உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலின் டூப்?

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலின் டூப்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சினிமாக்களில் கடுமையான சண்டை காட்சிகளில் ஹீரோ நடித்தால், அடிபட்டுவிடும் என்பதால், ஹீரோ மாதிரியே இருக்கும் ஆட்களை இந்த சண்டை காட்சிகளில் பயன்படுத்துவர்; இவர்களை டூப் அல்லது டபுள் என, அழைக்கின்றனர்.இந்த டூப் இப்போது அரசியலிலும் நுழைந்து விட்டதா? 'ஆம்' என்கிறார் பா.ஜ.,வின் தலைவரும், அசாம் மாநில முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மா. ராகுலின் நடை பயணம் அசாமில் நடந்தது.அதில், 'ராகுல் மாதிரியே உருவ ஒற்றுமை உள்ள நபர் பங்கேற்றுள்ளார்; நடை பயணத்தில் அதிக பட்சம் ராகுலுக்கு பதிலாக இந்த டூப் தான் நடந்துள்ளார்' என்கிறார்.'இது குறித்து அசாம் மீடியாக்களில் சில செய்திகள் வந்தன... இது வெளியான உடனேயே அந்த டூப் வெளியேறி விட்டார்' எனவும் சொல்கிறார். 'அந்த டூப் யார் என கண்டுபிடித்து விட்டோம்; விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, இது குறித்து விபரங்களை வெளியிட உள்ளோம்' என்கிறார் சர்மா.இந்த சர்மா ஏற்கனவே காங்கிரசில் இருந்தவர். இவருக்கும், ராகுலுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்தவர். சர்மாவின் டூப் விஷயத்தைக் கேட்டு, 'அவருக்கு வேறு வேலை இல்லை' என, சிரிக்கின்றனர் காங்கிரசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M Ramachandran
பிப் 10, 2024 19:56

ஸ்டண்ட் மாஸ்டரிடம் டூப் எப்படி போடுவது என்பது பற்றி ட்ரைனிங்


Oru Indiyan
பிப் 04, 2024 23:21

தமிழ்நாடு முதல்வரும் டூப் என்று தான் நினைக்கிறேன். ஆட்கொணர்வு மனு போட்டு விசாரிக்க வேண்டும்


Godfather_Senior
பிப் 04, 2024 18:24

அந்த டூப்பை பேச விட்டிருந்தா எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்னுதான் அவரை பேசவே விடுவதில்லை எல்லா ஜால்றா பத்திரிகையாளனும் கேள்வி கேக்காம போயிடுவானுக


HoneyBee
பிப் 04, 2024 17:27

பாவம் அந்த இரண்டாம் பப்பு... இனி தூங்க நேரம் கிடைக்காது


M S RAGHUNATHAN
பிப் 04, 2024 12:44

வீல்ஸ் இருக்கும் பெட்டியை தூக்கும் முதல் போர்ட்டர் இந்த புத்திசாலியாகத்தான் இருக்கும்.


Ramesh Sargam
பிப் 04, 2024 23:53

சரியாக கூறினீர்கள்.


பேசும் தமிழன்
பிப் 04, 2024 12:42

நீ என்ன தான் வேடம் போட்டாலும்.... நாட்டு மக்கள் உன்னை கோமாளியாக தான் பார்க்கும் !!! ஏதாவது உருப்படியான வேலை பார்.... நாட்டுக்கு எதிரான ஆட்களுக்கு சப்போர்ட் செய்வதை முதலில் நிறுத்து !!!


rama adhavan
பிப் 04, 2024 12:33

அடிப்பது டூப் போல் போடுவதும் டு..டூப்பா? ??????????


Sridhar
பிப் 04, 2024 12:17

ஆமாம், நடைபயணம் என்று கன்டைனரில் எவ்வளவு நாட்கள்தான் "வழக்கமான" வேலைகளை விட்டுவிட்டு இருக்கமுடியும்? அப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கவேண்டாமா?


Rajarajan
பிப் 04, 2024 12:01

இது புதுசா இருக்கு பாஸ். பொறுத்திருந்து பாப்போம் உண்மை வெளிவரும் வரை.


veeramani
பிப் 04, 2024 10:09

அஸ்ஸாமின் மாண்புமிகு முதல்வர் நிச்சயம் உண்மையைத்தான் சொல்லியிருப்பார். துண்டிக்கப்பட்ட கை சின்னம் கட்சிக்கு, இதைவிட கேவலம்?? நடப்பதற்கும் டூப், மற்றவற்றிற்கும் டூப்.. சில தலைவர்கள் கூறுவது போல்.. கோமாளி நடக்கிறார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை