உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரமாண்ட மாநாட்டுக்கு தயாராகும் அண்ணாமலை; அதிக இளைஞர்களை கட்சியில் சேர்க்க திட்டம்

பிரமாண்ட மாநாட்டுக்கு தயாராகும் அண்ணாமலை; அதிக இளைஞர்களை கட்சியில் சேர்க்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : 'சர்வதேச அரசியல்' தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நவ., 23ல் தமிழகம் திரும்புகிறார். அவர் வந்தவுடன் கட்சியில் பெருமளவு மாற்றம் இருக்கும் என, நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது தீவிரமாக நடக்கிறது.தமிழகத்தில், 2 கோடி பேரை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பா.ஜ., 'மிஸ்டு கால்' உட்பட பல்வேறு வழிகளில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுஉள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bqa6gwoz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., - அ.தி.மு.க.,விலேயே 2 கோடி என்பது கானல் நீர் போலத்தான் உள்ளது. பா.ஜ.,வில் அந்த இலக்கை எட்ட முடியாவிடினும், தற்போதுள்ள நிலையில் சில லட்சங்களை எட்டினால் போதும் என்ற அளவில் நிர்வாகிகள் பணியாற்றுகின்றனர்.அண்ணாமலை தமிழகத்தில் இருந்திருந்தால் ஏதாவது பரபரப்பு விஷயங்களை பேசி, அதிகளவு இளைஞர்களை வசீகரம் செய்திருப்பார் என, கட்சியினர் நம்புகின்றனர். இவ்வகையில், அவருடைய நவம்பர் வருகைக்கு பின் அதை நிறைவேற்ற, கட்சியினரை தன் ஆதரவாளர்கள் வாயிலாக அண்ணாமலை தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.நவ., 23ல் அவர் வருகைக்கான ஏற்பாடுகள் உறுதியாகிவிட்டாலும், மேலும் சில நாட்கள் லண்டனிலேயே தங்கி இருந்து, படிப்புக்கான சான்றிதழைப் பெற்று திரும்புங்கள் என குடும்பத்தினர் வலியுறுத்துவதால், அதுகுறித்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் அண்ணாமலை.லண்டன் பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியதும், கட்சிக்காக கோவையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி, அரசியல் களத்தில் கட்சியை உயிரோட்டம் மிக்கதாக ஆக்கும் முடிவில் அண்ணாமலை இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடத்தப்படும் பிரமாண்ட மாநாடு வாயிலாகவும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கட்சியில் புதிதாக இணைக்கலாம் எனவும், அண்ணாமலை திட்டமிடுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.கோவை, 'கொடிசியா' அரங்கில், கட்சிக்கான பிரமாண்ட மாநாட்டை நடத்தி முடித்தபின், பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுதும் ஏற்கனவே மேற்கொண்ட, 'என் மண்; என் மக்கள்' யாத்திரையை மீண்டும் துவங்கவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ganesh Kumar
அக் 22, 2024 01:07

திராவிட சித்தாந்தம் தமிசாக மக்களிடம் உடம்பில் தைத்த சிறு சிலாம்பு போல உடம்பினுள்ளே புரை ஓடி விட்டது வயதான மக்களிடம் இருந்து அதை நீக்க முடியாது ஆனால், இளைஞர்களை, இளைஞிகளை உண்மையான அரசியலுக்கு கொண்டு வர முடியும், திராவிட சித்தாந்தத்தை அழிக்க முடியும்


Ramesh Sargam
அக் 21, 2024 20:18

நவம்பரில் அண்ணாமலை வந்தபிறகு தமிழக அரசியலில் விறுவிறுப்பான ஆட்டம் இருக்கும். குறிப்பாக திமுகவினருக்கு இருக்கு பெரிய அளவில் நடுக்கம். மீண்டும் ஊழல் செய்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அப்புறம் தமிழகத்தில் தினம் தினம் தீபாவளிதான். பட்டாசு இல்லாமலே வெடிச்சத்தம் அதிகமாக கேட்கும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 21, 2024 18:50

"திராவிடம் அழிந்தால் சரி/ என்கிற இந்த மாதிரி யான வெறுப்பு அரசியல் தான் பிஜேபி யை படு பாதாளத்திலும், திமுக வை உயரத்திலும் வைத்திருக்கிறது. தொடருங்கள்.


Nakkeeran Nakkeeran
அக் 21, 2024 17:23

எப்படியோ தமிழணங்கே திராவிடம் அழிந்தால் சரி


Nakkeeran Nakkeeran
அக் 21, 2024 17:21

பீஸ்போன பல்ப் பாலிடாயிலையே து.முதல்வராக்கி கோமாளி வேசம் போட்டு நடிச்சிகிட்டு திரியுது...அண்ணாமலை ரியல் ஹீரோடா..என்ன நடக்குதுனு பார்..


Vijay D Ratnam
அக் 21, 2024 14:46

அண்ணாமலை பல்பு பீஸாகி ஆறு மாசம் ஆவுதுபா. இன்னுமா அத்த கழட்டி கடாசாம வச்சி உருட்டுறாய்ங்க.


sankaranarayanan
அக் 21, 2024 11:18

அதிமுக ஆண்ட சமயத்தில் இதே தி.மு.க. கட்சிக்காரர்களை ஊருக்கு ஊர் கிராம சபை கூட்டங்கள் நடத்த எப்படி அனுமதி அ.தி.மு.க. அரசு அனுமதி அளித்தார்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்கள். கிராம சபை கூட்டங்களை அப்போது இருந்த அரசுதானே நடத்த முன் வந்திருக்க வேண்டும் அதை அவர்கள் செய்ய தவற விட்டார்கள் அவர்களே கிராமம்தோறும் நடத்தி மக்களிடம் நெருக்கமாக இருந்திருந்தால்தான் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுருப்பார்கள் இந்த வம்பே வந்திருக்காது இப்போது ஆட்சியாளர்களை பாருங்கள் ஆட்சியார்கள் மட்டும்தான் எந்த வித கூட்டங்களும் மாநாடுகளும் போராட்டங்களும் - ஊர்வலங்களும் நடத்த அனுமதி. எதிர் கட்சிக்காரர்கள் அனைவர்க்கும் பாத்து காப்பு கருதி தடை என்கிறார்கள் நல்ல சாமர்த்தியசாலிகள். இந்த சாமர்த்தியம் அ.தி.மு.க. வினரிடம் சிறிது கூட இல்லையே இனி சொல்லி சொல்லி என்ன பயன்


k muthu
அக் 21, 2024 11:17

அண்ணாமலை வரவு தமிழகத்தில் தேசப்பற்றாளர்களுக்கு தெம்பூட்டும்.


Barakat Ali
அக் 21, 2024 10:48

புதிய இளைஞர்களா? தானே மிரட்டி மிரட்டி அரசியல் செய்து அலுத்துப்போச்சா?? இளரத்தங்கள் தேவையா ????


பெரிய குத்தூசி
அக் 21, 2024 10:27

பள்ளி கல்லுரி சென்று படித்தவர்கள் அனைவரும் படித்தவர்கள் அறிவுள்ளவர்கள் என கூறமுடியாது. படித்து படித்ததை மூலோபாயமாக செயல்படுபவர் மட்டுமே சிறந்த மனிதர். அவ்வகையில் அண்ணாமலை சிறந்த மூலோபாயமிக்க அறிவுள்ள நபர். அவர் விரும்பும் அரசியல் நிர்வாகத்தை தர தமிழகம் மக்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. சுந்தர் பிச்சையை விட மேலாக வரவேண்டிய அண்ணாமலை மோசமான தமிழக மக்களை நம்பி சிறந்த அறிவார்த்த நபரை இந்த உலகம் இழந்துகொண்டு உள்ளது. அண்ணாமலை க்கு இன்னும் நன்கு வாய்ப்புகள் உள்ளது. சுய அறிவு இல்லாத 70 சதவிகித தமிழக மக்களுக்காக தனது வாழ்க்கையை அண்ணாமலை அர்பணிப்பது வீண். 500க்கும் பிரியாணிக்கும், திராவிட திருட்டு கும்பலின் பொய்மை வேழத்திற்கு தகுந்தாற்போல் ஆடும் தமிழனையும் தானாக அறிவு வந்தால் மட்டுமே சாத்தியம். ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழனை சிந்தனையை மாற்றுவது கடினம்.


புதிய வீடியோ