உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தப்புமா அ.தி.மு.க., இரட்டை இலை; வரும் 30ல் நிலவரம் தெரியும்

தப்புமா அ.தி.மு.க., இரட்டை இலை; வரும் 30ல் நிலவரம் தெரியும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு, மீண்டும் வரும் 30ம் தேதி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும்' என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகே இரட்டை இலை யாருக்கு என்பது தெரிய வரும்.

உத்தரவு

அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என, சூரியமூர்த்தி என்பவர், தேர்தல் கமிஷனில் மனு அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழனிசாமி, பன்னீர்செல்வம் உட்பட, அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் கேட்டு, நான்கு வாரத்திற்குள், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, முடிவு எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று, பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் ராஜலட்சுமி, ஆஜராகி விளக்கம் அளித்தனர். சூரியமூர்த்தியும் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். தேர்தல் கமிஷன் வரும் 30ம் தேதி மீண்டும் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் ஆஜராகி, தங்கள் விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதற்காக இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக விளக்க மனுவை தயாரித்து வருகின்றனர். அவர்கள் விளக்கத்திற்கு பிறகு, இரட்டை இலை தொடர்பாக, தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும். இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி, புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர், நேற்று தேர்தல் கமிஷனில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.

அதன்பின் கே.சி.பழனிசாமி அளித்த பேட்டி:

ஜெயலலிதா இறந்தபோது, அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து, பின் கட்சியில் இருந்து யாரெல்லாம் நீக்கப்பட்டனரோ, அவர்கள் மாற்றுக் கட்சியில் சேராமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைவரையும் மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும். அதன்பின் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலை நடத்தி, பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

விதிமுறை மாற்றம்

அதுவரை, தற்போது அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளேன். தற்போதைய சூழலில், அ.தி.மு.க., விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது தவறு என கூறினால், கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரை கூட பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி விடுவார். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Tami L Murugan
டிச 26, 2024 05:51

BJP is a poison to Tamil ASU and the leader is mother example of joint hands with corrupt people to contest election. All of them currently with BJP has multi Million assests. And there are cases against them. Don’t think Ananamalai is telling the truth. He is selling Tamilnadu to Modi and BJP


Haja Kuthubdeen
டிச 25, 2024 16:52

மகாராஸ்ட்டிராவில் மட்டும் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் பிளவு பட்டதும் சட்டு புட்டுனு முடிவெடுத்தாய்ங்களே...


பேசும் தமிழன்
டிச 25, 2024 14:36

இலை மட்டும் இல்லை என்று கூறி பாருங்கள்..... பழனி கதி அதோ கதி தான்..... பத்து தோல்வி பழனிசாமி..... எப்போதும் தோல்வி பழனிசாமியாகி விடுவார்.


சம்பா
டிச 25, 2024 13:32

பந்திலேயே எடம் இல்ல எல ஓட்டைங்கறான்


saravan
டிச 25, 2024 10:51

ஏய் இரட்டை இலை இல்லேன்னு மட்டும் சொல்லிப்பாருங்க ... கூன்பாடியார் கழுத்தை சின்னத்தில் நின்னாக்கூட 200 தொகுதி ஜெயிப்பார் சொல்லிப்பாரேன்...


vijay,kovai
டிச 25, 2024 06:59

aalukku oru ilayai kududhudalam,problem solved


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை