உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்காளர் பட்டியல் படிவம் நிரப்புவதில் குழப்பமோ குழப்பம்; புரிந்தால் எளிதாக நிரப்பலாம் என்கிறது தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியல் படிவம் நிரப்புவதில் குழப்பமோ குழப்பம்; புரிந்தால் எளிதாக நிரப்பலாம் என்கிறது தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதில், வாக்காளர்கள் இடையே பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன. அப்படிவத்தை புரிந்து கொண்டால், எளிதாக பூர்த்தி செய்யலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.படிவங்களை வழங்கிய ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவற்றை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை வாக்காளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை.இதனால், வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். படிவத்தில் சில கேள்விகளும் குழப்பம் அளிப்பதாக உள்ளன.மேலும், பல ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கே, அப்படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை.இந்நிலையில், வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி என, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் எஸ்.தேன்மொழி கூறியதாவது:ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்படும். இரண்டையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் ஒன்றை, ஓட்டுச்சாவடி அலுவலரின் கையெழுத்து பெற்று, வாக்காளர்கள் வைத்துக் கொள்ளலாம்.மற்றொரு படிவத்தில், புகைப்படம் ஒட்ட வேண்டிய இடத்தில் தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும். படிவத்தில் மூன்று பட்டியல் இடம் பெற்றுள்ளது. முதல் பட்டியலில், வாக்காளர் தன் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.அதில், தந்தையின் புகைப்பட அடையாள அட்டை எண் தெரியாவிட்டால், அதை பூர்த்தி செய்யாமல் விட்டு விடலாம். இரண்டாம் பட்டியலில், 2002 மற்றும் 2005ல் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, அதை பூர்த்தி செய்ய வேண்டும்.வாக்காளர் பட்டியல் விபரங்கள் 2002 திருத்தப் பட்டியலில் இல்லை என்றால் 2005ல் இருக்கும். அதனால் இரண்டில் எதில் விபரங்கள் இருக்கிறதோ அதை பயன்படுத்தி கொள்ளலாம். 2002 மற்றும் 2005ல் பட்டியலில் இடம்பெறாதவர்கள், அந்த பகுதியை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.அவர்கள் மூன்றாம் பட்டியலை பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாம் பகுதியை பூர்த்தி செய்தவர்கள், மூன்றாம் பகுதியை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.மூன்றாம் பகுதியில், உறவினரின் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தந்தை, தாய் விபரங்களை பூர்த்தி செய்யலாம்.இப்பட்டியலில் சிலர் பெயர் என்பதில், வாக்காளர்களின் பெயரையே குறிப்பிட்டு விடுகின்றனர்.அங்கு, தந்தை, தாய் பெயரை தான் குறிப்பிட வேண்டும். உறவினர் பெயரில், வாக்காளரின் தாத்தா அல்லது பாட்டி பெயரை குறிப்பிட வேண்டும். ஒரு சிலர் தாய் பெயரை குறிப்பிட்டால், தந்தை பெயரை, உறவினர் பட்டியலில் பூர்த்தி செய்யலாம்.மேலும், 2002 மற்றும் 2005ம் ஆண்டில், தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை https://voters.eci.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், கணக்கீட்டு படிவம் அளித்த அலுவலரிடம் கேட்டு தெரிந்து பூர்த்தி செய்யலாம்.சந்தேகங்கள் இருந்தால், ஒவ்வொரு படிவத்திலும், ஓட்டுச்சாவடி அலுவலரின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தீராத சந்தேகம்

தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, கணக்கீட்டு படிவம் வழங்குகின்றனர்.அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி, மீண்டும் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.ஆனால், பெரும்பாலான இடங்களில், தி.மு.க.,வினர் படிவங்களை வினியோகம் செய்வதுடன், பூர்த்தி செய்த படிவங்களை வாங்கிச் செல்கின்றனர். அவை முறையாக ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுமா, அதை முறையாக அலுவலர்கள் ஆய்வு செய்வரா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

இன்னும் வரவில்லை

தமிழகத்தில், 78 சதவீதம் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் பெரும்பாலானோர் தங்கள் பகுதிகளில் படிவங்கள் வினியோகம் வரவில்லை என்று, புகார் தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் படிவங்கள் கிடைப்பதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

P Karthikeyan
நவ 14, 2025 12:51

தமிழ்நாட்டுக்கு தேர்தலே வேண்டாம் ..குடும்ப ஆட்சி இருக்கு . டாஸ்மாக் இருக்கு மாசம் ஆயிரம் ருபாய் கொடுக்கறாங்க ..மக்கள் முழிச்சிகிட்டா உடனே ஒன்றிய அரசு பாரபட்சம் என்று ஒரு போராட்டம் .. மத்திய அரசு நேரடியாக எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அதற்க்கு எதிர்ப்பு .. இவுங்களே அமெரிக்கா ஐரோப்பா ஜப்பான் ஸ்பெயின் நாடுகளுக்கு குடும்பத்தோடு சுத்திட்டு வருவாங்க கேட்டா நாங்களே நேரடியா முதலீடு கொண்டுவருவோம் என்று பீத்தல் பெருமை ..அப்படியே யாராவது கம்பெனி வந்தால் அவனிடம் கமிஷன் கட்டிங் கேட்டு அவன் அப்படியே ஆந்திர கர்நாடக ஓடிவிடுவான் ...சொரணையே இல்லாமல் தமிழகம் இப்படியே இருக்கட்டும் ..


கணேசன்
நவ 14, 2025 10:17

திமுகவினர் தீயாயாக வேலை செய்கின்றனர் பாராட்டுதலுக்கு உரியது. திமுகவினர் படிவங்களை விநியோகம் செய்வதும் அதை பூர்த்தி செய்து திரும்ப வாங்கி அலுவலர்களிடம் திரும்ப கொடுக்கிறேன் என்று வாங்கி செல்வதும் சரியாகப்படவில்லை திமுகவினர் அல்லாதவர்களின் விண்ணப்பங்களை இவர்கள் அலுவலர்களிடம் சமர்ப்பித்தார்களா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது


Saai Sundharamurthy AVK
நவ 14, 2025 08:56

எந்த குழப்பமும் இல்லை. படிவத்தில் உள்ள வார்த்தைகளை நன்றாக படித்து புரிந்து கொண்டாலே போதும். படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தும் விட்டோம்.


sankaranarayanan
நவ 14, 2025 08:44

பெரும்பாலான இடங்களில், தி.மு.க.,வினர் படிவங்களை வினியோகம் செய்வதுடன், பூர்த்தி செய்த படிவங்களை வாங்கிச் செல்கின்றனர். அவை முறையாக ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுமா, இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் அரசாங்கமே இதை தடுக்க வேண்டும் எந்த கட்சியார்களுக்கும் அவர்களது விண்ணப்பத்தாளை தவிர மற்றவர்களின் விண்ணப்பத்தாளை கொடுக்கவே கூடாது எல்லோரும் படித்தவர்கள் அப்படி படிக்காதவர்கள் அல்லது சந்தேகம் இருப்பவர்கள் அந்த அரசாங்க ஊழியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்திக்கொள்ளலாம் எந்த காரணத்த கொண்டும் கட்சியாளர்கள் கையில் விண்ணப்பங்களை கொடுத்thu அனுப்பக்கூடாது


சாமி
நவ 14, 2025 07:53

எங்க ஏரியாவுக்கு வந்த பெண்மணி ஏதோ பால்வாடியில் வேலை பாக்குறவங்களாம். ஏழெட்டு கிளாஸ் படிச்சிருக்கும். அவங்களைப் போட்டு எல்லோரும்.மொய்ச்சு எடுத்து உயிரை வாங்கிட்டாங்க. பாவம்.


அப்பாவி
நவ 14, 2025 07:51

இந்தியாவில் எந்த படிவம் ஒழுங்கா இருக்கு? உயிரோட இருக்குற என்னிடம் டெத் சர்டிபிகேட் கேட்டவங்க இருக்காங்க.


Kulandai kannan
நவ 14, 2025 07:21

BLOs are totally inefficient


Subramanian
நவ 14, 2025 06:38

They don’t say that you can leave blank if it is not there. That is where all confusion


Kanakala Subbudu
நவ 14, 2025 05:49

ஒரு குழப்பமும் இல்லை. சரி பார்க்க வரும் பணியாளர்களிடம் சரியான புரிதல் இல்லை என்றால் தான் குழப்பம். முதல் தடவை இந்த பணிக்கு வருபவர்கள் வேண்டுமானால் குழம்பலாம். கட்சிகாரர்கள் கூட வரக்கூடாது


புதிய வீடியோ