மேலும் செய்திகள்
உலகின் வேகமான ரயில்: புதிய சாதனை படைத்தது சீனா
27-Oct-2025
புதுடில்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படு பிஸியாக உள்ளார். 2026- -- 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு, தினமும் 15 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்.பொதுவாகவே பட்ஜெட் என்றால், அதன் விபரங்கள் படுரகசியமாக இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு பட்ஜெட் தொடர்பான ஒரு சுவாரஸ்மான விஷயம், அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது; அது புல்லட் ரயில் சம்பந்தப்பட்டது.தற்போது, குஜராத் மாநிலம் ஆமதாபாத்- - மும்பை புல்லட் ரயில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2017ல் துவங்கப்பட்ட இந்த பணிகள், 2029ல் முடியும். அதற்கு முன்னதாக, 2027ல் மும்பை- - ஆமதாபாத் வழியில் உள்ள சூரத் - -வாபி பாதையில் புல்லட் ரயில் ஓடத்துவங்கும். 300 கி.மீ., வேகத்திற்கும் மேலாக செல்லக்கூடிய இந்த புல்லட் ரயில், ஜப்பான் நிதி உதவியுடன் அந்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் நான்கு புல்லட் ரயில் குறித்து அறிவிப்பு வரும்; அதில் ஒன்று தமிழகத்திலிருந்து, வடமாநிலத்திற்கு செல்லும் புல்லட் ரயில். இது தொடர்பாக ஜப்பான் அரசுடன் பேச்சு நடந்து வருகிறதாம். 'இந்த புல்லட் ரயில் கோவையிலிருந்து கிளம்பி வடமாநில நகரம் ஒன்றிற்கு செல்லும்' என்கின்றனர். கோவை மெட்ரோ ரயில் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை புல்லட் ரயில் திட்டம் நிச்சயம் வரவேற்பைப் பெரும் என்பதில் சந்தேகமில்லை.
27-Oct-2025