உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷா இன்று சென்னை வருகிறார்; இ.பி.எஸ்., உடன் கூட்டணி பேச திட்டம்?

அமித் ஷா இன்று சென்னை வருகிறார்; இ.பி.எஸ்., உடன் கூட்டணி பேச திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு சென்னை வருகிறார். பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களை, நாளை சந்திக்கிறார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. டில்லியில் இருந்து இன்று இரவு, 10:20 மணியளவில், தனி விமானத்தில் சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் மாலை வரை, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார். பின், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசவும், அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மாலையில், மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் அங்கு வர உள்ளதாக தெரிகிறது. அங்கு நடக்கும் ஆலோசனையை முடித்த பின், அமித்ஷா நேராக விமான நிலையம் செல்கிறார்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததற்கு, தி.மு.க.,வும் ஒரு காரணம் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. எனவே தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க, அக்கட்சிக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கும் முயற்சியில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - அ.ம.மு.க., - பன்னீர்செல்வம் அணி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் வருமானால், தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில், அமித்ஷா ஆர்வமாக உள்ளார். பழனிசாமியை டில்லி அழைத்து பேசியதன் தொடர்ச்சியாகவே, அமித்ஷாவின் சென்னை வருகை அமையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
ஏப் 10, 2025 13:00

அண்ணாமலை ஏதாவது செய்து பாஜகவை தமிழகத்தில் ஜாண் ஏற்றினால் இவர் அதை ஒரே அறிக்கையில் முழம் சரிய வைக்கிறார்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 09:45

எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டணி பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல். அப்படியே கூட்டணி சேர்ந்தாலும் ஜெயலலிதா எப்படி திரு.வாஜ்பாய் கழுத்து அறுத்து வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தாரோ அது போல இவரும் அண்ணாமலை கழுத்தறுத்து பாஜகவை புதைத்து விடுவார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கடைசியாக திரு.வாஜ்பாய் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடையில் தண்ணீர் கூட அருந்தாமல் ஒரே பொஸிஷனில் நின்று பாராளுமன்றத்தில் பேசியது பார்த்த யாவரையும் மன உருக வைத்தது. ஆனால் பிடிவாததிற்கு பெயர் போன ஜெயலலிதா அன்று செய்த மாபெரும் தவறை காலம் என்றைக்கும் மன்னிக்காது.


ellar
ஏப் 10, 2025 09:22

இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்துள்ள பாஜகவுக்கு தென்னாட்டில் பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக செய்து வரும் வேலைகள் புரிவது சிரமமாக இருக்கக் கூடாது. ஆனால் மிகச் சாதுரியமாக தந்திரமாக சீமான் விஜய் பிரேமலதா மற்றும் வைகோ ஆகியோரை முழுவதுமாக வேறு ஒருவரிடம் ஆலோசனைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்கெல்லாம் ஆலோசனை வழங்கி தமிழகத்தை குழப்பமான இடமாக தேசிய கட்சிகளுக்கு செயல்பட இயலாத அளவுக்கு வைத்து கொண்டிருக்கும் இவ்வகையான எலக்சன் ஆலோசகர்களையும் சிறிது கவனிக்க வேண்டும்.. மக்கள் மனதில் நினைப்பதை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த இயலாத அளவுக்கு இவர்களுடைய திட்டங்கள் உள்ளன.


Oviya Vijay
ஏப் 10, 2025 09:11

தேர்தலுக்கு பின் பிஜேபி கூறும் இது இபிஎஸ் மீதான அதிருப்தியில் அதிமுகவுக்கு ஓட்டுக்களே விழவில்லை... இவையாவும் பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுக்கள் என்று... அதிமுகவோ இது பல நெடுங்காலம் கட்டிக்காக்கப்பட்டு வரும் இயக்கம்... ஒருபோதும் எங்கள் வாக்கு வங்கி குறையவில்லை... இது பிஜேபியை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று... தேர்தலுக்குப் பின் இவர்களுக்குள்ளான வார்த்தைப் போரால் மீண்டும் கூட்டணி முறியும்... ஆக மொத்தத்தில் வாழ்நாள் முழுவதும் இப்படியே சண்டையிட்டுக் கொண்டே தான் இருப்பரே தவிர ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இனி அதிமுகவிற்கோ இல்லை பிஜேபிக்கோ அதிர்ஷ்டம் இல்லை... நாடாளுமன்றத்தில் ராகுல் வேறு பிஜேபியைப் பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது எனக் குறிப்பிட்டது தொடர்கதை ஆகும்...


Oviya Vijay
ஏப் 10, 2025 08:37

கூட்டணி சேர்ந்து போட்டி போடக் காத்திருக்கும் இவர்களுக்குள்ளான காமெடி என்னவென்றால்... தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இந்த கூட்டணி வாங்கப் போகும் சொற்ப ஓட்டு சதவீதத்தையும் தங்கள் கட்சி தான் வாங்கியது என்று உரிமை கொண்டாடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளப் போகிறார்கள்...


ராஜாராம்,நத்தம்
ஏப் 10, 2025 09:05

நீ ஏன் தினமும் இப்படி கெடந்து அடிச்சுக்கிற நீ நினைப்பது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை இந்த முறை கண்டிப்பாக தமிழக மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அப்பறம் உன்னை போன்ற அறிவாலய அடிமைகளுக்கு இப்போது இருக்கும் பேட்டா ₹ 200 கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்..


vivek
ஏப் 10, 2025 09:12

எல்லாரும் ..


N DHANDAPANI
ஏப் 10, 2025 09:18

ஒவ்வொரு எலக்சனுக்கு முன்னாலும் இது மாதிரி வீரம் பேசும் சில பேரை ஆளும் கட்சிகள் களம் இறக்குவது சகஜம் தானே....


Haja Kuthubdeen
ஏப் 10, 2025 10:43

சென்ற சட்டமன்ற தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடைசிநேர மாறுதலில் 2சதவீத ஓட்டுக்கள் அதிகம் பெற்று திமுக கூட்டணி வென்றது மறந்து போச்சா..


இந்தியன்
ஏப் 10, 2025 08:32

ஏதாவது செய்து, இந்த விடியலை சீக்கிரமா வீட்டுக்கு அனுப்புங்க ஜீ... கோடி புண்ணியம் கிட்டும்...


Thetamilan
ஏப் 10, 2025 08:12

ED யில் உள்ள தங்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வழிக்கு கொண்டுவந்துள்ள இந்துமதவாத குண்டர்கள்


பாமரன்
ஏப் 10, 2025 08:09

கெரகம்டா


ராமகிருஷ்ணன்
ஏப் 10, 2025 07:27

திமுகவினர் தோல்வி பயத்தில், புலம்பி பொணாத்துவார்கள், ஆரம்பிக்கட்டும்


பாமரன்
ஏப் 10, 2025 08:15

இல்லைங்க ராமகிருஷ்ணன். அமித் வருகைக்கு அதிகம் பயந்து போனது ட்ரம்புதான்... வரியுர்வை கூட நிறுத்தி வச்சிட்டாராம்ல...?? போங்க போங்க போய் வாட்ஸ்அப் யூனிவர்சிடில ஒழுங்கா காலைப்பாடம் படிங்க பாஸூ..


வரதராஜன்
ஏப் 10, 2025 06:44

யார் இந்த குருமூர்த்தி தமிழ்நாடு கவர்னரா ஜனாதிபதியா இங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லையே நம்ம அண்ணாமலை கேட்டுப் பார்ப்போம் அவர்தான் விரலை நீட்டி நீட்டி பதில் அளிப்பார்


முக்கிய வீடியோ