உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிவாவுக்கு எதிராக காங்., கொந்தளிப்பு; காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு

சிவாவுக்கு எதிராக காங்., கொந்தளிப்பு; காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க., துணைப் பொதுச்செயலர் சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக காங்கிரசார் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.'காமராஜர் இறக்கும்போது, கருணாநிதி கையை பிடித்து, நீங்கள் தான் ஜனநாயகத்தை காக்க வேண்டும்' என கூறியதாக, சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் சிவா பேசி உள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவா பொது வெளியில் தெரிவித்த கருத்துகள், வரலாற்று உண்மைகளையும், அரசியல் மரியாதையையும் முற்றாக மீறியவை.

'ஏசி' இல்லாமல்

காமராஜர் 'ஏசி' இல்லாமல் துாங்க மாட்டார் என்ற குற்றச்சாட்டும், அவர் இறப்பதற்கு முன், கருணாநிதியின் கைகளை பிடித்து, ஜனநாயகத்தை காப்பாற்றச் சொன்னார் என சிவா கூறியதும் உண்மையற்ற கற்பனை.காமராஜரின் வாழ்க்கை தமிழக அரசியலிலும், இந்திய மக்களின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை பற்றி தவறாக பேசுவது, வரலாற்றின் மீதான அவமதிப்பாகவே கருதப்படுகிறது. காமராஜர் குறித்து பொறுப்பில்லாமல் பேசியுள்ள சிவா, உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணி துணைத் தலைவர் பழனிவேல் கூறுகையில், ''தமிழக மக்கள் மட்டுமல்ல; நாட்டில் வாழும் அனைத்து மக்கள் நல்வாழ்வுக்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, அப்பழுக்கற்ற தலைவராக வாழ்ந்தவர் காமராஜர். அவரை கொச்சைப்படுத்துவது போல் பேசிய சிவா, வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.தமிழக காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுசாமி கூறுகையில், ''மேனாமினுக்கி அரசியல் செய்பவருக்கு, காமராஜரை பற்றி என்ன தெரியும்? காமராஜர் இறப்பதற்கு இரண்டு மாதம் முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். https://www.youtube.com/embed/ISetllwmYOg

எம்.பி.,யாக்கிய பாவம்

''வீட்டை விட்டு, அவர் எங்கேயும் செல்லவில்லை. அப்படியிருக்கும்போது, சாகும் நிலையில் கருணாநிதியை எப்படி சந்தித்திருக்க முடியும்? நல்ல மனிதர்களை ஒதுக்கி, சிவாவை எம்.பி.,யாக்கிய பாவத்தை, தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ''இனியாவது இப்படி பொய்யாக சரடு விடுவதை, சிவா உள்ளிட்ட தி.மு.க.,வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இரு தலைவர்களும் தற்போது இல்லை என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ''அதையும் இந்த தமிழ் சமூகம் நம்பும் என்று நினைத்துக் கொண்டு, இஷ்டத்துக்கு பொய் பேசிக் கொண்டிருந்தால், அதற்கான விளைவுகளை சிவா போன்றவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.இந்நிலையில், இந்த விஷயத்தை விவாத பொருளாக்க வேண்டாமென சிவா கேட்டுக் கொண்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Haja Kuthubdeen
ஜூலை 17, 2025 16:59

அதென்ன திருச்சி சிவா...அவரோட தலை கருணாநிதி பெருந்தலைவரை பேசாத பேச்சு இருக்கா...புரட்சிதலைவர் ஒருத்தர் மட்டும்தான் அவருக்கு மரியாதை கொடுத்தவர்....இதெல்லாம் காங்கிரஸ்காரனுக்கு தெரியுமோ தெரியாதோ????


Haja Kuthubdeen
ஜூலை 17, 2025 16:54

பெருந்தலைவர் காமராஜ் ஐயாவை விட மாணங்கெட்ட காங்கிரசுக்கு குறிப்பா அதன் தமிழக ஏஜன்டுகளுக்கு சில எம் எல் ஏ..எம் பி சீட்டே முக்கியம்...ஏனெனன்றால் பெருந்தலைவர் யாரெண்றே இவனுங்களுக்கு தெரியாதே...


Haja Kuthubdeen
ஜூலை 17, 2025 16:50

எதிர்த்து அறிக்கை விடுவது எல்லாம் அல்லு சில்லுகள்.சிதம்பரமோ செல்வ பெருந்தகையோ திருநாவுக்கரசோ வாய திறக்க மாட்டாய்ங்க...திறந்தால் எம் எல் ஏ..எம் பி சீட் கிடைக்காது...


theruvasagan
ஜூலை 17, 2025 16:06

ரொம்பத்தான் பொங்கிட்டாங்களோ. கண்டனம் தெரிவித்தவர்கள் எல்லாம் அல்லு சில்லு தலைவர்கள். பெருந்தலைகள் எல்லாம் அஆலயத்தில் சாமரம் வீசிக்கொண்டு பிசியா இருகக்குறாங்களாம்.


kumar
ஜூலை 17, 2025 12:44

கடவுளே,இப்படியாவது பிரிந்து போவீர்களா? கூடா நட்பு கேடாய் முடியும்


lana
ஜூலை 17, 2025 11:47

இந்த வெக்கம் கெட்ட காங்கிரஸ் கட்சி இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளது. அவர்கள் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி ஐ கொன்ற சிறை கைதிகள் விடுதலை க்கு கட்டி பிடித்த தத்தி க்கு எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. அவர்கள் க்கு தேவை 10 mla 4 mp பதவி மட்டுமே. இந்த வெட்கம் மானம் சூடு சுரணை இதெல்லாம் தேவை இல்லாத extra லக்கேஜ் for காங்கிரஸ் கட்சி க்கு


naranam
ஜூலை 17, 2025 11:38

என்ன பேசினாலும் சொரணையில்லை!


SUBBU,MADURAI
ஜூலை 17, 2025 12:38

இறந்து ஐம்பது வருடம் ஆகியும் அந்த மனுஷன் இவிங்கள கதற விட்டுக்கிட்டு இருக்காரு பாத்தியா! யாரு நம்ம ஈ.வெ.ராமசாமி தானே? திமுக உபிஸ்களை கதற விடுவது நம்ம பெருந்தலைவர் காமராஜர் ஐயாடா...


Ragupathy
ஜூலை 17, 2025 10:55

அடப்பாவி...ஏசி இல்லாமல் தூங்க மாட்டாரா.. கோயபல்ஸ் கூட இப்படி புளுகமாட்டான்...கட்டுமரம் தான் உண்ணாவிரத நாடகத்துக்கு ஏசி ...ஃபேன் வைத்துக் கொண்டார்...


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 10:39

அடுத்து காமராசர் அன்றாடம் பன்னீரில் குளித்தார். பட்டாடை மட்டுமே உடுத்திக் கொள்வார். கடற்கரையில் கூலர் வைத்துக் கொண்டு 2 மணிநேர உண்ணாவிரதம் இருந்தார். பட்டாயாவில் பகட்டான வீடு வைத்திருந்தார். மூன்று வேளையும் 5 ஸ்டார் ஒட்டல் சிக்கன் பிரியாணி சாப்பிடுவார் எனக் கூட பிரச்சாரமே செய்வார்கள். வெட்கமில்லாமல் கூட்டணி வைத்துள்ள கதர் சட்டைகள் அளிக்கும் தைரியம்.


முக்கிய வீடியோ