உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பற்றி எரியும் அ.தி.மு.க., கூட்டணி: எண்ணெய் ஊற்றும் அண்ணாமலை

பற்றி எரியும் அ.தி.மு.க., கூட்டணி: எண்ணெய் ஊற்றும் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானதில், என் பங்கு இல்லை. கூட்டணி ஆட்சி என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு முறை அல்ல; மூன்று முறை கூறியிருக்கிறார். இதில் அ.தி.மு.க.,வுக்கு மாற்று கருத்து இருந்தால், அமித் ஷா உடன் பேசலாம்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: 'தி.மு.க., பைல்ஸ்' முதல் பாகம் வெளியிட்டபோது, அக்கட்சி எம்.பி., டி.ஆர்.பாலு உள்ளிட்டோரின் குடும்ப சொத்துக்களின் விபரங்களை வெளியிட்டோம். அவர், என் மீது தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு நடக்கிறது. நீதிமன்றம் அழைக்கும் போதெல்லாம் நான் வருகிறேன். வழக்கு தொடர்ந்தவர் வரவில்லை. கர்மவீரர் காமராஜரை வீழ்த்தியதற்கு, தி.மு.க., தான் முக்கிய பொறுப்பு. கடந்த 1967 பிரசாரத்தின் போது, காமராஜர் குறித்து கருணாநிதி பேசியதை இன்று வெளியிட்டால், மானமுள்ள ஒரு காங்கிரசார் கூட, தி.மு.க., கூட்டணியில் இருக்க மாட்டார்கள்.

கண்டிக்கிறேன்

காமராஜர் தன் கடைசி காலத்தில், 'இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்றார். அப்படி இருக்கும் போது, அவர் கருணாநிதியிடம் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை. வரலாற்றை மாற்றி, மக்களை குழப்புவதை கண்டிக்கிறேன். மானமுள்ள காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டிருக்கிறதா? காமராஜரை கேவலப்படுத்தியதோடு இல்லாமல், உண்மைக்கு புறம்பாகவும் பேசியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், கண்டன அறிக்கை தராமல், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வர தயாரா; தனியாக போட்டியிட தயாரா? தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய, மக்கள் தயாராகி விட்டனர். பா.ஜ., வலிமையை அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு பின், அரசியல் களம் மாறியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும்போது, தி.மு.க., தனியாக போட்டியிட வாய்ப்புள்ளது. அதனுடைய பிதற்றலாகத் தான், ஸ்டாலின், உதயநிதி பேசுகின்றனர். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். அதனுடன் எந்த கட்சி சேர்ந்தாலும் வீழும். தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியே வர தயாராகி விட்டன. மக்களின் கோபத்தை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் படிக்க ஆரம்பித்து விட்டன.

கூட்டணி ஆட்சி

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானதில் என் பங்கு எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது, என் தலைவர் அமித் ஷா சொல்வதை தான், நான் கேட்டாக வேண்டும். அவர் மிக தெளிவாக சொல்லிய பின், 'கூட்டணி ஆட்சி இல்லை' என்று நான் சொன்னால், இந்த கட்சியில் தொண்டனாக, தலைவனாக இருக்க எனக்கு தகுதியில்லை என்று அர்த்தம். என் தலைவர் சொன்ன கருத்தை, நான் ஏற்றுக் கொள்ள முடியாமல், என் தலைவர்களின் கருத்தை வலுப்படுத்த முடியாமல், என் தலைவர்கள் சொன்ன கருத்திலேயே சந்தேகம் எழுப்பினால், நான் தொண்டனாக இருக்கக்கூடாது. இது என் கருத்து. தலைவர்கள் பேசியுள்ளனர். இதில் உறுதிபட இருக்கிறேன். என் தலைவர்கள் நிலையை மாற்றும் போது, நான் மாற்றிக் கொள்கிறேன். இந்த கூட்டணியை அண்ணாமலை உடைக்க பார்க்கிறார் என நான்கு பேர் வருவர். அமித் ஷா ஒரு முறை அல்ல; மூன்று முறை கூறியிருக்கிறார். இதில் அ.தி.மு.க.,வுக்கு மாற்று கருத்து இருந்தால், அமித் ஷா உடன் பேசலாம். என் தலைவர் சொல்லாத வரை, கட்சி எடுத்த முடிவில் இருந்து, நான் எப்படி பின்னே செல்ல முடியும். தமிழகத்தில் பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், முதன் முதலாக கூட்டணி ஆட்சி என்று பேச ஆரம்பித்துள்ளன. என் கட்சி அமைச்சரவை யில் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கருதுகின்றனர். உதயநிதி காலத்தில், தி.மு.க., இருக்காது. ராமதாஸ், அன்புமணி சமாதானமாக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

venugopal s
ஜூலை 18, 2025 19:09

அதிமுக பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை திவசம் பண்ணாமல் விட மாட்டார் போல் உள்ளது!


Kadaparai Mani
ஜூலை 18, 2025 14:41

For a national party like BJP and very distinctive ideology forum RSS no individual is important. Party high command already investigating complaints given by Tamil nadu party chief Nainar nagendran. There are allegations one former LIC agent in chennai suburbs amazed wealth due to the support of one party senior functionary .For BJP 2029 is very important and AIADMK has accepted Modi leadership which is very important. Indeed AIADMK alliance will sweep more than 210 seats and AIADMK is going to form independent ministry. The leader of opposition is going to be from BJP or one more regional party which is going to join alliance very shorty which is confidential.


சங்கி
ஜூலை 18, 2025 18:21

கடப்பாரை , கருத்து தமிழில் இருந்தால் அனைவரும் படிக்கலாம். உங்கள் இங்கிலீப்பீச English news எழுதினால் நல்லாயிருக்கும்.


Sridhar
ஜூலை 18, 2025 13:58

அதிமுகவிற்கு தனித்து ஆட்சி அமைக்கும் யோக்கியதையம் ஆளுமையும் இல்லை. மேலும் தனியே விட்டால் திமுக செய்த திருட்டுத்தனங்களுக்கு குறைவில்லாமல் செஞ்சுவிடுவார்கள். இரண்டும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள். காமராஜரே சொல்லியிருக்கிறார். ஆகவே, ஆட்சி அமைக்கும்போது அவர்கள் குடுமி பாஜாகா கையில் இருந்தால்தான் ஓரளவு நல்லாட்சி நடக்கமுடியும். பழனிசாமிக்கெல்லாம் தனி ஆட்சி மக்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்


Kulandai kannan
ஜூலை 18, 2025 12:58

அதிமுகவை தனித்து ஆட்சி அமைக்க விடக்கூடாது.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 18, 2025 13:28

என்னவோ வெற்றி பெற்றுவிட்டது போன்ற நினைப்பு ஹா ஹா ஹா .....முடிவு வரும்போது தான் எல்லோருடைய லட்சணமும் தெரியும் ......


murugan
ஜூலை 18, 2025 12:22

இந்திரா காந்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது யார் ? 1971 தேர்தலில் ஜன சங்கமும் காமராஜர் கூட்டணியில் இருந்தது. சரித்திரத்தை படித்துவிட்டு எழுதவேண்டும். அறிவுகெட்ட ஜீவியாக எழுதவேண்டாம்.


SJRR
ஜூலை 18, 2025 12:16

ஆதாரத்துடன் பேசவும். இல்லையென்றால் ரைடுதான்


vivek
ஜூலை 18, 2025 11:29

அண்ணாமலை மறுபடியும் தலைவர் ஆனால், இந்த கொத்தடிமைகளுக்கு நிக்காம பேதி ஆகுமே ..


மூர்க்கன்
ஜூலை 18, 2025 14:02

தம்பி தூங்கி முழிக்கலையா நீ?? கனவு கலைந்து ரொம்ப நேரமாச்சு?? அவனே ஒரு டம்மி பீசு அவனுக்கு போய் முட்டு கொடுக்கிற நீ எல்லாம் வேஸ்ட் பீசு??


vivek
ஜூலை 18, 2025 14:29

மூர்க்கனுக்கு சொல் அறிவும் இல்லை சுயஅறிவும் இல்லை...காலமெல்லாம் கொத்தடிமை...என்ன செய்ய...


அப்பாவி
ஜூலை 18, 2025 10:59

பா.ஜ வை ஒழித்துக்கட்ட ஒரு ஆடு போதும். இப்பவே முழிச்சிக்கிட்டு லடா பிரதேசத்துக்கு கெவுனராக்கிட்டா கொஞ்சம் தேறலாம்.


அரவழகன்
ஜூலை 18, 2025 10:55

எடப்பாடி நான் தான் முதல்வர் என சொல்வது ஏன்... முந்திரி கொட்டை வேலுமணி செங்கோட்டையன் தரும் கிலியா..


nisar ahmad
ஜூலை 18, 2025 10:21

காமராஜரை டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கொழுத்தி கொலை செய்ய முயன்ற ஜக ஆர்எஸ் எஸ் பற்றி தமிழக மக்களுக்கு நினைவூட்டினால் பஜக வுக்கு எத்தனை ஓட்டு கிடைக்கும் அண்ணாமலை


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 11:13

கட்டுக்கதை..காமராஜர் கடைசியாக சந்தித்த 1971 லோக்சபா தேர்தலில்( பிஜெபி யின் முன்னோடி) ஜனசங்கத்துடன்தான் தேசீய அளவில் கூட்டணி வைத்திருந்தார். நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் அவர்களை ஆதரித்து ஜனசங்கம் பிரச்சாரம் செய்தது. தி.மு.க அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் என்பவரை நிறுத்தி மோசமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தது .


மூர்க்கன்
ஜூலை 18, 2025 14:04

பாருங்கப்பு?? அப்புச்சி?? சாதி மதம் பாக்காத நம்ம உத்தமரு நாகர்கோவிலில் நாடார்கள் இல்லாத ஊருல போயி செயிக்க பார்த்திருக்காரு??


சந்திரன்,போத்தனூர்
ஜூலை 18, 2025 21:02

இதுதான் நல்ல சந்தர்ப்பம் பாய் அடிச்சிவிடு அடிச்சிவிடு அப்றம் இன்னக்கி வெள்ளிக் கிழமை ஒண்ணும் விஷேசம் இல்லையா? ஹாஹ்ஹா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை