வாசகர்கள் கருத்துகள் ( 1 )
In my view this is right strategy for Telengana
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது; அங்கு ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். ராகுல், தினமும் பிரதமர் மோடியை வசை பாடி வரும் நிலையில், மோடியை பாசமாக தன் அண்ணன் என அழைக்கிறார், ரேவந்த் ரெட்டி. 'காங்கிரசின் அரசியல் எதிரியான, மோடியை எப்படி அண்ணன் என சொல்லலாம்; இது, அவமானம்' என, காங்., தலைவர்கள் கோபத்தில் உள்ளனர்.ஆனால், ரேவந்த் ரெட்டியோ எது குறித்தும் கவலைப்படாமல், மத்திய அரசுடன் நட்போடு பழகுவதோடு, மோடியையும் பாராட்டி வருகிறார். இதற்கு காரணம் உண்டு. தெலுங்கானா சட்டசபை தேர்தலில், எப்படியாவது காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சகட்டு மேனிக்கு இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசினார் ரெட்டி. முதல்வரான பின் தான், இலவசங்களுக்கு பணம் இல்லை என்பது தெரிய வந்தது. ஆகவே தான், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறார். 'எனக்கு என் மாநில மக்களும், என் தேர்தல் அறிக்கையும் தான் முக்கியம்; இதற்காக எதுவும் செய்ய தயார்' என்கிறாராம் ரேவந்த் ரெட்டி.'மோடியை அண்ணா என அழைப்பதால், மத்திய அரசிடமிருந்து கிட்டத்தட்ட, 26,000 கோடி ரூபாய், தெலுங்கானாவிற்கு கிடைத்துள்ளது. அத்துடன், ஹைதராபாதை சுற்றி வட்டப்பாதை அமைக்கவும், மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளதாம். ஹைதராபாதை சுற்றியுள்ள நகரங்களை இணைக்கும் இந்த வட்டப்பாதையின் நீளம், 340 கி.மீ.,'இந்த திட்டத்திற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி, பல முறை முயற்சி செய்தும், மத்திய அரசு உதவவில்லை; ஆனால், அதை நான் சாதித்து விட்டேன்' என்கிறாராம் ரேவந்த் ரெட்டி.ரெட்டியின் மோடி பாசம், உள்ளூர் பா.ஜ., தலைவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், மோடியோ காங்கிரசில் எப்படியாவது ஏதாவது பிளவு ஏற்படாதா என்கிற நோக்கத்தில் தான், ரெட்டிக்கு உதவி செய்வதாக டில்லி பா.ஜ.,வினர் நம்புகின்றனர்.
In my view this is right strategy for Telengana