உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பழனிசாமியை கேலி செய்து கார்ட்டூன்; தி.மு.க., தொழில்நுட்ப அணி மீது புகார்

பழனிசாமியை கேலி செய்து கார்ட்டூன்; தி.மு.க., தொழில்நுட்ப அணி மீது புகார்

கோவை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கேலி செய்து, சமூக வலைதளத்தில் கார்ட்டூன் பதிவிட்ட தி.மு.க., தொழில்நுட்ப அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை போலீஸ் கமிஷனரிடம், அ.தி.மு.க., தொழில்நுட்ப அணியினர் புகார் அளித்தனர்.கடந்த 17ம் தேதி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து, தி.மு.க., தொழில்நுட்ப அணியினர், ஒரு போஸ்டர் பதிவிட்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w5qw56a5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் பழனிசாமி சட்டையின்றி படுத்திருப்பதுபோன்றும், அவரது பின்னால் ஒரு கழுதை நிற்பது போலும் சித்தரித்து, 'கீழடியாவது தாய்மடியாவது, நமக்கு எப்பவுமே டாடி மோடி மடி தான்' என்ற வாக்கியத்துடன் பதிவிட்டுள்ளனர். கீழடி தொடர்பாக வெளியிட்ட இந்த சர்ச்சை கார்ட்டூன், அ.தி.மு.க., மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க., தொழில்நுட்ப அணியினரும், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கார்ட்டூன் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., தொழில்நுட்ப அணியினர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அ.தி.மு.க., தொழில்நுட்ப அணி மண்டல செயலர் விக்னேஷ் கூறுகையில், ''முன்னாள் முதல்வரான பழனிசாமியை தவறாக சித்தரித்து, சமூக வலைதளத்தில், அருவருக்கத்தக்க வகையில் கார்ட்டூன் வெளியிட்டுள்ளனர். ''தி.மு.க., தொழில்நுட்ப அணியினர் மீதும், அதன் மாநில செயலர் ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள பதிவை உடனடியான நீக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mahendran Puru
ஜூன் 24, 2025 10:37

கார்ட்டூன் உண்மை நிலவரத்தை நச்சுன்னு சொல்லாதே. இதில் கொந்தளிப்பு ஏனாம்?


M Ramachandran
ஜூன் 21, 2025 01:19

கொடுத்தா காசீர்க்குலையய்க்கும் தெரு நாய்கள். அதை பெரிது படுத்தாமல் முன்னேரி செல்ல வேண்டும்


Arul Narayanan
ஜூன் 20, 2025 18:30

சட்டை மட்டுமா இல்லை? வேஷ்டியும் தான்.


அசோகன்
ஜூன் 20, 2025 15:28

தூங்குவது அப்பா ஸ்டாலின் அரசு...... மோடி அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றியுள்ளது........ மோடியின் ஆட்சியில் தான் இந்தியா வளர்ச்சி என்றால் என்றே பார்க்கிறது....... நேதாஜி விவேகானந்தரே இருந்தாலும் கேவலமாக பேசும் இந்த கேடுகெட்ட கூட்டத்திற்கு நாட்டு பற்று எல்லாம் கிடையாது..... பணம் பெண் பற்று மட்டும்தான்


venugopal s
ஜூன் 20, 2025 14:12

மிகவும் பொருத்தமாக உள்ளது! இதைப் பார்க்கும் போது நகைச்சுவை நடிகர் செந்தில் ஞாபகம் வருகிறது! அப்போது கவுண்டமணி யார் என்று புரிந்திருக்குமே?


SUBBU,MADURAI
ஜூன் 20, 2025 18:26

ஏலே அறிவாலய அடிமை வேணு உன் அப்பாவை ஸ்டாலினை அல்ல உன் ஒரிஜினல் உன்னை பெற்ற அப்பாவை இதே போல் கார்ட்டூன் போட்டால் நீ இதே போல்தான் ஜாலியாக கருத்தை பதிவிடுவாயா?


கண்ணன்,மேலூர்
ஜூன் 20, 2025 18:27

அப்படீன்னா கவுண்டமணி உன் அப்பாவாத்தான் இருக்கும் சரிதானே


எஸ் எஸ்
ஜூன் 20, 2025 14:10

திமுகவின் தரம்


புரொடஸ்டர்
ஜூன் 20, 2025 08:58

சசிகலா பாதங்களில் மட்டுமே ஈபிஎஸ் நிரந்தரமாக சரணாகதி.


Supporter
ஜூன் 20, 2025 14:41

காங்கிரஸ், திமுகவில் வாரிசுகளை தவிர தலைமைக்கான வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. பாஜக வில் ஜனநாயக முறையில் தேர்வு. எம்ஜியாரோ ஜெயலலிதா அவர்களோ அடுத்த தலைமை பற்றி எந்த ஒரு முறையையும் கையாளவில்லை. மிக கண்ணியமான EPS அவர்கள் ஒரு காலகட்டத்தில் சசிகலாவிடம் பணிய வேண்டியிருந்தது துரதிர்ஷ்டவசமானது தான். அந்த ஒரு நிகழ்வைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழக வரலாற்றின் கண்ணியமான தலைவர்கள் பட்டியலில் நிச்சயம் அவருக்கு இடம் உண்டு. ஆனால் வெட்கம் கெட்டு காலமெல்லாம் ஒரு குடும்பத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் திமுகவினருக்கு எடப்பாடி அவர்களை விமர்சிக்க கால் தூசி அளவுக்குக்கூட அருகதையில்லை. MGR காலம் தொட்டு இன்று வரை தரக்குறைவு திமுகவின் நிரந்தர அடையாளம்.


Oviya Vijay
ஜூன் 20, 2025 08:44

ஹே... நல்லா இருக்கேப்பா இந்த கார்ட்டூனு... பகுத் அச்சா ஹே...


vivek
ஜூன் 20, 2025 13:08

முதல்வர் திறந்த கட்டிடம் விரிசல்.... டயர் கழன்று ஓடிய பஸ் ....இதை பத்தி முட்டு ஓவியரின் கருத்து என்னவோ


Sakthi,sivagangai
ஜூன் 20, 2025 18:30

அப்பம் சாப்பிட்ற மாதிரி கார்ட்டூன் போட்டா இதைவிட நல்லாருக்கும்ல Oviya Vijay இதெப்பிடியிருக்கு SUPERB.


புதிய வீடியோ