உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாதுரை நினைவு தின நிகழ்ச்சி: உதயநிதி ஆப்சென்ட்; ஸ்டாலின் அப்செட்

அண்ணாதுரை நினைவு தின நிகழ்ச்சி: உதயநிதி ஆப்சென்ட்; ஸ்டாலின் அப்செட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் நடந்த அண்ணாதுரை நினைவு தின நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளாதது, தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர், சென்னையில் அண்ணாதுரை நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8wlvoz95&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பேரணி முடிவில் , நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார் . இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கவில்லை. அதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், மதியம் சமபந்தி விருந்தில் உதயநிதி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வை நிறுவிய அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் பேரணியாக சென்று, மரியாதை செலுத்துவர் என கட்சி தலைமை அறிவித்தது. பேரணி துவங்கும் இடத்திற்கு காலை 7.45 மணிக்கு முதல்வர் வந்தார்; அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி வரவில்லை. அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மதியம் நடத்தப்படும் சமபந்தி விருந்தில் உதயநிதி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது; அந்நிகழ்ச்சிக்கும் அவர் வரவில்லை. கட்சி நிறுவனர் அண்ணாதுரை நினைவு தினத்தில் உதயநிதி பங்கேற்காதது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், காலை 10:23 மணிக்கும், 11:18 மணிக்கும் அண்ணாதுரை குறித்து, உதயநிதி சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டார். இரு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி கலந்து கொள்ளாததால், முதல்வர் 'அப்செட்' ஆகி உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.jayaram
பிப் 06, 2026 21:41

ஸ்டாலினுக்கு தேவை அண்ணா ஆனால் உதய நிதிக்கு தேவை அவர்களை அவர் பெயரால் திமுகவில் என்ன உள்ளது அனைத்தும் குடும்பத்தின் உறுப்பினர்கள் பெயரில் தானே இருக்கிறது. அவர் கட்சியின் செயலாளர் மட்டுமே. ஆனால் இவர் கட்சித்தலைவர் மகன், முன்னாள் தலைவரின் பேரன் இவ்வளவு தகுதிகள் இருக்கும்போது அண்ணா எதற்கு சும்மா, அவர் கால தொண்டர்களும் இப்போது இல்லை அப்புறம் எதுக்கு தூக்கி பிடிச்சுகிட்டு திரியணும் என்று நினைத்திருப்பார்.


தமிழ்வேள்
பிப் 04, 2026 21:18

அண்ணா பெயர் சொன்னால் மெத்து யாவாரம் கூடி விடுமா? என்ற ஒரு எண்ணம் ஜின்னவருக்கு.. அதான்..


SUBBU,MADURAI
பிப் 04, 2026 12:27

பெரியார், அண்ணா, கலைஞர் இறக்கவில்லை அவர்கள் உதயநிதி உருவில் வாழ்கின்றனர். அமைச்சர் கோவி.செழியன்...


Balasubramanian
பிப் 04, 2026 12:27

கடைத் தேங்காயை எடுத்து நீங்கள் வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல், கோவில் பணத்தை எடுத்து அண்ணாதுரை நினைவு ஏந்தல் சம பந்தி உணவு என்ற பெயரில் திதி படையல் செய்கிறீர்கள்! இதில் சனாதன கொசு ஒழிப்பு வேந்தர் வேறு சேர்ந்தால்? மக்கள் அன்பும் ஓட்டு வங்கியும் பெருக்கெடுத்து ஓடாதா?


ஆரூர் ரங்
பிப் 04, 2026 10:47

ஏதாவது திருச்சபையில் சமபந்தி விருந்து நடத்தச் சென்றிருப்பார்.


mohana sundaram
பிப் 04, 2026 10:17

புள்ள கலந்துக்கவில்லை என்றால் அப்பாக்கு தான் வருத்தம் வரும்.


Sun
பிப் 04, 2026 08:25

திமுகவினர் எப்போதும் பெரியாரை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்! அண்ணா என்றால் எப்போதுமே இரண்டாம் பட்சம்தான்!


D Natarajan
பிப் 04, 2026 05:43

மிக முக்கியமான வேலையில் இருந்திருக்க கூடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை