உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோர்ட் உத்தரவு வழங்கவும் லஞ்சம்!

கோர்ட் உத்தரவு வழங்கவும் லஞ்சம்!

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:

பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் குமுறல்:

திருப்பூரில் சிறு தொழில் செய்கிறேன். தொழில் அபிவிருத்திக்காக கேட்டால் நியாயமான வட்டியில் கடன் உதவியும் வழங்கி வருகிறேன். என்னுடன் நெருங்கிப் பழகிய குடும்பத்தினர், அவர்களது தொழில் அபிவிருத்திக்காக லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்றனர். அதற்கு ஈடாக காசோலை வழங்கி உத்தரவாதம் அளித்தனர்.ஆனால் கடன்தொகையினை திருப்பித்தரவில்லை. தற்போதும் வசதியாகவே வாழ்கின்றனர்; தொழில் செய்கின்றனர். பேச்சு நடத்தியும் பலனில்லாமல் போனதால் கோர்ட்டில் முறையிட்டேன். எனக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. மோசடியாளரின் சொத்துக்களை, வழக்கில் இணைக்க கோர்ட் உத்தரவிட்டது. உத்தரவு நகல் வழங்க கோர்ட் ஊழியருக்கு 500 ரூபாய் தண்டம் அழ வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது வக்கீலிடம் முறையிட்டேன். 'இதுபற்றியெல்லாம் பேசினால் என் தொழில் பாதிக்கும்' எனக்கூறினார். அதன்பின் எதிர் தரப்பினரின் சொத்துக்களுக்கான 'அட்டாச்மென்ட்' செய்வதற்கான உத்தரவை நேரில் விநியோகிக்க வேண்டுமென்று கோர்ட் ஊழியர் தெரிவித்தார் அவருடன் நானும் பயணித்தேன். ஆர்டர் சர்வ் செய்வதற்கான செலவு எனக்கூறி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.'கையில் 500 தான் உள்ளது' என்று கூறி கொடுத்தேன். வாங்கமறுத்த அவர் 'எந்த காலத்தில் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்?' என கடிந்து கொண்டவாறே வாங்க மறுத்தார். அதன்பிறகு குறிப்பிட்ட தொகையை விடாப்பிடியாக கேட்டு பறித்து கொண்டார். பிறதுறைகளில் குறை என்றால் கோர்ட்டில் முறையிடலாம். கோர்ட்டிலேயே குறை என்றால் எங்கே போய் முறையிடுவது?தொடரும்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Gajageswari
பிப் 04, 2026 05:29

விசாரணைக்கு பட்டியலிட லஞ்சம் வழங்க வேண்டும்.


Sitaraman Munisamy
பிப் 03, 2026 19:23

அவர் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் vao கைது செய்ய வேண்டும். ஒரு கோர்ட் உத்தரவு வழங்குவதற்கு 5000 எதற்கு


உண்மை கசக்கும்
பிப் 03, 2026 02:52

நீதிமன்றங்கள் பணப்பேய்கள் நடமாடும் இடம். ஒவ்வொரு செயலுக்கும் அங்கு பணம் இல்லாமல் நடக்காது. கேட்க யாருக்கும் தைரியம் இல்லை


நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2026 12:55

தங்களின் பணியை செய்வதற்க்கே லஞ்சம் கொடுக்கும் நிலையை திராவிட கட்சி உருவாக்கி வைத்துள்ளது, இனியும் அந்த கட்சி தமிழகத்துக்கு தேவையா என்று மக்கள் உணரவேண்டும்


Raghavan
பிப் 02, 2026 12:30

உச்ச நீதிபதி ஒருவரின் வீட்டிலிலேயே சாக்கு மூட்டையில் பணம் இருந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது லஞ்சம் வாங்குவது என்பது இப்போது உச்ச நீதிமன்றம் வரை விரிவடைந்திருக்கிறது. இதற்கு நாம் தலை குனிய வேண்டும். இதில் இருந்தே தெரிகிறது எப்படி தங்க முடி காரனுக்கும் மற்றோரு அமைச்சருக்கும் கீழ் நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கினார்கள் என்று. இப்போது பணம் பாதாளம் வரை பாயும். பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கலாம். சென்ற மாதம் ஒரு பிரபலம் சொன்னார் கிட்டத்தட்ட 95% நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று. ஆண்டவனக்குத்தான் வெளிச்சம்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 02, 2026 21:34

மற்றவர்கள் இலஞ்சம் வாங்கினால் தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.


Sesh
பிப் 02, 2026 12:19

முன்பு தவறு செய்வதற்கு துணை போக லஞ்சம் வாங்கினர், இப்போது சரியான செயலை செய்வதற்கு அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்காமல் செய்வதில்லை , இத்தனைக்கும் அதிக சம்பளம் அரசு கொடுக்கிறது .வன்முறை மற்றும் naxal முறை நோக்கி நாடு செலுத்தப்படுகிறது. அச்சமாகவுள்ளது .


southindian
பிப் 02, 2026 10:54

நாங்கள் லஞ்சத்திக்கே லஞ்சம் கொடுத்து தான் எல்லோரையும் கைக்குள் வைத்திருக்கிறோம். நீங்க வேற


krishnaraj
பிப் 02, 2026 10:02

Justice Sabotaged Due to 90%Vested-Corrupt-Useless AdvocateJudges. For Better Justice, Appoint Judges Only from Affected LiterateLitigantsCommon People With PostSelection Legal Trainings& Continuation-Promotions Based on UnBiased-Quality-Fast-CheapCost Judgements


Murali
பிப் 02, 2026 09:30

இதற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்ள.


Sekar Times
பிப் 02, 2026 08:51

லஞ்சம் ஊழல் ஒழிய ரகசியமாக சாட்சி தயாரித்து புகார் செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை