உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹாரிகளை விமர்சித்துவிட்டு நாடகம் போடுவதா?

பீஹாரிகளை விமர்சித்துவிட்டு நாடகம் போடுவதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளை, தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.,வைச் சேர்ந்தோர் அவமதித்து பேசுகின்றனர். ஆனால், பீஹாரிகளை தங்கள் மாநிலங்களில் அவமதித்து பேசும் தி.மு.க., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தலைவர்களை ஆர்.ஜே.டி., கட்சி தேர்தல் பிரசாரத்துக்காக பீஹாருக்கு அழைக்கிறது. இது தான் பீஹாரிகள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை' என பிரதமர் மோடி, பீஹாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக பதில் அளிக்க, அவரை விமர்சித்து தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருவரும் வெளியிட்ட அறிக்கைகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6in9jdtg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் என்ற பொறுப்பில் இருக்கிறோம் என்பதை, மோடி அடிக்கடி மறந்து விடுகிறார். இது போன்ற பேச்சுகளால், தன் பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என, ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிஷா, பீஹார் என, எங்கு சென்றாலும், பா.ஜ.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தை கொட்டுகின்றனர். தேர்தல் அரசியலுக்காக வன்மத்தை வெளிப்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்காக, தமிழக மக்களின் முதல்வர் என்ற முறையில், என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெருமைமிக்க இந்தியாவில், ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும், பீஹார் மக்களுக்கும், பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற, அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது, பிரதமரும், பா.ஜ.,வினரும் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான், தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்; எதிர்பார்க்கிறேன். நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை தேர்தல் பிரசாரத்தின்போது, 'வயிற்று பிழைப்புக்காக வரும் வட மாநிலத்தவர்களை, தமிழகத்திற்குள் தி.மு.க., அனுமதிக்காது' என சூளுரைத்தபோது, முதல்வரே, தேச ஒற்றுமை எங்கே போனது? 'பீஹாரிகள், தமிழகத்தில் கழிப்பறை கழுவுகின்றனர்' என தி.மு.க., - எம்.பி., தயாநிதி கூறியபோதும், 'பானி பூரி விற்பவர்கள்' என முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியபோதும், வேற்றுமையில் ஒற்றுமை எங்கே போனது? பீஹார் மக்களை பொது வெளியில் வசைபாடி அவமதிக்கும் உங்களின் போக்கைத்தான், பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். தேச ஒற்றுமையை பேணும் இச்சமூகத்தில், வடக்கு, தெற்கு பிரிவினையை உண்டாக்க துடிக்கும் உங்கள் முயற்சி எடுபடாது. பொழுதுபோகாவிட்டால், வட மாநிலத்தவரை வசைபாடி வன்மத்தை கக்குவது; பீஹாரில் தேர்தல் வந்தால், வட மாநிலத்தவரை, 'பிரதர்' எனக் கூறி, 'இண்டி' கூட்டணியினருடன், 'போட்டோ ஷூட்' நடத்துவது என்பது போன்ற தி.மு.க., நடத்தும் பம்மாத்து நாடகங்களை, ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்து விட்டனர். உங்களின் இரு முகன் வேடம் களைந்து விட்டது. நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Suppan
நவ 01, 2025 18:39

உங்க கட்சியின் தயாநிதி, ராசா, ராஜா, பொன்முடி, துரைமுருகன் போன்றோர் பேசிய பேச்சுக்களை உங்கள் கூட்டாளி தேஜஸ்வி யாதவ் அப்பொழுதே கண்டித்துள்ளார். நீங்கள் அப்பொழுது வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது பிஹார் போனால் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். அங்க போய் எந்த மொழியில் பேசப்போகிறீர்கள். ஹிந்தி நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அதுவும் "இந்தி தெரியாது போடா" அப்படின்னு உங்க திருமகனார் சட்டையில் அச்சடித்துப் போட்டுக்கொண்ட போஸ்டரை பீகாரில் காணலாம்.


ManiK
நவ 01, 2025 16:43

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா போல் எங்கும் வாழ்வதில்லை. இது இந்த தீயமுக ஸ்தாலின் ஐயாக்கு பிடிக்கவில்லை போல.


VenuKopal, S
நவ 01, 2025 13:03

வன்ம‌த்‌தின் முழு உருவம் தீய சக்திகள். அவர்களை நன்றாக பீஹார் ரிகள் வைத்து செய்வார்கள்


T.sthivinayagam
நவ 01, 2025 15:22

தமிழக கோவில்களில் பீகார் பண்ட்டிக்களை குருக்கள்கள் ஆக்காமல் இருந்தால் சரி என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.


கூத்தாடி வாக்கியம்
நவ 01, 2025 10:06

இப்போ ஹிந்தி தெரியும்


V RAMASWAMY
நவ 01, 2025 10:04

அதே போல் முதல்வர் என்பவர் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்து சில சமூகத்தினரை உயர்த்தியும் சில சமூகத்தினரை தாழ்த்தியும் வைத்து பேசுவதும் சலுகைகள் அளிப்பதும் ஏன் ?


Rajarajan
நவ 01, 2025 09:51

என்ன செய்யறது ?? வாழ்க்கை ஒரு வட்டம். முன்னர் செய்தது, தற்போது பூமராங் போல திருப்பி தாக்குகிறது. மதுவை அறிமுகப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறதே ? ஒரு விரல் அடுத்தவரை சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கி சுட்டிக்காட்டும்.


Venkat esh
நவ 01, 2025 09:43

மாண்பை பற்றி பேசத் தகுதி இல்லாத முதல் ஆள்


Barakat Ali
நவ 01, 2025 08:38

வடக்கன்ஸ் என்று கிண்டல் செய்தது .... பீகாரிகளை மிரட்டி மொபைல் போன்களை பறித்தது, பீகாரிகளை அடித்து உதைத்தது போன்ற அட்டூழியங்களை செய்தது திமுகவினரே ....


T.sthivinayagam
நவ 01, 2025 21:47

திராவிடர்கள் கட்டிய கோவில்களில் திராவிடர்கள் கருவறைக்குள் வரகூடாது என்று கூறுபவர்கள் பீகாரிகளை பற்றி பேசுவது நாடகம் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.


raja
நவ 01, 2025 07:55

எப்போ தமிழன் ஆனார்...


Venugopal S
நவ 01, 2025 07:40

பாஜகவில் சேர்ந்து விட்டால் ....எல்லாமே போய் விடுமோ?


kjpkh
நவ 01, 2025 11:20

திமுகவை சேர்ந்து விட்டால் எல்லாம் போய்விடுமா. உதாரணம் செந்தில் பாலாஜி ரகுபதி முத்துசாமி எவ. வேலு


Rajasekar Jayaraman
நவ 01, 2025 11:31

கேள்வியில் தெரிகிறது ₹. 200/- உண்டு டாஸ்மாக் திறந்து இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை