உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாட்டுக்கார வேலனாக மாறிய அண்ணாமலை: இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் வெற்றி பெற அறிவுரை

மாட்டுக்கார வேலனாக மாறிய அண்ணாமலை: இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் வெற்றி பெற அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''விவசாயத்தில் இருக்கும் சவால்களையும், வாய்ப்புகளாக மாற்றி, இளம் தலைமுறையினர் வெற்றி பெற வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே மத்வராயபுரம் கிராமத்தில், 11 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை வாங்கியது தொடர்பாக, பொது வெளியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uug8ada4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இயற்கை விவசாயம் அதற்கு, 'விவசாய நிலத்தை தனது சேமிப்பு மற்றும் கடன் வாயிலாக வாங்கினேன். மத்திய அரசு திட்டத்தின் கீழ், பால் பண்ணை அமைக்க கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன்' என, விளக்கம் அளித்தார். இந்நிலையில், தனது விவசாய நிலத்தில், தீவனம் அறுவடை செய்து, மாடுகளுக்கு உணவு அளித்து பராமரிக்கும் வீடியோவை அவரே வெளியிட்டுஉள்ளார். இது பற்றி, அண்ணாமலை கூறியதாவது: எங்கள் குடும்பம், ஆண்டாண்டு காலமாக விவசாயத்தை முழுநேர பணியாக செய்து வருகிறது. அரசியலுக்கு இடையே, இயற்கை விவசாயம், மண் சார்ந்த விவசாயம் குறித்த புத்தகங்களை படிக்கிறேன். உலகளவில் விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் அடிப்படை மாற்றங்கள், நம் நாட்டில் பண்டைய காலம் முதல் இயற்கை விவசாய முறை குறித்தும் படிக்கிறேன். காங்கேயம் மாடு உட்பட நிறைய மாடுகள் வளர்க்க ஆசை; அதற்கான வேலைகளை செய்கிறேன். அதேநேரம், மத்திய, மாநில அரசுகள் தரும் சலுகைகளை பயன்படுத்தி விவசாயத்தை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கோவையில் விவசாயம்; கரூரில் ஆடு வளர்ப்பு என என்னுடைய நேரம் செலவாகிறது. இந்தியாவை பொறுத்தவரை விவசாயம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. குடும்பங்கள், 'நியூக்ளியர்'ஆக மாறுவதே காரணம். குடும்பத்தில் இருந்து நிறைய குழந்தைகள் பிரிந்து செல்லும்போது, சொத்து பிரிகிறது. பெரிதாக விவசாயம் செய்ய முடியாமல் போகிறது. மாற்ற வேண்டும் அமெரிக்காவில், பெரும் விவசாயிகள் இருக்கின்றனர். இந்தியாவில், சிறு குறு விவசாயிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல விவசாயத்தை மாற்ற வேண்டும். எத்தனையோ பேருக்கு விவசாயம் செய்யும் ஆசை இருக்கிறது; ஆனால் நிலம் இல்லை. நிலம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. விவசாயம் செய்ய விரும்பும் இளம் தலைமுறையினர் இவற்றை சவாலாக இல்லாமல், வாய்ப்பாக பார்க்க வேண்டும். கூட்டு முயற்சி நகரில் இருந்தாலும் கூட, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து, வெளியே நிலம் வாங்கி கூட்டு முயற்சி செய்யலாம். விவசாயத்தை பொறுத்தவரை கண்ணும் கருத்துமாக களத்தில் இருந்தால் மட்டுமே வெற்றி. பொழுது போக்கிற்காக விவசாயம் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது. இளம் தலைமுறையினர், விவசாயத்தில் லாபம் தரும் விஷயங்களை கற்றுக்கொண்டு அடிப்படை அறிவையும் வளர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம், ரசாயன உரம் இல்லாத விவசாயம் என கலந்து செய்யும்போது தான் லாபம் கிடைக்கும். தரமான பாலை வேகமாக வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பது சவாலானது. இதற்கு, மத்திய அரசு பல திட்டங்களை வைத்துள்ளது. 'நேஷனல் கோகுல் மிஷன்' திட்டத்தில் மத்திய அரசு மானியத்துடன் சலுகை வழங்குகிறது. இதை இளம் தலைமுறை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Abdul Rahim
அக் 27, 2025 17:53

அரசியல் ரீதியாக அண்ணாமலையோடு பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு விவசாயியாக அவரை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் இன்று வெளிநாட்டில் இருந்தாலும் பள்ளி கல்லூரி காலங்களில் படித்துக்கொண்டே அம்மாவுக்கு துணையாக பால்மாடுகள் வளர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறேன் பின்பு நானே தனியாகவும் கறவை மாடுகளை வைத்து பால் பண்ணை தொழில் பார்த்திருக்கிறேன் புறா கோழி,கிண்ணி கோழி, வாத்து, வான்கோழி என நான் அனைத்தையும் வளர்த்திருக்கிறேன் இடையில் ஏற்பட்ட சில பொருளாதார நஷ்ட்டம் கைதூக்கிவிட ஆள் இல்லாத காரணம் போன்றவற்றால் அவற்றை எல்லாம் விட்டு விலக வேண்டிய நிலை, என்னதான் படித்து விட்டு வெளிநாட்டில் வேலையில் இருந்தாலும் சொந்த ஊரில் பிடித்த தொழிலை செய்வது மனதுக்கு நிறைவானது அந்த வகையில் காவல்துறையில் பணி பின்பு அரசியல்வாதி என இருந்தாலும் பழையதை மறக்காமல் அண்ணாமலை செய்யும் இந்த பால்பண்ணை தொழில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..


baala
அக் 27, 2025 17:29

இங்கு கருத்து எழுதுபவர்களின் எத்தனை பேருக்கு விவசாயம் பற்றி தெரியும்? எத்தனை பேர் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ?


baala
அக் 27, 2025 17:27

இயற்க்கை விவசாயமா? அதில் துளியும் கூட லாபம் இருக்காது. இது தான் உண்மை. கள்ள பணம் இருந்தால் அதை வெள்ளை பணம் ஆக்கலாம்


சத்யநாராயணன்
அக் 27, 2025 14:43

தமிழகம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்


ஆரூர் ரங்
அக் 27, 2025 14:35

முழுக்க இயற்கை விவசாயத்துக்கு மாறினால் நாட்டிலுள்ள 140 கோடி பேருக்கும் உணவு உற்பத்தி சாத்தியமேயில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த அரிசி கிலோ நூறு ரூபாய்க்கு மேல். சிறு தானியங்கள் விலை அதற்கும் மேல். நிலவளத்தை பாதிக்காத விஞ்ஞானமுறை விவசாயம் மட்டுமே தீர்வு.


Santhakumar Srinivasalu
அக் 27, 2025 12:48

அரசியலை விட்டு தலைவர் ஒதுங்கி கொள்ள முடிவு எடுத்து விட்டார் போல் தெரிகிறது!


ஜெய்ஹிந்த்புரம், Madurai
அக் 27, 2025 09:39

எங்களுக்கு கட்சி, நாட்டு முன்னேற்றம் முக்கியமல்ல, நாட்டை கெடுக்கும் இம்சை அரசர்கள் உள்ள கட்சிக்கு ஆதரவு அளிப்போம்... நாடு முன்னேறுவது எங்களுக்கு பிடிக்காது...அவ்வளவுதேன்...


Ramesh Trichy
அக் 27, 2025 10:15

உங்கள் கட்சி மாமன்னர்கள் மாதிரி ஊரை கொள்ளை அடித்து சொத்து சேக்கவில்லை, நீங்கள் எல்லாம் திருத்தவே திருத்த மாட்டிர்கள். உங்கள் டிசைன் அப்படி.


Sun
அக் 27, 2025 09:38

சத்தியம் நீயே தருமத் தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே!


Ramesh Sargam
அக் 27, 2025 09:10

அவர் உழைத்து வேலை செய்வதை கிண்டலாக பேசுவார்கள் அவர்கள். திமுகவினருக்கு கடுமையாக உழைக்க தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஊழல் நன்றாக செய்யத்தெரியும்.


Iyer
அக் 27, 2025 07:31

ரசாயன விவசாயத்தால் பாரத நாட்டு விவசாய நிலங்கள் - பாறாங்கல் போலவும், பாலைவனமாகவும் மாறிக்கொண்டு வருகின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் உணவுப்பற்றாக்குறையும், ரசாயனம் கலந்த உணவும் சேர்ந்து பாரதத்தில் பேரிடர் உருவாக்கும் இப்போதே பாரத அரசு ரசாயன விவசாயத்தை தடை செய்து -பள்ளி கல்லூரிகளில் இயறக்கை விவசாயம் theory + practical கற்பிக்க ஆரம்பிக்கவேண்டும் சிக்கிம் இதற்க்கு ஒரு வெற்றிகரமான முன்னுதாரணம்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 08:20

சிக்கிம் முன்னுதாரணம். அதுக்கு காரணமானவரை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து வைத்துள்ள பாஜக அரசிடம் இதை கேக்குறீர் கொடுமை.


ஆரூர் ரங்
அக் 27, 2025 18:22

திடீரென இயற்கை விவசாயத்தை கட்டாயப்படுத்தியதால் இலங்கைக்கு நேர்ந்த கதியை அறிந்தால் இப்படியெல்லாம் எழுத மனம் வராது.