உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொறுப்பு டி.ஜி.பி., நியமனம் சட்டத்துக்கு புறம்பானது: பா.ஜ.,

பொறுப்பு டி.ஜி.பி., நியமனம் சட்டத்துக்கு புறம்பானது: பா.ஜ.,

கோவை : தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெறப்போகிறார் எனத் தெரிந்தும், புதிய டி.ஜி.பி.,யை நியமிக்காமல், தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். எட்டு மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பு டி.ஜி.பி., என்பதே, சட்டத்துக்கு புறம்பான விஷயம். உடனடியாக டி.ஜி.பி.,யை நியமிக்க வேண்டும். தி.மு.க., அரசுக்கு எதிரான போலீஸ் அதிகாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., அரசு வந்ததில் இருந்து, 7 சதவீத மாணவர்கள் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார்கள். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டமே ஒரு மோசடி திட்டம். அரசியலை காவல்துறையில் கலப்பது தி.மு.க., தான். துணை முதல்வர் உதயநிதியிடம் கேள்வி கேட்டால், எந்த பதிலும் சொல்வதில்லை. முதல்வர் வெளிநாடு சென்று போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஏமாற்றுகிறார். அவர் ஜெர்மனி செல்ல வேண்டிய தேவை என்ன. டிரம்ப் விதித்த, 50 சதவீத வரி விதிப்பை யாரும் ஏற்க மாட்டார்கள். இந்தியாவும், சீனாவும் சண்டை போடக்கூடாது என, சீன அதிபர் உணர்ந்துள்ளார். வரும் நுாற்றாண்டு ஆசிய கண்டத்தின் நுாற்றாண்டு. இந்தியாவும், சீனாவும் இறங்கி வரும் போது, நம்மை எந்த நாடு கைக்கூலியாக மாற்ற நினைத்தாலும், அவர்களுக்கு படிப்பினையாக அமையும். இன்னும் ஒரு சில வாரங்களில், இந்திய ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி தீரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை