வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திரையை விட நிஜத்தில் சிறப்பாக நடிக்கிறார்
மும்பை: மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுத்து வருகின்றனர்.மும்பையில் தெலுங்கர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை பிரசாரம் செய்ய வரும்படி, பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளதாம்.சமீபத்தில் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாக அலசப்பட்டதாம்.அப்போது, பவன் கல்யாணிடம் வேண்டுகோள் வைத்தாராம் அமித் ஷா. 'மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் பவன் கல்யாண் பா.ஜ.,வுக்கு உதவ வேண்டும். தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும்' என கேட்டுக் கொண்டாராம் அமித் ஷா. உடனே, அதற்கு சம்மதித்தாராம் பவன் கல்யாண்.எந்தெந்த தொகுதிகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் பிரசாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து, ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டு விட்டதாம். அமித் ஷா வேறொரு வேண்டுகோளும் வைத்துள்ளாராம்.அடுத்த ஆண்டு ஜூலைக்கு பின், தமிழகத்தில் சூறாவளி பயணம் மேற்கொள்ள வேண்டும் என பவன் கல்யாணிடம் கேட்டுள்ளாராம்.சனாதனத்திற்கு எதிராக பேசிய உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் பவன் கல்யாண். எனவே, இவர் பா.ஜ.,வுக்கு சாதகமாக தமிழகத்தில் அதிரடி சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார்.அதற்கும் பவன் கல்யாண் சம்மதித்து விட்டாராம். தமிழ் நன்றாக பேசக்கூடிய பவன் கல்யாணின் பிரசாரம், தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தப் போவது நிச்சயம்.
திரையை விட நிஜத்தில் சிறப்பாக நடிக்கிறார்