உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தலில் வெல்லும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விலை போகாமல் தடுக்க பழனிசாமி புது திட்டம்

தேர்தலில் வெல்லும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விலை போகாமல் தடுக்க பழனிசாமி புது திட்டம்

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் 75 புதுமுகங்களை களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், 'இன்றைக்கு பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் தான், நாளைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள்' என்றார். சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

விசுவாசிகள் அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், புதுமுகங்கள் 50 பேருக்கு 'சீட்' வழங்கப்பட்டது. அதில், பழனிசாமியின் தீவிர விசுவாசிகள் 15 பேர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், தொங்கு சட்ட சபை உருவாகும் நிலை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக, தன் விசுவாசிகளுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் படைத்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் சிலரை தேர்வு செய்து, போட்டியிடும்படி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், தோல்விக்கு பயந்து, அவர்கள் தயங்கினர். இதனால், தகுதியான வேட்பாளர்கள் இல்லாமல், சில தொகுதி களில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா பாணி எனவே, லோக்சபா தேர்தலில் போட்டியிட தயங்கியவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார்.அதே சமயம், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் 15 பேர் வரை, சட்டசபை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருக்கும் 'சீட்' உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 46 தனி தொகுதிகளில், கடந்த முறை கூட்டணி கட்சி களுக்கு அதிகமாக ஒதுக்கி கொடுத்தும், அக்கட்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, இந்த தேர்தலில், 35 தனி தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது.கடந்த 2011 சட்டசபை தேர்தலில், பகுதி, நகர, ஒன்றிய செயலர்களை வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்தார்; அவர்கள் வெற்றி பெற்றனர். ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பழனிசாமி ஆலோசித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Murugesan
டிச 14, 2025 19:45

முதல் ஆளாக இவர் மாறி ஸ்டாலினின் அமைச்சரவையில் சேருவார் ,உலகமாக சுயநலவாதி


ganesha
டிச 14, 2025 19:03

பழனிசாமி பன்னீர் செல்வம் கட்சி, அமுமுக கட்சி யையும் கூட்டணி ல சேத்துண்டு, பழனிசாமி நயினார் அண்ணாமலை னு மூணுபேரும் சேந்து ப்ரசாரம் பண்ணினா, நிச்சயமா இவங்க தான் ஆட்சி க்கு வருவாங்க


karupanasamy
டிச 14, 2025 17:08

தேர்தல் முடிவுகள் வரும்போது தீயமுக காரனுங்களுக்கு டீவீயில் போடுவார்கள்.


V K
டிச 14, 2025 12:46

அதற்கு தான் கூவத்தூர் இருக்கு


ஜெய்ஹிந்த்புரம்
டிச 14, 2025 11:55

பாஜக கிட்டே எழுதி வாங்கிக்குங்க.


Lakshumanan Aruna
டிச 14, 2025 10:10

கர்மா is waiting your behind பழனிச்சாமி


Kadaparai Mani
டிச 14, 2025 09:41

Aiadmk will form independent government. Aiadmk alliance will sweep polls. Aiadmk alliance partner will become opposition leader


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 14, 2025 11:37

அபாரக் கனவு. எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ அப்போதே அதிமுகவின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அடுத்த ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது கூட சந்தேகம்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 15, 2025 03:09

After a month ADMK MLAs jump to the ADMK alliance partner party and with the help from the Governor they capture the government and finish off ADMK. நீங்க காணும் கனவின் இறுதி அத்தியாயம் இப்படி தான் பயங்கரமா இருக்கும்.


முருகன்
டிச 14, 2025 09:31

சிரிப்பு சிரிப்பு தான்


vivek
டிச 14, 2025 18:07

முருகா...நீ எதுக்கு முட்டு சந்துல தனியா சிரிக்கிறாய்....ஒரு மாதிரியே இருக்கே


முக்கிய வீடியோ