உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வன்மத்தின் வெளிப்பாடுதான் கார்ட்டூன்கள்; அவதுாறுகளுக்கு நான் கவலைப்பட்டதில்லை முதல்வர் ஸ்டாலின்

வன்மத்தின் வெளிப்பாடுதான் கார்ட்டூன்கள்; அவதுாறுகளுக்கு நான் கவலைப்பட்டதில்லை முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''இன்னும் எங்களை விமர்சனம் செய்யுங்கள்; எவ்வளவு விமர்சனம் வந்தாலும் மக்கள் பணி தொடரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 576 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், 32 ஜோடிகளுக்கு திருமணத்தை, முதல்வர் ஸ்டாலின், நடத்தி வைத்தார். புதுமண தம்பதியருக்கு, 4 கிராம் தங்கத் தாலி மற்றும் 70,000 ரூபாய் மதிப்பில், 47 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், முதல்வர் பேசியதாவது:

அறநிலையத்துறை சார்பில், இதுவரை 2,376 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. 150 திருமணங்கள் என் தலைமையில் நடந்துள்ளன. நான்கு ஆண்டுகளில், 177 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான, 7,655 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. நாங்கள் செய்யும் சாதனைகளை, சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணத்துடன் செயல்படுபவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுபவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையான பக்தர்கள், நம் ஆன்மிக தொண்டை பாராட்டுகின்றனர். ஒரு வார பத்திரிகையில், நான் காவடி எடுப்பது போன்றும், அமைச்சர்கள் அனைவரும் அலகு குத்தி, தரையில் உருளுவது போலவும் 'கார்ட்டூன்' இடம் பெற்றிருந்தது. அதை பார்க்கும்போது, எனக்கு பரிதாபமாக இருந்தது. பக்திதான் அவர்கள் நோக்கம் என்றால், நம் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டி இருக்கலாம். ஆனால், பல ஆண்டு கால வன்மம் அது. அந்த வன்மத்தின் வெளிப்பாடுதான் இந்த கார்ட்டூன்கள். அவர்களின் அவதுாறுகளைப் பற்றி, நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இன்னும் எங்களை கேலி, கிண்டல் செய்யுங்கள்; கொச்சைப்படுத்துங்கள்; விமர்சனம் செய்யுங்கள். எவ்வளவு விமர்சனம் வந்தாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற முறையில், உண்மையான பக்தர்களின் நலனுக்காக தொடர்ந்து செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Ramesh Sargam
ஜூலை 04, 2025 22:20

விமர்சனம் வராமல் ஆட்சி நடத்தவேண்டியதுதானே? உங்கள் ஆட்சியில் திருபுவனம் நிகழ்வு, அண்ணாபல்கலை பாலியல் வன்கொடுமை, எதிர்க்கட்சியினர் படுகொலை, குழந்தைகள் முதல் கிழவி வரை பாலியல் வன்கொடுமை என்று தினமும் செய்தி வந்தவண்ணமிருந்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க நாங்கள் என்ன உணர்ச்சியற்றவர்களா?


Bhakt
ஜூலை 03, 2025 23:16

நைனா, கவலைபட்டால் தானே ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்க தோணும்.


Venkatesh
ஜூலை 03, 2025 22:03

மாடல் கூட்டத்திற்கும் அவைகளுக்கு கூஜா தூக்கிப்பிழைக்கும் மொத்த கூட்டமும் கேடு கெட்ட கூட்டம்,. .. அவைகளுக்கு சூடு சொரணை இருக்கிறதா என்ன


M S RAGHUNATHAN
ஜூலை 03, 2025 20:29

ஸ்டாலின் அவர்கள் முரசொலியில் அவர் தந்தை வரைந்த cartoon கேலிச் சித்திரங்களை பார்த்து இருப்பார். அது கருணாநிதியின் வன்மத்தின் வெளிப்பாடு என்று அவரை அறியாமல் ஒத்துக் கொண்டுவிட்டார். ஸ்டாலின் பேசாமல் இருந்தால் நல்லது. வர வர இவர் தமிழகத்தின் ராகுல் ஆகி விட்டார். சரித்திரத்தை நன்கு அறிந்து அறிக்கை விட வேண்டும்.


Kjp
ஜூலை 03, 2025 18:47

தினசரி கொலைகள் நடக்காத நாட்களே கிடையாது. ஆனால் அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு தற்புகழ் பாடும் புராணம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 18:18

பேச்சே காமடி உளறல். கார்ட்டூன் போடாம என்ன செய்வாங்க?.


Sivakumar
ஜூலை 03, 2025 17:58

It is unusual a State dignitary like C M is givinf hia time for xonduxring marriages in a Hindu temple. What is the benefit for common public?


ram
ஜூலை 03, 2025 17:27

இது நமக்கு இன்றைக்கோ நேற்றோ நடப்பதில்லையே... காலங்காலமா நடப்பதுதானே... இதையெல்லாம் பார்த்தா அரசில் பன்ன முடியாதுல்லே...


theruvasagan
ஜூலை 03, 2025 17:01

காவடி எடுக்கறது எல்லாம் கஷ்டமான வேலை. நோன்பு கஞ்சி குடிக்கிற மாதிரியோ கேக் சாப்பிடுகிற மாதிரியோ போட்டிருந்தாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும். சாப்பிடுவதில் கில்லியாச்சே.


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2025 16:24

இன்னும் எங்களை விமர்சனம் செய்யுங்கள் எவ்வளவு விமர்சனம் வந்தாலும் "மக்களை ஏமாற்றும்" பணி தொடரும், என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.இப்படி படித்தால் சரியான அர்த்தம் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை