உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புது திட்டமெல்லாம் வேண்டாம்: பி.எஸ்.என்.எல்.,லை திட்டித் தீர்க்கும் வாடிக்கையாளர்கள்

புது திட்டமெல்லாம் வேண்டாம்: பி.எஸ்.என்.எல்.,லை திட்டித் தீர்க்கும் வாடிக்கையாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சிக்னல்' பிரச்னை, 'நெட்வொர்க்' பிரச்னை போன்ற பல சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 'ரீசார்ஜ்' கட்டணங்களை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இருப்பினும், பழைய உள்கட்டமைப்புடன் கூடிய 'டவர், நெட்வொர்க், சிக்னல்' பிரச்னைகளால், கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் திண்டாடி வருகிறது.கடந்த ஆண்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 'ரீசார்ஜ்' விலையை திடீரென உயர்த்தியபோது, பலரும் பி.எஸ்.என்.எல்., 'சிம் கார்டு'கள் வாங்க படையெடுத்தனர். அப்போது கிடைத்த வாடிக்கையாளர்களை, இந்நிறுவனம் தக்கவைக்கத் தவறி விட்டது. குறிப்பாக, தமிழகத்தில் '4ஜி சிம் கார்டு'க்கு மாறியவர்களில் பலர், 'சிக்னல்' கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவர்ச்சிகரமான புதிய அறிவிப்பு ஒன்றை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுதும், வெறும் 1 ரூபாய் செலுத்தி, அனைத்து சேவைகளையும் பெற முடியும் என தெரிவித்துள்ளது.'4ஜி' சேவைகளை, இலவசமாக சோதித்து பார்க்கும் வகையில் இந்த சலுகை திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், தினசரி 2 ஜி.பி., டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகள் உண்டு என்றும், இதற்கான சிம் கார்டும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பி.எஸ்.என்.எல்., சிக்னல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில். '1 ரூபாய்க்கு திட்டமெல்லாம் வேண்டாம்; முதலில் சிக்னல் பிரச்னையை சரி செய்யுங்கள்' என, வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் கூறியதாவது:நான் பி.எஸ்.என்.எல்., சிம் கார்டை பயன்படுத்தி வந்தேன். சிக்னல் பிரச்னை ஏற்பட்டதால், தனியார் டெலிகாம் நிறுவனத்தின் சிம் கார்டுக்கு மாறினேன். கடந்த ஆண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்த்தியதால், குறைந்த கட்டண சேவைகளுக்காக, மீண்டும் பி.எஸ்.என்.எல்., சிம் வாங்கினேன். ஆனால், தற்போதும் சிக்னல் பிரச்னைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.வீட்டில் உள்ள முதியவர்களுக்காக சிம் கார்டு வாங்கி கொடுத்தால், பேசி கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மருத்துவமனையில் மருந்துகள் வாங்க பணம் அனுப்ப வேண்டும் என்றால் கூட, சிக்னல் இல்லாததால் அனுப்ப முடியவில்லை.டெலிகாம் நிறுவனத்தின் அடிப்படை கடமை, தடையில்லா இணைப்பை வழங்குவதே. ஆனால், பி.எஸ்.என்.எல்., இந்த விஷயத்தில் மிக மோசமாக செயல்படுகிறது. வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்தாலும், அவர்கள் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை.ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு வழங்குவது சரிதான். ஆனால், நெட்வொர்க் இல்லாமல் அதை வாங்கி என்ன பிரயோஜனம்?இவ்வாறு வாடிக்கையாளர் கூறினர். தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் விலையை ஒப்பிடும்போது, பி.எஸ்.என்.எல்., கட்டணம் குறைவாக தான் உள்ளது. லாப நோக்கம் பார்க்காமல் சேவை கிடைத்து வந்தது. நாட்டில் உள்ள மலை கிராமங்கள் வரை நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்தினர். இப்போது, இந்த நிலைமை மாறிவிட்டது. என்னதான் சிறப்பு சலுகைகள் அறிவித்தாலும், வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாத நிலையில் தான் அவை உள்ளன.- சத்தியபாலன்,முன்னாள் டெலிகாம் ஆலோசனை குழு உறுப்பினர். போலீசுக்கே 'சிக்னல்' பிரச்னைதமிழக போலீசாருக்கு, சி.யூ.ஜி., முறையில், பி.எஸ்.என்.எல்., சிம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒரு காவலர், தன் குடும்பத்திற்கு, ஏழு சிம் கார்டுகளை பெற முடியும். ஆண்டுக்கு 350 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் கட்டணம் செலுத்தி, அளவில்லா அழைப்புகளை பேச முடியும்.இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன்களுக்கு, கடந்த சில மாதங்களாக சிக்னல் பிரச்னை இருந்து வருகிறது. இதனால், அவர்களின் அன்றாட தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு தீர்வு காணுமாறு, தமிழக பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளருக்கு, தமிழக போலீஸ் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஐ.ஜி., கடிதம் எழுதியுள்ளார்.***- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

spr
ஆக 03, 2025 17:44

அரசு இதனை முன்னேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசு நிறுவன அதிகாரிகளே தனியார் நிறுவனக் கைபேசி இணைப்புக்களையே வைத்திருக்கின்றனர். அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உற்பத்தித்திறன் என்றால் என்னவென்றே தெரியாது சலுகைகளால், பணியில் மூத்தவர் என்றெல்லாம் பதவி பெற்றவர்களுக்குத் தொழில் நுணுக்கம் தெரியாது மொத்தத்தில், தனியார் நிறுவனங்களுக்கு உதவதற்காகவே அரசு முதல் அதிகாரிகள், தொழிலாளர்கள் என அனைவராலும், திட்டமிட்டு அழிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பி,எஸ், என் ,எல். மாறன் சகோதரர்கள் தொடர்ந்திருந்தால் அவர்கள் சுயநலத்துக்காகவாவது இந்நிறுவனம் முன்னேறியிருக்கும் தனியாருக்கு மாறுவது கடினம் இருக்கும் மற்ற இருவரும் விடமாட்டார்கள் மக்களாகவே மூடினால்தான் உண்டு


அப்பாவி
ஆக 03, 2025 17:34

பி.எஸ்.என்.எல் விற்பனைக்கு வந்தால் எல்லாரும் போட்டி போட்டு வாங்குவாங்க. அவிங்க சர்வுஸ் அர தண்டம். ஆனா, அவிங்க ரியல் எஸ்டேட் மதிப்பு எக்கச்சக்கம். யாருக்காவது வித்து, அவிங்களை விட்டு மூடு விழா பண்ணச் சொல்லலாம்


Murali Vedha
ஆக 03, 2025 14:29

பேரு வெச்சியே சோறு வெச்சியா என்று மறைந்த சின்ன கலைவாணர் ஒரு படத்தில் கூறுவார் அதுபோல் பேசுவதற்கு கட்டுப்பாடு இல்லை என்று கூறும் bsnl டாட்டா வை சரியாக கொடுக்கும் வசதி இல்லை அதற்கு ஏதாவது செய்யுங்கள்


aaruthirumalai
ஆக 03, 2025 13:34

bsnl நாசமாபோச்சு


Subash BV
ஆக 03, 2025 12:56

Bharat already going for 6G.


mani
ஆக 03, 2025 12:52

பேசாம ஏர் இந்தியா மாதிரி ஊத்தி மூடச் சொல்லுங்கப்பா.


Anantharaman Srinivasan
ஆக 03, 2025 18:48

ஏர் இந்தியாவை ஊத்தி மூடியாச்சா..? எப்ப மணி..


visu
ஆக 03, 2025 08:25

சிக்னல் கிடைப்பது பெரும் பாடு அட அது விடுங்க சண்டே அன்று ரேச்சர்ஜ் செய்தல் கூட வேலை செய்வதில்லை இப்பகூட 10 Rs டாப் அப் இருக்கு ஆனா அதை நீங்க ரேச்சர்ஜ் செய்ய முடியாது


இளந்திரயன், வேலந்தாவளம்
ஆக 03, 2025 08:14

10 வருடங்களுக்கு முன்பு bsnl land line connection கு விண்ணப்பம் செய்ய bsnl கு சென்றேன்... engineer ஐ பார்க்க சொன்னார்கள் 10 மணிக்கு வரவேண்டியவர் 11.30 கு வந்தார்... லைன் மேனை அனுப்பி அங்கு line connection ku option இருக்கா னு பார்க்கணும் அதன் பிறகே சொல்லமுடியும் என்றார்... 10 வருடம் கடந்துவிட்டது line man ம் வரவில்லை line ம் வரவில்லை.... government job வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம்.... கேட்பதற்கு ஆள் இல்லை... கூடிய சீக்கிரமே தனியாருக்கு கைமாற்றி விடுவதே நல்லது


சாமானியன்
ஆக 03, 2025 06:10

ஓ.டீ.பி வர ஐந்து நிமிடம் ஆகின்றது. கற்காலம். 4ஜி யா ! டவுட்டா இருக்கு.


rama adhavan
ஆக 03, 2025 04:42

சொல்லப்பட்ட பிரட்சினைகள் உண்மையே. என்னிடல் இரண்டு லைவ் பிஎஸ் என் எல் சிம்கள் உள்ளன. போர் ஜி சிம்கள். ஆனால் வேலை செய்யாது. நம்பர் பிடித்தமானது. அதனால் வைத்து இருக்கிறேன். மாதம் பணமும் காட்டுகிறேன்.


முக்கிய வீடியோ