உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க., குழப்பத்துக்கு காரணம் பா.ஜ.,: செல்வப்பெருந்தகை

பா.ம.க., குழப்பத்துக்கு காரணம் பா.ஜ.,: செல்வப்பெருந்தகை

சென்னை : ''பா.ம.க., குழப்பத்துக்கு பா.ஜ.,வே காரணம்,'' என, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். ராமதாஸ் - அன்புமணி இடையே கடுமையான மோதல்போக்கு நிலவுகிறது. பா.ம.க.,வில் நீடிக்கும் குழப்பங்களுக்கு தி.மு.க.,வே காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டிய நிலையில், 'அது பச்சை பொய்' என ராமதாஸ் மறுத்தார். ஆனால், அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வும் சேர்ந்தால், அந்த அணி வலுவடைந்து விடும் என்பதை தடுக்கவே, தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்துவதாக அன்புமணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியை, கடந்த 20ல் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையும், மருத்துவமனைக்கு வந்து மணியை சந்தித்ததோடு, ராமதாசிடமும் சிறிது நேரம் உரையாடினார். இந்நிலையில், நேற்று திடீரென திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்துக்கு செல்வப்பெருந்தகை சென்று, ராமதாசை சந்தித்தார். அரைமணி நேரம் நீடித்த சந்திப்புக்கு பின், செல்வப்பெருந்தகை கூறியதாவது:மரியாதை நிமித்தமாக பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அரசியல் குறித்தோ, கூட்டணி குறித்தோ பேசவில்லை. ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்னையில் சமாதான பேச்சு எதுவும் நடத்தவில்லை. அவர்கள் இருவரும் சமாதானமானால் மகிழ்ச்சி.பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்களுக்கு, தி.மு.க., காரணமல்ல. அன்புமணி, புரிதல் இன்றி இப்படி கூறுகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு சூழ்ச்சி அரசியல் தெரியாது.சொல்லப்போனால் ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு, பா.ஜ., தான் காரணம். கூட்டணி கட்சிகளை உடைப்பது பா.ஜ.,வின் வழக்கம். தமிழகத்துக்கு எது நல்லதோ, அதை ராமதாஸ் செய்வார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சேருமா என்பதை, ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ems
ஜூன் 29, 2025 10:07

தி மூ கா.... சார்பில் இரு முறை ராமதாஸை சந்தித்து குழப்பம் ஏற்படுத்தியது யார்?


SP
ஜூன் 28, 2025 21:12

ஒரு தேசியகட்சியின் மாநிலத் தலைவர் இடைத்தரகர் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பது மகா கேவலம்.


madhesh varan
ஜூன் 28, 2025 16:22

இதைத்தான் ராமதாசு வெளிப்படையா சொல்லிட்டாரு, ஆனாலும் பிஜேபி கரனுங்க இன்னும் கூட்டணி கூட்டணி னு பாமக கிட்ட கேக்குறானுங்க,


Velan Iyer, Sydney
ஜூன் 28, 2025 08:07

பெரும் தொகை. உன் பெயரில் எத்தனை வழக்குகள், சொத்து இருக்கு என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


சந்திரன்
ஜூன் 28, 2025 07:54

அதிமுக ஒன்றுபட வேண்டும் என அமித்ஷா கூறுகிறார் அதுபோல பாமக ஒற்றுமையாக இருக்க அவர் ராமதாஸ்கிட்ட பேசுகிறார் இவன் மூளை இல்லாதவன். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என சொல்வாங்க இதில் இவன் எந்த கேட்டகரி என தெரியல


Thravisham
ஜூன் 29, 2025 02:17

வீட்ல பூந்து ம.. கொட்ற கும்பல்


sekar ng
ஜூன் 28, 2025 07:01

ஜாதிய வகுப்புவாத வாரிசு குடும்ப கச்சியை அந்த வகுப்பினரே ஒழிக்க வேண்டும். அடிமைகளா வாரிசுகளை தலையில் தூக்க ஸ்டாலினா


Rajasekar Jayaraman
ஜூன் 28, 2025 04:58

திருட்டு கொள்ளை கூட்டத்துக்கு பயம் இந்துக்கள் ஓட்டை பார்த்து.


சமீபத்திய செய்தி