உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொறுப்பை தட்டி கழிக்கும் பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்கள்: தொண்டர்கள் ஆதங்கம்

பொறுப்பை தட்டி கழிக்கும் பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்கள்: தொண்டர்கள் ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக பா.ஜ.,வில், 39 லோக்சபா தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள், அப்பணியில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 39 தொகுதிகளிலும் போட்டியிட, பா.ஜ., ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் பணிகளை கவனிக்க, 39 தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளர்கள், கடந்த 2023 நவம்பரில் நியமிக்கப்பட்டனர். கூடவே ஒரு இணை ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தொகுதியில் தங்கி, பூத் கமிட்டி கூட்டம் நடத்த வேண்டும்; செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்; மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என, பொறுப்பாளர்களுக்கான பணிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.ஆனால், பலரும் கண்துடைப்பிற்காக வார இறுதியில் தொகுதிக்கு சென்று, மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பி விடுகின்றனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் யார் யார் என்பதை கூட சரிபார்க்காமல் இருப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தனிப்பட்ட ரீதியில் தொழில் வைத்து நடத்தும் பலருக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தொழிலில் பிசியாக இருக்கும் அவர்களால், கட்சி சார்பில் தொகுதி பொறுப்பாளர்களாக இருந்து, கட்சி இட்டிருக்கும் பணியை செய்ய முடியவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் திறந்து, தினமும் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்த வேண்டும் என தலைமை உத்தரவிட்டுஉள்ளது.ஆனால், பெரும்பாலான பொறுப்பாளர்கள் தொகுதிக்கே சரிவர வருவது கிடையாது. ஒரு வாரம், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, ஒரு நாள் வந்து விட்டு, அவசர கதியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, நிறைய புகைப்படங்கள் எடுத்து அதை, சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகின்றனர்.'ஒரு தொகுதியில் வசிப்பவரை வேறு தொகுதியில் பொறுப்பாளராக நியமித்துள்ளதால், அங்கு சரிவர செல்ல முடியவில்லை' என்று பொறுப்பாளர்கள் தரப்பில் இயலாமைக்கு காரணம் சொல்கின்றனர். மொத்தத்தில் பா.ஜ.,வில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டும், தேர்தல் தொடர்பான பணிகள் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி