உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எச்சில் இலை எடுப்பதிலும் காசு பார்க்கும் கவுன்சிலர்கள்: தூய்மை பணியாளர்கள் போராட்டம்

எச்சில் இலை எடுப்பதிலும் காசு பார்க்கும் கவுன்சிலர்கள்: தூய்மை பணியாளர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: எச்சில் இலையிலும் காசு பார்க்கும் நகராட்சி கவுன்சிலர்கள் மீது அதிருப்தியடைந்த துாய்மை பணியாளர்கள் கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி எல்லைக்குட்பட்ட 24 வார்டுகளில் 13 திருமண மண்டபங்கள், 50க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.திருமண மண்டபங் களுக்கு வரும் விருந்தினர்கள், ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவு அருந்தி விட்டு போடும் எச்சில் இலைகளை சீர்காழி நகராட்சியில் சொற்ப சம்பளத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் அகற்றிவிட்டு அதற்காக உரிமையாளர்கள் அன்பளிப்பாக அளிக்கும் தொகையை பெற்று அதனை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.இந்நிலையில், சில வாரங்களாக நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் திருமண மண்டபங்கள், உணவகங்களில் போடப்படும் எச்சில் இலைகளை தனியே ஊழியர்களை வைத்து அகற்றிவிட்டு தொகையை வசூல் செய்து கொள்வதாக கூறப் படுகிறது. எச்சில் இலைகளை அகற்ற சென்ற துாய்மை பணியாளர்களிடம் கவுன்சிலர்களால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தகராறு செய்துள்ளனர்.எச்சில் இலையில் கூட காசு பார்க்கும் நகராட்சி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து, ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த நகராட்சி கமிஷனர் மஞ்சுளா, புகார் அளிக்குமாறு துாய்மை பணியாளர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Santhanam
ஆக 24, 2025 22:31

இதைவிட கேவலம் வேறு ஏதும் இல்லை திருந்தாத ஜென்மங்கள்


Anantharaman Srinivasan
ஆக 23, 2025 23:04

எச்சில் இலையில் மட்டுமல்ல. சாப்பிட்டு கழியும் இடத்தில் 100 ரூபாய் போட்டாலும் அதையும் ஓடிவந்து பொறுக்குவார்கள்.


Ramesh Sargam
ஆக 23, 2025 20:54

அவர்கள் கவுன்சிலர்கள் அல்ல, எச்சில் இலையிலும் காசு பார்ப்பதால் எச்சிலர்கள்.


D.Ambujavalli
ஆக 23, 2025 17:11

நூற்றுக்கணக்கான எச்சில் இலைகளை அப்புறப்படுத்திவிட்டு 50, 100 என்று சில்லறை பார்க்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் இந்த அற்ப காசில் பங்களாவா கட்டிவிடப்போகிறார்கள்? அல்பத்தனத்தின் பெயர்தான் திராவிடம் என்பதற்கு இதற்குமேல் சான்று வேண்டுமா?


எவர்கிங்
ஆக 23, 2025 15:02

இனி இதை ஒழிக்க முடியாது


அப்பாவி
ஆக 23, 2025 14:11

எல்லோரும் அப்படித்தான். எங்க ஊரில் அப்பார்ட்மெண்ட்களில் குப்பை அள்ள தூப்புரவு பணியாளர்களுக்கு துட்டு குடுக்கணும்.


suresh guptha
ஆக 23, 2025 17:36

GIVING AMT TO THEM IS NOT CRIME AS WE DON T BARGAIN IN GARMENT SHOPS OR GOLD SHOP DONT INSSULT THEM PL


D Natarajan
ஆக 23, 2025 12:31

காசே தான் கடவுளடா. என்ன கேவலமான வழி பணம் சம்பாதிக்க . மனசாட்சியே இல்லாத ஈனப்பிறவிகள். 2026 ஒன்று தான் வழி, மக்களே ஒன்று சேருங்கள், ஒழித்துக் கட்டுங்கள்


ராமகிருஷ்ணன்
ஆக 23, 2025 12:02

திமுக ஆட்சியில் எச்சில் இலையில் காசு அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரையில் ஊழல் காசு என்று ஒழியும் இந்த கேடுகெட்ட திராவிட கும்பல்கள் எத்தகைய கேவலமான செயல்களையும் செய்து பணத்தை சுருட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.


V RAMASWAMY
ஆக 23, 2025 11:49

அரசியலே சுரண்டலுக்குத் தானே?


, கோபாலன்
ஆக 23, 2025 11:36

பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளையும் வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். இவர்களே தமிழர் என்றோரு இனம் உண்டு. தனியே அவர்கொரு குணமுண்டு என்று கூறிக்கொண்டே உள்ளனர்


சமீபத்திய செய்தி