உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நீதித்துறையில் நிலவும் ஊழல் நம்பிக்கையை குலைக்கிறது

நீதித்துறையில் நிலவும் ஊழல் நம்பிக்கையை குலைக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், அத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஐரோப்பிய நாடான பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தின் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு அவர் பேசியதாவது: நீதித்துறையை சுதந்திரமாகவும், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும் கொலீஜியம் அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு துறையும் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறது. நீதித்துறையிலும் சில தவறான நடத்தைகள் மற்றும் ஊழல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதனால், நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் விரைவான, தீர்க்கமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் வாயிலாகவே அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்-.நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே தேர்தலில் போட்டியிடுவது அல்லது அரசின் பிற பதவிகளை பெறுவது, நீதித் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அவ்வாறு செய்வது, நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பக்கூடும். நீதித்துறை நீதியை வழங்குவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டும்.நானும், என்னுடன் பணிபுரியும் நீதிபதிகளும், பணி ஓய்வுக்கு பின் ஒருபோதும் அரசு வழங்கும் பதவி மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என பொதுவெளியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:23

நீதித்துறையில் ஊழல் இருந்தால், மக்கள் தங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்லி நீதி கேட்கமுடியும்?


c.mohanraj raj
ஜூன் 05, 2025 17:50

சாமி என்றும் தெய்வம் என்றும் மயிலாடு என்றும் உங்களை அழைக்கின்றார்கள் ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்.


பாரதி
ஜூன் 05, 2025 16:58

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய இந்த நீதி முறை வருவதற்கு முன்னால் வரை இந்த நாடு பல லட்சம் ஆண்டுகளாக குற்றமற்ற நாடாக இருந்துள்ளது. அது எப்படி முடிந்தது என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது...


MUTHU
ஜூன் 06, 2025 13:26

ஒரு சில தனி நபர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் பொதுவாக இந்தியர்கள் ஒழுக்கமானவர்களாகவே இருந்துள்ளனர்.


புரொடஸ்டர்
ஜூன் 05, 2025 13:12

பணம் பாதாளம் மட்டுமல்ல


Balaji
ஜூன் 05, 2025 12:10

What about his remarks about TASMAC. Is he fair on his part.


அப்பாவி
ஜூன் 05, 2025 09:03

என்னமோ அவிங்கள்ளாம் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து குதிச்சமாதிரி பேச்சு. எல்லாம் ஒரே இந்திய ஸ்டாக் தான்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 05, 2025 07:43

வக்கீல் கள் தான் நீதிபதிகள் ஆகிறார்கள். அவர்களில் எவ்வளவு பேர் நேர்மையாக உள்ளனர். நீதிபதி என்பவர் கடவுள் போன்றவர். விருப்பு வெறுப்பு கூடாது. அதை கடைபிடித்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வரும்


கண்ணன்
ஜூன் 05, 2025 07:41

அவரவர்கள் தங்கள் முதுகுகளில் உள்ள அழுக்கினைக் கழுவ முயற்சிக்க வேண்டும் ஊருக்கு உபதேசம் செய்யும் கம்யூக்களைப் போல் இருக்க வேண்டாம்


Padmasridharan
ஜூன் 05, 2025 06:56

ஏற்கனவே காவல்துறைமேல், லஞ்சம் வாங்கி குற்றவாளிகளை வளரவிட்டதனால நம்பிக்கை போயிடிச்சு.. இப்ப இந்த நீதி துறையும் சமூகத்துல இந்த ரெண்டு துறையும் இரண்டு கண்கள் போன்று விழிச்சுகிட்டு உண்மைய பாதுகாக்கணும் ஆனா அரசியல் பொய்கள் மற்ற இடத்திலயும் நிறைய பொய்களையும் ஊழலையும் வளர்த்துவிட்டுருக்கு. இதுல வேற NOTA வோட்டு போட்டாலும் அதன் பயனில்லாமல் போகுது. எல்லாரும் தங்கள் குடும்பவம்சத்துக்கு சேர்க்கிற கர்மா பலன்களை மறந்து பாவ மூட்டைகளை சேர்த்துக்கிட்டே போறாங்க. கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு பணம் கொடுத்து கண்ணுக்கு தெரிஞ்ச மனுஷன் கிட்ட அதிகார பிச்சை கேட்கறாங்க. இவங்க முகத்தை எந்த தைரியத்துல கண்ணாடில பார்த்துக்கறாங்கனு தெரியல.. 60 வயசுல ஒழிஞ்சுபோற குற்றவாளிகளுக்கு 80/90 வயசு வர உயர்த்தி மருத்துவர்கள் அவங்க வீட்டுல நிரப்பிக்கறாங்க.. தேர்வு முறையிலும் வேலை இடத்திலும் ஊழல். என்ன சாமி இது


SIVAKUMAR
ஜூன் 05, 2025 06:48

அப்பாடா இப்போதுதான் நீதி துறையில் நிலவும் ஊழலை கண்டு பிடித்திருக்கிறார் ஆச்சர்யம் தான்


சமீபத்திய செய்தி