,வை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் அஞ்சாது எதிர்கொள்வோம்; வரும் 2026ல் வெல்வோம்.

- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
பிப் 26, 2025 15:11

தன் அகந்தையால் அழிந்தவர் இவர். அதிமுக வையும் அழித்தவர்! இவர் இருக்கும் வரை அதிமுக தேறாது. விடியலுடன் மறைமுக உடன்படிக்கை போட்டுவிட்டாரோ என்னமோ!


madhes
பிப் 26, 2025 12:26

எப்போ சசிகலா காலை நக்குனாரோ அப்போவே டெட்பாடி பழனிசாமிக்கு சாதி ஓட்டும் விழாது, பதவி வேணும்னா இவ்வளவு வேலையும் செய்யணுமா ? கூவத்தூரில் கூட்டிகுடுத்தது மறக்கமுடியுமா ?


மால
பிப் 26, 2025 11:50

பி. சே.பி. தேறாது உன்னாமல முடிச்சு கட்டிடும்


ராமகிருஷ்ணன்
பிப் 26, 2025 09:14

எடப்பாடிக்கு எந்த விதமான தனித்த செல்வாக்கு, திறமை, ஜாதி பலம் கிடையாது. 4 வருடம் முதல்வராக இருந்தால் அவருக்கு அடுத்த வாய்ப்பு தந்து விடுவார்களா. தனது தகுதி அறிந்து நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரது கட்சியினரே தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுவார்கள்.


Subburamu Krishnasamy
பிப் 26, 2025 06:00

EPS is playing end game by doing betrayel to his mentors. Bad karma bad results


சமீபத்திய செய்தி