உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி பேச்சு முறிவு: பா.ம.க.,வே காரணம் என வெளியாகும் தகவல்

அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி பேச்சு முறிவு: பா.ம.க.,வே காரணம் என வெளியாகும் தகவல்

'அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, நடிகர் விஜய் தரப்பில் சம்மதம் தெரிவித்து, பேச்சு துவக்கப்பட்ட நிலையில், பா.ம.க.,வையும் சேர்ப்போம்' என பழனிசாமி தரப்பில் வலியுறுத்தியதால், கூட்டணி பேச்சு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3sziw8vl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆலோசனை

அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்து பேசினார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க பழனிசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.அதேநேரம் பா.ஜ., இல்லாமல், த.வெ.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் முஸ்லிம் சமுதாய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சியை பிடித்து விடலாம் என பழனிசாமி கருதுகிறார். அதற்கான ரகசிய பேச்சு நடந்து வருகிறது. சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசினார். அப்போது, 'த.வெ.க., வுக்கு 20 சதவீதம் ஓட்டுகள் உள்ள நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி அமைக்கலாம்' என ஆலோசனை கூறியுள்ளார்.த.மா.கா.,வைச் சேர்ந்த இளம் தலைவர் ஒருவரின் முயற்சியால், விஜய் தரப்பிடம் பேச்சு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில், 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என, த.வெ.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அ.தி.மு.க., தரப்பு சம்மதம் தெரிவித்த நிலையில், கூட்டணியில் பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,வும் இடம்பெறும் என, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதை, விஜய் தரப்பினர் ஏற்கவில்லை. பா.ம.க., தற்போது தே.ஜ., கூட்டணியில் உள்ளது. அக்கட்சியைச் சேர்க்க வேண்டாம் என்றனர். பா.ம.க., இருந்தால் தான், வட மாவட்டங்களில் அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்ய முடியும் என பழனிசாமி தெரிவித்தார்.

ரகசிய பேச்சு

இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விஜய் தரப்பு கூட்டணி பேச்சை மேற்கொண்டு தொடராமல் நிறுத்தியது. கூட்டணி பேச்சு நடந்ததன் காரணமாக, த.வெ.க., பொதுக்குழுவில் அ.தி.மு.க.,வை மட்டும் அக்கட்சியினர் விமர்சிக்கவில்லை. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை மட்டும் நேரடியாகவே விஜய் விமர்சித்து பேசினார். பா.ஜ., கூட்டணியை விரும்பாத நிலையில், டில்லி பா.ஜ., மேலிடம் அளித்த நெருக்கடி காரணமாக, அமித் ஷாவை பழனி சாமி சந்தித்துள்ளார்.கூட்டணி பேச்சை தற்காலிகமாக நிறுத்தியிருந்த த.வெ.க., தரப்பினர், மீண்டும் அ.தி.மு.க.,வுடன் ரகசியமாக பேசத் துவங்கி உள்ளனர். இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமையுமா அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., இடம் பெறுமா என்பது குறித்த குழப்பம், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.'எதுவாக இருந்தாலும் சட்டென முடிவெடுத்து, தேர்தல் களத்துக்கு வாங்க' என கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வலியுறுத்த துவங்கி உள்ளனர். அதனால், இன்னும் சில வாரங்களில், கூட்டணி குறித்த அ.தி.மு.க.,வின் நிலை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sridhar
ஏப் 05, 2025 21:17

விஜய் கட்சி திமுகவின் நிழல் . இதுகூடவா எடப்பாடிக்கு புரியவில்லை. கடைசியில் காலை வாரி விடுவார்கள்.


Mohan
ஏப் 05, 2025 13:04

People of Tamil Nadu believes that BJP high command will not take a drastic action by removing/sacrificing Mr Annamalai from BJP State President. Future of AIADMK under the leadership of EPS is no more. If BJP takes a decision to go with AIADMK then better close down the unit of BJP in Tamil Nadu. Suggestion to BJP - For a long term, go along with like minded parties rather than with AIADMK, raise 18 to 30% in Assembly Election, we can secure secure 30 to 40 seats under the leadership of Annamalai. People of TN trusts Annamalai more than of PM or HM of India


S. Gopalakrishnan
ஏப் 04, 2025 20:34

எண்பது தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி - அ. தி. மு. க. ஒப்புக் கொண்டது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படுகிறார் அதை மற்றவர்கள் ஒப்புக் கொள்ளவும் செய்கின்றனர் !


Barakat Ali
ஏப் 04, 2025 12:56

எதுவாக இருந்தாலும் சட்டென முடிவெடுத்து, தேர்தல் களத்துக்கு வாங்க என கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வலியுறுத்த துவங்கி உள்ளனர்... இப்படி வலியுறுத்தியவர்களுடன் திமுக ரகசிய உறவு வைத்திருக்க வாய்ப்புள்ளது..... விஜய் திமுகவின் ஆள் ...... அவர் கூட்டணிக்கு சம்மதிக்க வாய்ப்பே இல்லை ......


ஆரூர் ரங்
ஏப் 04, 2025 12:51

ஆனானப்பட்ட வடிவேலு கூட திமுக வுக்கு பிரச்சாரம் செய்து காணாமல் போனது மறக்குமா ? டார்ச் லைட் இப்போ அடிமையாகி விட்டது. விஜயகாந்த் இருக்கும்போதே அவரதுகட்சி தேய்ந்தது. .இப்போ சினிமா ஆட்களுக்கு அரசியல் வீழ்ச்சி காலம்.


ராமகிருஷ்ணன்
ஏப் 04, 2025 11:39

ஒரே ஒரு தேர்தலில் தனித்து நின்று ஓட்டு சதத்தை காண்பித்து விட்டு வீர வசனங்கள், பில்டப்புகள் பண்ணவும்.


Suganyakarthik
ஏப் 04, 2025 07:25

த வெ க தனித்தே போட்டியிடும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 04, 2025 08:33

அதற்காக தானே கட்சி தொடங்கியது.....ஒருத்தற்க்கு கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை திமுக மறுபடியும் ஆட்சிக்கு வரனும்....!!!


புதிய வீடியோ