உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்! கோபத்தில் ராகுல்?

டில்லி உஷ்ஷ்ஷ்! கோபத்தில் ராகுல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி குறித்து விவாதிக்க, காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஆளுக்கு ஒரு காரணம் சொல்ல, சிலரோ, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தான் காரணம்' என கூறினராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=njoxu8m1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராகுல், ஒரு கட்டத்தில் கோபமாக, 'இத்தனை மாதங்கள் நான் கஷ்டப்பட்டதற்கு பலன் இல்லை. ஹரியானா காங்., தலைவர்களின் சுயநலமே இதற்கு காரணம்.அவர்கள், தங்கள் சுயநலத்தைப் பார்த்தனரே அன்றி, கட்சியின் வருங்காலத்தை குறித்து கவலைப்படவில்லை. மின்னணு இயந்திரங்கள் குறித்து, எனக்கு முழு அறிக்கை வேண்டும்' என சொல்லி விட்டு, கோபத்துடன் வெளியே சென்று விட்டாராம்.இந்த விவகாரம் ஊடகங்களில் கசிய, 'இதெல்லாம் பொய்... அப்படி எதுவுமே நடக்கவில்லை' என, காங்., செய்தி தொடர்பாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், 'ராகுல் கோபப்பட்டது உண்மை' என, அடித்து சொல்கின்றனர் சில சீனியர் காங்., தலைவர்கள்.இதற்கிடையே, காங்கிரசின் சீனியர் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி, காஷ்மீரில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டு தோற்ற குலாம் நபி ஆசாத், ஒரு சீனியர் காங்., தலைவரிடம், 'ஜெய்ராம் ரமேஷ் உட்பட பல காங்கிரசார், சமூகவலைதளத்திலேயே கட்சியை வளர்த்து விடலாம் என, நினைக்கின்றனர்; ஆனால், களத்தில் இறங்கி வேலை செய்ய எவரும் முன் வருவதில்லை.'பா.ஜ., தோல்வி அடைந்தால், அதற்கு என்ன உண்மையான காரணம் என அலசி, அதை போக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் எப்போதுமே மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை சொல்வதில்லை; இதை பார்த்து காங்கிரசார் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றாராம்.'மின்னணு இயந்திரம் குறித்து என்ன ரிப்போர்ட் தருவது?' என, காங்., தலைவர்கள் குழம்பி உள்ளனராம். 'விரைவில், தோல்விக்கு காரணமான ஹரியானா காங்., தலைவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என, சொல்லப்படுகிறது.'காங்., பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தான், ஹரியானாவில், 'சீட்' ஒதுக்கீடு செய்வதற்கு முழு அத்தாரிட்டி. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்றால், 'நடவடிக்கையாவது மண்ணாவது... ராகுலுக்கு நெருக்கமானவர் வேணுகோபால்; வழக்கம் போல, வேறு சில தலைகள் உருளும். உண்மையாக, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவர் ஜாலியாக இருப்பார்; இதுதான் காங்கிரஸ் மாடல்' என வருத்தப்படுகின்றனர் சீனியர்கள்.லோக்சபா தேர்தலுக்கு பின், உச்சத்தில் இருந்த ராகுல், ஹரியானா தேர்தலுக்கு பின், அதள பாதாளத்தில் விழுந்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Antony alexander
அக் 16, 2024 15:43

டேய் மோடி வித்தையை நார்த்,ல காட்டலாம்?இங்க காட்டிப்பாரு ?


vadivelu
அக் 17, 2024 10:35

டேய் , நம்ம கதியை நினைத்து பார், கும்முடிபூண்டி தாண்ட முடியுமா? நீ எப்படி உன்னையும், உன்னை சேர்ந்தவர்களையுமே பற்றி நினைக்கிறாயோ, அப்படிதான் அங்கே உள்ள மனிதர்களும். தலை கீழாக நின்றாலும் அதை மாற்ற முடியாது. கொஞ்ச காலம் பொறு, இங்கேயும் அந்த மாஜிக் நடக்கும். மக்கள் இப்போதுதானே இங்கே கொஞ்சம் கொஞ்சமாக உங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள்.


Ms Mahadevan Mahadevan
அக் 15, 2024 17:56

காங்கிரஸ் போலி மத சார்பின்மை ஜாதி மதம் பார்த்து சலுகை இவைகளை கைவிட்டு உண்மையான சம வாய்ப்பு சம உரிமை கடை பிடித்தால் தப்பி பிழைக்கலாம் இல்லையென்றால் அம்போ தான்


பேசும் தமிழன்
அக் 13, 2024 22:54

பப்பு க்கு கோபம் வந்தால் அழுது விட போகிறா‌ர்.


sridhar
அக் 13, 2024 21:15

காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுலுக்கு புக ழ் , தோல்வி அடைந்தால் மற்ற தலைவர்கள் மேல் பழி , அடடா ஜாலி.


krishna
அக் 13, 2024 12:09

ONNUKKUM UDHAVAADHA COMEDY PIECE ENA CONGRESS KATCHIYIL ULLA KOTHADIMAI THALAIVARGAL YAARAAVADHU SOLLI ITALY NAATUKKU PERMANENT AAGA ANUPPI VAITHAAL CONGRESS MUNNERUM.


yts
அக் 13, 2024 10:05

அடியேனுக்கு ஒரு சின்ன சந்தேகம் பப்பு எப்போது உச்சத்தில் இருந்தார் என்று சொல்லவும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் செய்தது தோழமைக் கட்சிகள் பலத்தால் தான் தவிர தனியாக நின்றால் ஓர் இலக்கத்தில் அல்லது 30 சீட்ஜெயித்து இருக்காது என்று நம்புகிறேன்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 20:03

2029 இல் அடுத்த மக்களவைத் தேர்தல் வந்து, அதன் முடிவுகளும் வரும் வரை, கடந்த மக்களவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை வென்று எதிர்க்கட்சியான வீர வரலாறே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ....


வாய்மையே வெல்லும்
அக் 14, 2024 00:45

பப்பு தன்னுடைய லீவு என்ஜாய் செய்ய பட்டயாவில் தான் அந்த உச்சத்தை அடைவார் . இங்க வெறுப்பு புரட்சி பொய் புரட்டு தான். ஜிலேபி பப்பிம்மா உளறல் தான்


Amruta Putran
அக் 13, 2024 07:45

Now the question has changed from How many times will you launch Pappu to how many decades will you be keep launching Pappu?


kannan
அக் 13, 2024 07:37

காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக வேலை செய்யவில்லை. EVM இயந்திரத்தை குறை சொல்லியே காலத்தை ஓட்டுகிறார்கள். சரியான தலைமை இல்லை


Balasubramanian
அக் 13, 2024 07:30

காஷ்மீரில் ஒமர் அப்துல்லா கட்சி ஜெயித்தது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஜெயித்தது, உ.பி.யில் அயோத்தி உட்பட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவ் கட்சி ஜெயித்தது அனைத்துக்கும் காரணம் மின் அணு யந்திரக் கோளாறு என்று யாராவது சொன்னால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா?


கிஜன்
அக் 13, 2024 05:39

10 ஆண்டுகள் .... டெண்டுல்கர் போல அடித்து ஆடிய ஜி ... இப்போது ராகுல் டிராவிட் போல நிதானமாக ஆடுகிறார் .... ரவி சாஸ்திரி ஆகாமல் இருந்தால் சரி ...


A Viswanathan
அக் 13, 2024 09:02

சோனிய ராகுல் பிரியங்க மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் காங்கிரஸை விட்டு போனால் தான் காங்கிரஸ் உயிர் பெறும்.


rama adhavan
அக் 31, 2024 23:29

10 ஆண்டுகள் ரஞ்சி கோப்பையில் ஆடி இப்போதானே உங்கள் தலைவர் டெஸ்டுக்கு தகுதி ஆகி உள்ளார். அதை மறைத்து ஏன் உளறல்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை