உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இலவசம் என்று கூறி தவணையில் ஆட்டோ; த.வெ.க., நிர்வாகிகளால் கட்சியில் சலசலப்பு

இலவசம் என்று கூறி தவணையில் ஆட்டோ; த.வெ.க., நிர்வாகிகளால் கட்சியில் சலசலப்பு

சென்னை : இலவசம் என்று கூறி அழைத்துச் சென்று, தவணை முறையில் கடனுக்கு ஆட்டோ வழங்குவதால், த.வெ.க.,வில் திடீர் சலசலப்பு எழுந்துள்ளது. த.வெ.க.,வில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலர்கள், கட்சியை பரபரப்பாக காட்டுவதற்கும் மக்களிடையே நன்மதிப்பை பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக, திராவிட இயக்கங்களில் நடத்தப்படுவது போன்ற நலத் திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர். த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். இதற்கான செலவை, தற்போதுள்ள நிர்வாகிகள் மட்டுமின்றி, கட்சியில் புதிதாக பதவியை விரும்புவோரும் செய்கின்றனர். மற்ற கட்சிகளில், நலத்திட்ட உதவிகள் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், த.வெ.க.,வில், வங்கிகளில் தவணை கட்டணம் செலுத்தும் வகையில், ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இலவசம் என நினைத்து, ஆட்டோக்களை வாங்க, பலரும் ஆர்வம் காட்டி நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். ஆனால், ஆட்டோக்களுக்கு முன்பணம் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது; ஆட்டோக்களைப் பெறுவோர், அதன் வாயிலாக சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தவணைத் தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கின்றனர். இதனால், நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகள் வாயிலாக ஆட்டோக்களைப் பெறுவோர், கடும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர். இலவசம் என அழைத்து வந்து பின், தவணை கட்ட வேண்டும் என்று சொன்னதும், ஆட்டோக்களை பெறுவோர், மாவட்ட நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் த.வெ.க., சார்பில் நடத்தப்படும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் சலசலப்பு ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ethiraj
மே 18, 2025 12:40

Humans with self respectust not accept anything free. Interest free or installment or subsidised amount can be accepted. Somebodys earning or saving need not be our capital


theruvasagan
மே 16, 2025 22:13

மக்களை சொல்லி தப்பில்லை. அவர்களை இலவசத்திற்கு அடிமையாக ஆக்கி சீரழித்தவர்களை சொல்லணும்.


Balasubramanian
மே 16, 2025 18:53

அட, புரிந்து கொள்ளுங்கள்! கட்சி சார்பாக உறுப்பினர்கள் போகும் போதும் வரும் போதும் வாடகை தருவார்கள்! அதைக் கொண்டு தவணை பணத்தை அடைத்து விடலாம்! மற்ற கட்சிகள் போல இலவச ஆட்டோவில் இலவசமாக பயணம் கேட்போர் இல்லை நாங்கள்!


Balaji Radhakrishnan
மே 16, 2025 15:53

எப்ப திருந்த போறாங்க.


அப்பாவி
மே 16, 2025 15:15

ஓசீ ந்னா உடனே ஓடுவாங்க.


Sakthi,sivagangai
மே 16, 2025 16:28

கொஞ்ச நாள் முன்புவரை நீயும் எதுடா ஓசியில கிடைக்கும் என்று அந்த பாஞ்சி லட்சத்தை கேட்ட ஆள்தானே இப்ப மட்டும் மத்தவங்கள குற்றம் சொல்ற


Gopal Kadni
மே 16, 2025 11:51

இப்ப சொல்லுங்க, தவெக எத்தனை சீட்டு ஜெயிக்கும். இன்னும் தோண்டவே ஆரம்பிக்கலை, அதுக்குள்ள....


தொளபதி
மே 16, 2025 11:25

திராவிட மாடல் போல் இது தவெக மாடல். தொளபதியின் ரசிகர்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகம் என்பது அறிந்ததே. செய்வதெல்லாம் இப்படித்தான். சரியாக கட்சி ஆரம்பிக்க ஓரிரு வருடங்களுக்கு முன் கல்வி உதவித்தொகை வழங்க ஆரமபித்தார்கள்.


Karthik
மே 16, 2025 10:00

விஜய் கட்சியினர் இலவசமாக ஆட்டோ தருகிறார்கள் என்ற அறிவிப்பை கேட்டதும் பொதுமக்கள் எல்லாருக்கும் சினிமாவில் விஜயின் வள்ளல் காட்சிகள் நினைவுக்கு வந்திருக்கும். நிஜத்திலும் அப்படிதான் செய்வார் என எண்ணி ஓடிய / கூடிய மக்கள் கூட்டத்திற்கு தெரியவில்லை பின்னர் அவர்கள் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் அண்ட் அப்ளை என்று சொல்வார்கள் என்று. அரசியல்ல ஜெயிக்கணும்னா ஆயிரம் ஆயிரம் பொய்களை சொல்லி மக்களை ஏமாத்தணும் அப்படிங்கறது இன்றைக்கு எழுதப்படாத விதி. அதுல முதலாவதா ஒன்ன செயல்படுத்தி தன்னோட கணக்கையும் தொடங்கி வச்சிருக்காப்ளி..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை