உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஏரியாவிலும் திரண்டது கூட்டம்; மாயவரம், சீர்காழியில் பழனிசாமி உற்சாகம்

தி.மு.க., ஏரியாவிலும் திரண்டது கூட்டம்; மாயவரம், சீர்காழியில் பழனிசாமி உற்சாகம்

சென்னை: தி.மு.க., பலமாக உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறையில், தன் பிரசார பயணத்திற்கு திரண்ட கூட்டத்தால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உற்சாகமடைந்து உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு, கடந்த 7ம் தேதி முதல், சட்டசபை தொகுதி வாரியாக பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w5tt43t8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியை தந்த கோவை மாவட்டத்திலிருந்து, தன் பயணத்தை பழனிசாமி துவங்கினார். மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் பெரும் கூட்டம் திரண்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில், தி.மு.க., பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., வென்றது. ஆனாலும், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய சட்டசபை தொகுதிகளில், தற்போது பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு கூட்டம் திரண்டது. இதனால், உற்சாகமடைந்த பழனிசாமி, இந்த இடங்களில் தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'காவிரி டெல்டா மாவட்டங்களில் எப்போதுமே தி.மு.க., அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அது மட்டுமல்லாது, இந்த மாவட்டங்களில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். 'இப்பகுதியிலேயே பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு, கோவைக்கு இணையாக கூட்டம் திரண்டுள்ளது. இது, தி.மு.க., அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது'என்றனர்.மயிலாடுதுறையில் திரண்ட கூட்டத்தால் உற்சாகமடைந்த பழனிசாமி, அம்மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளை பாராட்டிஉள்ளார். மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Iyer
ஜூலை 19, 2025 22:13

 வோட்டுக்கு பணம் தந்தால் அதை வாங்கிவைத்துக்கொள்.  ஆனால் மறந்தும் - வோட்டுக்கு பணம் கொடுப்பவனுக்கு - வோட்டு போட்டு விடாதே.  உன் வோட்டுக்கு 1000 தருபவன் - ஜெயித்து வந்தால் - உன்னுடைய நலத்திட்டத்தில் இருந்து 10000 திருடுவான்


Mariadoss E
ஜூலை 19, 2025 19:49

அது தானா சேர்ந்த கூட்டம் இல்ல, தேடி சேர்த்த கூட்டம். இது ஒட்டு கணக்கில வராது.


Haja Kuthubdeen
ஜூலை 19, 2025 20:03

ஸ்டாலின்..உதய நிதிக்கு வரும் கூட்டம் தானாக சேர்ந்ததா..பொருமல் ஜாஸ்தியா தெரியுதே...


S Kumar
ஜூலை 24, 2025 15:45

200


Haja Kuthubdeen
ஜூலை 19, 2025 19:37

டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை திருவாரூர்... தஞ்சை... மன்னார்குடி... திருத்துறைபூண்டி...கீழ்வளூர் தொகுதிகளில் கம்யூனிஸ்ட்கள் அதிகம்.பாரம்பரிய காங்கிரஸ் ஓட்டுகளும் விசியும் பலம்...முஸ்லிம்களும் அதிகம்.புரட்சிதலைவர் அம்மா காலத்திலும் இதான் நிலை...கூட்டணி பலம் திமுகவுக்கு சாதகம்.நான் அஇஅதிமுக என்றாலும் உண்மை நிலவரம் இதான்.


kamal 00
ஜூலை 19, 2025 18:00

அப்படியே திராவிட மங்கிஸ் நோட்டா வுக்கு கீழ போனா அந்த கிரெடிட் அண்ணாமலைக்கும், எடப்பாடிக்கும் தான்.....


kamal 00
ஜூலை 19, 2025 17:58

அட போங்க.... தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி 5 நாள் நேரு மாமா தான் விளையாடுவார்..... எப்படி எங்க எலும்பு வீசணும் னு அவருக்கு தெரியும்


Kadaparai Mani
ஜூலை 19, 2025 15:54

Massive crowds are turning for Edappadi palanisamy. People are speaking with him with great enthusiasm. This time landslide victory for AIADMK and jumbo alliance


Narayanan Muthu
ஜூலை 19, 2025 12:29

கூடுற கூட்டமெல்லாம் வோட்டாக மாறாது என்பது கடந்த கால வரலாறு. நோட்டு குவார்ட்டர் பிரியாணி கொடுத்தா கூட்டம் கலை கட்டும் என்பதும் கண்கூடு.


Haja Kuthubdeen
ஜூலை 19, 2025 18:27

வமித்தெரிச்சல் தாங்க முடியாதவர்கள் ஏதாவது காரணம் சொல்லி மனதை தேற்றி கொள்ளுங்கள்.ஸ்டாலினுக்கும் எடப்பாடியாருக்கும் தெளிவா இது பற்றி தெரியும்.உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு இன்னும் நல்லா தெரியும்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 19, 2025 10:53

ஆளும் கட்சி திமுகவிற்கு வந்தால் அது பணம் கொடுத்து கூட்டியது. அதே எதிர்கட்சி அஇதிமுகவிற்கு வந்தால் திரண்ட கூட்டம். என்னே ஊடக தர்மம் அஇஅதிமுக கட்சி பத்திரிக்கை தினமலர் ???


Haja Kuthubdeen
ஜூலை 19, 2025 18:36

பத்திரிக்கை தர்மம் இப்பதான் கண்ணுக்கு தெரியுதா நண்பரே...இருக்கும் அனைத்து பத்திரிக்கை..ஊடகம் எல்லாம் அஇஅதிமுகவை கறித்து கொட்டுவதும்..மக்களுக்கு சம்பந்தமே இல்லாத விவாத மேடை செய்ததும் நாடே அறியும்.போக போக எடப்பாடி செய்தியே இனி தலைப்பு செய்தி...


Thayumanavan Asok
ஜூலை 20, 2025 12:12

எதிர்கட்சி காசு கொடுத்து கூட்டம் சேர்க்க பண பலம் கிடையாது.


c.k.sundar rao
ஜூலை 19, 2025 09:36

With gathering of thousands of people during election speeches, will it transform into votes during voting?


vns
ஜூலை 19, 2025 09:21

கூட்டத்திற்கு வருபவர்களில் 60% பேர் தான் வாக்களிப்பர்.


Kjp
ஜூலை 19, 2025 11:38

உங்களுக்கு ஏங்க வைத்தெரிச்சல்


Haja Kuthubdeen
ஜூலை 19, 2025 18:38

ஏனுங்கோ..பாக்கி 40% அமெரிக்கா போயிடுவாங்களா!!


முக்கிய வீடியோ