உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அறைக்குள் மீட்டிங் நடத்தும் தலைவர்கள் : தமிழக பா.ஜ.,வில் பலத்த குமுறல்

அறைக்குள் மீட்டிங் நடத்தும் தலைவர்கள் : தமிழக பா.ஜ.,வில் பலத்த குமுறல்

தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் தலா ஒரு மாவட்ட தலைவரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகிறது.ஆனால், மாவட்டத் தலைவர்கள் மக்களை சந்தித்து களப் பணியாற்றாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை போல், பா.ஜ., மாவட்ட தலைவர்களும், எந்நேரமும் கட்சி பணிகளில் ஈடுபட்டால் தான் தமிழகத்தில் பா.ஜ., வளரும். அண்ணாமலை மாநில தலைவராக வந்த பின், மக்களிடம் பா.ஜ.,வுக்கான எழுச்சி காணப்படுகிறது. ஆனால், மாவட்ட தலைவர்கள் மக்களை சந்திப்பது போன்ற களப்பணிகளில் ஈடுபடாமல் இருப்பதால், அந்த எழுச்சியை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்ட தலைவர்கள், கட்சி மேலிடம் தெரிவிக்கும் பிரதமர் மோடி பேசும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தங்களுக்கு வேண்டிய நிர்வாகிகளை வரவழைத்து, அறைக்குள் ஆலோசனை, 'பூத்' கமிட்டி கூட்டம் என, பல கூட்டங்களை ஒரே இடத்தில் நடத்துகின்றனர். அதுவே, போதுமான அளவுக்கான கட்சி பணி என நினைத்து, களப் பணியாற்றாமல் இருந்து விடுகின்றனர். வார்டு வாரியாக சென்று கிளை தலைவர்கள், மண்டல் தலைவர்கள் உடன் இணைந்து அங்குள்ள மக்களிடம் என்ன பிரச்னை என்று கேட்டு, அதற்காக குரல் கொடுப்பதில்லை. கட்சியில் புதிதாக சேரும் நபர்களிடம், போஸ்டர் அச்சடித்து தருமாறும், பேனர் வைக்குமாறும் கேட்டு, தொடர்ந்து செலவு செய்ய வற்புறுத்துகின்றனர். இதனால் ஆர்வமுடன், கட்சியில் சேருவோர், சில தினங்களிலேயே பா.ஜ.,வில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.கட்சி பெயரை பயன்படுத்தி தொழில் செய்வோர்களிடம், தொடர் 'வசூலிலும்' ஈடுபடுகின்றனர். மாவட்ட தலைவர்கள், மாநில மைய குழு முக்கிய நிர்வாகிகள் பரிந்துரைப்படி நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அவர்கள் சரிவர கட்சி பணியாற்றவில்லை என்றாலும், கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலையால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ளன.எனவே, சரிவர கட்சி பணிகளில் ஈடுபடாத மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு, சிறப்பாக செயல்படும் நபரை நியமித்தால் தான் கட்சி வளர்வதுடன், தேர்தலிலும் வெற்றிபெற முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

BJP BJ Jaiganesh Trichy 8
ஜன 03, 2024 23:45

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பொறுப்புகள் வாங்கிய பிறகு அவர்களது கிளை வார்டு சந்தித்தால் கட்சி தானாக வளரும் இது ஒரு சரியான நேரம்


BJP BJ Jaiganesh Trichy 8
ஜன 03, 2024 23:38

பொறுப்புகளை வாங்கி வைத்திருக்கும் தலைவர்கள் கிளை வாரியாக வார்டு வாரியாக சரியாக வலம் வந்தால் கட்சி விரைவில் அந்தப் பகுதியில் வளர்ந்து விடும் மறு சுழற்சி தானாக வரும் நிதர்சன உண்மை


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:43

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எப்படி எல்லாம் பதவியை விற்கிறார் என்பதை அந்த கட்சியினரே கூறுவதாக செய்தி வந்துள்ளது. உண்மையை இப்படித்தான் வெ ளியே கொண்டு வரவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜன 03, 2024 21:29

இல கணேசன் அல்லது ராகவன் தலைவராக கொண்டுவந்தால், பிரச்சனை தீரும். நாற்பதில் இருபது தொகுதிகளை கைப்பற்றமுடியும்.


Siva
ஜன 03, 2024 20:52

களமிறங்கினால் தான் தேற முடியும். சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்தால் பிரயோசனம் இல்லை அண்ணாமலை புரிந்து இருப்பார்.


venugopal s
ஜன 03, 2024 19:27

சமூக வலைதளங்களில் மட்டுமே கட்சியை நடத்தி தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியாது!


MARUTHU PANDIAR
ஜன 03, 2024 19:12

60ஆண்டுகளாக திராவிஷ காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில்,, பாஜவிலும் திராவிஷத்தை நினைவு படுத்தும் கச்சடா பயலுக உள்ளே நுழைந்து உள்ளார்கள் என்பது உண்மை+++அவனுகளுக்கு கட்சி பெயரை வெச்சு சம்பாதிக்கணும்.+=தமிழ்நாட்டில் மட்டும் இது தவிர்க்க முடியாதது+++ புரையோடுவதற்கு முன்பு அண்ணாமலை செயல்பட்டால் சேதாரத்தை தவிர்க்கலாம்++++கச்சடா கும்பலை கண்டு பிடித்து கடாச வேண்டும் உடனே.


Mohamed Younus
ஜன 03, 2024 18:09

அறைக்குள் கூட்டம் நடத்த கூடிய அளவிற்கு தான் அவங்களுக்கு இங்கு கூட்டம் இருக்கிறது. பின் மண்டபத்தில் கூட்டம் நடத்தினால் கூட்டம் வேண்டும் . பணம் கொடுத்து ஆட்களை கூட்டி கொண்டு வர என்ன


jayvee
ஜன 03, 2024 17:46

BJP யின் செயல்பாடு ஒரு புறம் கார்பொரேட் கம்பெனி போல உள்ளது.. மறுபுறம் அதன் RSS ராணுவம் போல செயல்படுகிறது.. ஆனால் தமிழகத்தில் சினிமா கம்பெனி போல செயல்பட்டால்தான் ஈடுபடும்.. நமது மக்களின் புரிதல் அவ்வ்ளவுதான்


deviyer
ஜன 03, 2024 17:06

பாஜாபா தென் மாநிலங்களில் தழைக்கவேண்டுமென்றால் களமிறங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நல்லது செய்தால் மட்டும் போதாது. அது மக்களிடம் போய் சேர வேண்டும். முதலில் தனி TV சேனல் உடனே தேவை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை