உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்: தி.மு.க.,வுக்கு மீண்டும் குடைச்சல்

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்: தி.மு.க.,வுக்கு மீண்டும் குடைச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“ஆட்சியில் பங்கு கேட்போம்; 25 தொகுதிகள் தந்தால் ஏற்க முடியாது,” என, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் கூறியதற்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், ஆதரவு அதிகரித்து வருவதால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18ல் வெற்றி பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xm7cn3sy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், தங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக, அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில், முணுமுணுப்புகள் எழுந்தன. உரிய மரியாதை எனவே, வரும் சட்டசபை தேர்தலில், கூடுதல் தொகுதிகளை, தி.மு.க., கூட்டணியில் பெற வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியில் வலுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் கட்சி துவக்குவதற்கு முன், ராகுலை சந்தித்து பேசினார். அவர், காங்கிரசில் இணையும் மனநிலையில் இருந்தார். அவருக்கு இளைஞர் காங்., தலைவர் பதவி கொடுக்க காங்கிரஸ் விரும்பியது. ஆனால், வயது விதிமுறை காரணமாக, பதவி கொடுக்க முடியாமல் போனது. அவர் இப்போதும் ராகுலின் செயல்பாட்டை பாராட்ட தவறவில்லை. ராகுல் கைது செய்யப்பட்டதும் கண்டனம் தெரிவித்தார். கூட்டணி என்பது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 'இண்டி' கூட்டணியில், தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. ஆனால், கேரளாவில் காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அது அந்த மாநில அரசியல். வரும் 2026ல் தமிழகம் சந்திப்பது, மாநில சட்டசபை தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் உரிய மரியாதையை எதிர்பார்க்கிறது. கடந்த காலங்களைப் போல காங்., தொடர்ந்து செயல்பட முடியாது. அதனால், இம்முறை காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பீஹார் தேர்தல் முடிந்ததும், ராகுல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். அதன்பின், தமிழக அரசியலில் காங்.,கின் தேர்தல் கணக்குகள் முழுமையாக மாறும். கடந்த 1967க்கு பின், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது, காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கிறது. திரண்ட கூட்டம் அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டிய கடமை, கட்சி தலைவர்களுக்கு உள்ளது. தமிழக காங்கிரசின் நிலவரத்தை, கட்சி மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்து உள்ளோம். கூட்டணி பேச்சு நடக்கும் போது, அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். மேலிடம் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு ராஜேஷ்குமார் கூறினார். ராஜேஷ்குமார் இதற்கு முன்பும் இதே போலவே பேட்டி அளித்திருந்தார். தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, நடிகர் விஜயுடன் கூட்டணி சேர வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. திருச்சியில் நடந்த நடிகர் விஜயின் பிரசார கூட்டத்துக்கு திரண்ட கூட்டத்தை கண்ட பின், ராஜேஷ்குமாரின் கருத்தை காங்., கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஏற்றுக்கொண்டு கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே லோக்சபா எதிர்கட்சித் தலைவராக ராகுல் பதவி ஏற்ற போது, அவருக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துக்கு, ராகுலும் நன்றி தெரிவித்தார். அந்த விஷயங்களை, காங்கிரசார் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

pakalavan
செப் 15, 2025 15:06

இப்படி ஏதீவது செய்தியப்போட்டு ஆறுதல் பட வேன்டியதுதான், சோனியா ராகுல் ரென்டுபேரும் ஸ்டாலின் சொல்வதை மீறாமல் செய்பவர்கள்


ஆரூர் ரங்
செப் 15, 2025 11:51

வி.சி தலைவர்களை நிற்க வைத்தே பேசி இவ்வளவுதான் உங்களுக்கு என முகத்தில் அடித்தது போல கூறி அனுப்பிவைத்தார் கருணா. இப்போ ஒருபடி மேலே போய் காங் வேட்பாளர்களையும் திமுக வே தேர்ந்தெடுத்து அறிவிக்கப் போகிறது. நிரந்தர அடிமை பீட்டருக்குக் கூட சீட் கிடையாதாம். ஒரே இலக்க எண்ணிக்கையில்தான் ஒதுக்கீடு. பாவம்.


எஸ் எஸ்
செப் 15, 2025 10:41

செய்தியில் கடைசி வரிதான் முக்கியம் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அப்புறம் என்ன திமுக தலைமை ராகுலிடம் பேசி கொடுக்கும் சீட்டுகளை வாங்கி கொள்வார்கள்


Haja Kuthubdeen
செப் 15, 2025 09:35

தனித்து நின்றால் ஒரு சீட் கூட ஜெயிக்க தெம்பில்லாத காங்கிரசுக்கு பேராசைதான்...25 சீட்டே அதிகம்தான்.


பேசும் தமிழன்
செப் 15, 2025 07:38

அப்போ அடுத்த முதல்வர் செல்வப்பெருந்தகை தான்.. ம்.. நடக்கட்டும் நடக்கட்டும். கான் கிராஸ் கட்சி அழிய வாழ்த்துக்கள்.. நாட்டை பிடித்த கேடு கான் கிராஸ் கட்சி. அது இருப்பதை விட இல்லாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது !!!


Oviya Vijay
செப் 15, 2025 07:28

தமிழக மாநில காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி கொடுப்பதாக கூறுவதெல்லாம் திமுகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ஏனெனில் அது ஒரு தேசியக் கட்சி... தலைமை என்ன கூறுகிறதோ அதை அப்படியே செவிமடுக்க வேண்டுமேயன்றி அதற்கு வேறு ஒரு அதிகாரமும் கிடையாது. தலைமையில் தான் ராகுல் இருக்கிறாரே. அவர் ஸ்டாலினை நண்பர் என்று தானே அழைக்கின்றார். இது போதாதென்று சென்டர் மீடியன் தாண்டிச் சென்று ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து வேறு நட்பை வளர்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி 40க்கு 40 அள்ளியதை மேலிடம் மறக்குமா என்ன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் மத்தியில் ஆட்சியமைக்க திமுகவின் தயவு தேவை என்பதை நன்கு உணர்ந்தவர். ஆகையால் தேர்தல் சமயத்தில் திமுகவுடன் சுமூக உறவை பேணுவார்களேயன்றி அவர்களுக்குள் சச்சரவு வர வாய்ப்பேயில்லை. 1996ல் தேசியத் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படாமல் வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து ஜெயித்துக் காட்டிய மூப்பனார் போல் திறன் மிக்க தலைவர்கள் யாரும் தற்போது தமிழக காங்கிரஸில் இல்லை... தற்போதைய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையே தான் ஒழிய அவர் ஒன்றும் செல்வாக்கு பெருந்தகை அல்ல...


vivek
செப் 15, 2025 08:07

எதற்கும் இதயம் பத்திரம்


Moorthy
செப் 15, 2025 07:13

லோக் சபாவில் ஒன்பது எம்பிக்கள் தமிழக காங்கிரஸ்க்கு. ஆகவே 54 எம்மெல்லேய் சீட் சரியான odhukkeedu..


Sun
செப் 15, 2025 06:18

இவர் எந்த கற்பனை உலகத்தில் இருக்கிறார்? காங்கிரசுக்கு இம்முறை 15 தொகுதி தி.மு.க ஒதுக்கினாலே அது பெரிய விசயம்?


vivek
செப் 15, 2025 06:05

ஓவிய விஜய் பக்தர் இதயம் பத்திரம்


ராமகிருஷ்ணன்
செப் 15, 2025 05:29

நுங்கு கூட திமுக தராது. மானம் கெட்ட அடிமையாக இருக்க வேண்டியது தான்


A viswanathan
செப் 15, 2025 21:22

காங்கிரஸ் இல்லாத மாநிலமாக வேண்டும் தமிழகம்.அதற்கு திமுகவின் ஆசி வேண்டும்.


புதிய வீடியோ