உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு: பா.ஜ., எதிர்ப்பு

அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு: பா.ஜ., எதிர்ப்பு

திருச்சூர்: கேரள மாநிலம், பம்பையில் செப். 20ல் நடக்கும் உலக அய்யப்ப சங்கமத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்மாநில அரசுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சபரிமலைக்கு மண்டல பூஜை காலத்தில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் 20ல் கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார். 'இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்' என தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், கடந்த 21ல் தெரிவித்திருந்தார். இதையொட்டி, நேற்று முன்தினம் சென்னை வந்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அய்யப்ப சங்கம விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதற்கு கேரள பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 'சபரிமலையில் இளம் வயது பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2018ல் ஆட்சியில் இருந்த முதல்வர் பினராயி பெண்கள் சபரிமலை செல்ல அனுமதித்தார். இதன்மூலம் சபரிமலையின் பாரம்பரியத்தை முறியடித்ததுடன், இதை எதிர்த்து போராடிய அய்யப்ப பக்தர்கள் பலரையும் பினராயி சிறையில் அடைத்தார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியும் ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்தினர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் ஓட்டு வங்கியை அதிகரிக்கும் நோக்கில், அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்க ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். இது சர்வாதிகாரி ஹிட்லர், யூதர்களை கொண்டாடுவதற்கு ஒப்பானது. 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்.,- தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள், சபரிமலை நிகழ்ச்சியில் பங்கேற்பது உண்மையானது அல்ல. தேர்தலில் ஓட்டுகளை பெற நடத்தும் நாடகம். இது, ராகுல் உண்மையைப் பேசுவதற்கு இணையானது. ஒசாமா பின்லேடன் அமைதியின் துாதராக மாறுவதற்கு இணையானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rajkumar Ramamoorthy
ஆக 26, 2025 06:57

இந்த ஆளுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்.


Balakumar V
ஆக 24, 2025 23:19

வாய்ப்பில்லை. ஆக,சிறுபான்மை ஓட்டு பாதிக்கும்.


Sundar R
ஆக 24, 2025 19:57

By conducting this function by inviting the irrelevant person Stalin, it is clearly visible in the eyes of the public that organizers of the Ayyappa Sangamam are walking on the wrong path by practicing ANTI-HINDU DHARMA.


Rajan A
ஆக 24, 2025 19:39

போகாமல் இருந்தால் சேட்டன்கள் இங்கே வந்து குப்பை கொட்டுவார்கள், போனால் வெங்காயம் பகுத்தறிவு பொய்யாகி விடும். சேட்டன் ஜூரம் வந்துவிட்டது, ஆக ஒன் டே லீவ் பிளீஸ்


Gopal
ஆக 24, 2025 18:40

காசுக்கு விலை போன நரிகளின் செயல். ஒரு சனாதன எதிர்ப்பு நபரை எப்படி ஆன்மிக விழாவிற்கு அழைக்க முடியும். அவரோதான் வேண்டாம் னு சொல்லியாச்சு இல்ல விடுங்களேன்...


T.sthivinayagam
ஆக 24, 2025 16:41

அனைத்து ஹிந்துக்களும் இறைப்பணி செய்ய சட்டம் இயற்றிய ஒரே சமுக நீதி ஆன்மீக ஹிந்து தலைவர் ஸ்டாலின் ஐயா அவர்களை அழைப்பு விடுத்தது சரியே


SUBBU,MADURAI
ஆக 24, 2025 18:45

ஏலே கேனப்...யார்றா ஆன்மீகத் தலைவர் முட்டுச் சந்துல மாட்டாம ஒழுங்கா ஓடிப் போயிரு இல்லாட்டி...


vivek
ஆக 24, 2025 19:09

உள்ளே விடமாட்டாங்க சிவநாயகம்....ரொம்ப அசிங்கமா போயிடும்....பாத்துக்கோங்க


Velayutham rajeswaran
ஆக 24, 2025 16:40

முதலில் அந்த பிரணாயி விஜயனைத்தான் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் சபரிமலை புனிதத்தை கெடுக்க முயற்சித்த கயவன் அவனை


Kulandai kannan
ஆக 24, 2025 14:12

தமிழக பாஜகவும் எதிர்க்க வேண்டாம்.


Enrum anbudan
ஆக 24, 2025 13:13

செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடலாம்.


Rathna
ஆக 24, 2025 12:44

ஐயப்பனை மீறுவோர் - அசம்பாவிதம் நடக்கும். இது பல ஆயிரம் ஆண்டுகளாக நேராகவோ அல்லது மறைமுகமாவது நடக்கிறது. இது பக்தர்கள் கண்ட உண்மை.


முக்கிய வீடியோ