உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி விவகாரத்தின் பின்புலம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி விவகாரத்தின் பின்புலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய அரசியலையும், தொழிலதிபர்களையும் கலங்கடித்துக் கொண்டிக்கும் விவகாரம், அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்.'அதானி, 'கிரீன் எனர்ஜி' அதானி குழுமத்தின் ஒரு நிறுவனம். 'இந்திய மாநிலங்கள் மின்சாரம் வாங்க, சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக லஞ்சம் கொடுத்துள்ளது இந்த நிறுவனம்' என்பது குற்றச்சாட்டு. இந்திய நிறுவனம் லஞ்சம் கொடுத்தால் அமெரிக்கா எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?இந்த நிறுவனத்தில், அமெரிக்க குடிமகன்களின் பங்குகள் உள்ளன. அமெரிக்க மக்களின் பணத்தை லஞ்சமாக கொடுப்பது அந்நாட்டின் சட்டப்படி குற்றம்.அதே சமயம், நீதிமன்றத்தின் குற்றப் பத்திரிகையில், 'இதெல்லாம் குற்றச்சாட்டுகள். இவை நிரூபிக்கப்படும் வரை அதானி நிரபராதி' எனவும் சொல்லியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது அதானி குழுமம்.இந்த விவகாரம் குறித்து டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுவது இதுதான். 'நம் ஊர் அரசியல் மாதிரி, ஆட்சி மாறுவதற்கு முன் இந்தியாவை ஒரு வழியாக்க அதிபர் பைடன் முடிவு செய்துவிட்டார். அத்துடன், புதிய அதிபர் டிரம்புக்கு தலைவலி ஏற்படுத்தவும் முடிவு செய்து, அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் பைடன்.'டிரம்ப் பதவி ஏற்றவுடனேயே இப்போதுள்ள அரசின் தலைமை வழக்கறிஞர் மாற்றப்படுவார். எனவே, அதற்கு முன் இதை செய்துவிட வேண்டும் என, பைடன் செய்தது தான் அதானி விவகாரம். அத்துடன், மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்பட இது உதவும் என்பது, அமெரிக்க உளவு நிறுவனங்களின் நோக்கம்.'தவிர, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக இப்படி ஒரு அதிரடியை இறக்கிவிடுவது கூட, அமெரிக்காவின் நோக்கமாக இருக்கும். முன்பு, இதே அதானிக்கு எதிராக ஹிண்டர்பர்க் அறிக்கை பார்லிமென்ட் தொடருக்கு முன்பாக வெளியிடப்பட்டது' என்கின்றனர் அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sampath Kumar
நவ 28, 2024 09:22

நல்ல கற்பனை கதை


enkeyem
நவ 30, 2024 19:19

கற்பனை இல்லை. முற்றிலும் உண்மை. இந்திய அரசில் நடந்த செயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இந்தியா என்ன அமெரிக்காவின் கொத்தடிமையா? சென்ற ஆண்டு ஹிண்டன்பெர்க் கூறிய அபாண்ட குற்றச்சாட்டுக்கு இப்படித்தான் தாம் தூம்னு குதித்து களேபரம் பண்ணுனீங்க. அது என்ன ஆச்சு? இதுவும் அப்படித்தான் பைடன் கடைசி நேரத்தில் தனது பெரியண்ணன் புத்தியை காட்டியுள்ளான்.


Dharmavaan
நவ 27, 2024 19:56

இந்தியாவின் ஆதரவில் டிரம்ப் வெற்றி பெற்றது பைடனுக்கு பொறுக்கவில்லை கமலா ஹாரிஸுக்கும்பலமான அடி ...வெறுப்பில் செய்யும் சதி


rama adhavan
நவ 25, 2024 23:46

இந்த விவகாரத்தில் இந்திய சட்டமே செல்லுபடி ஆகும். அமெரிக்கா நீதிமன்ற தீர்ப்பு, அமெரிக்கா அரசின் நடவடிக்கை எல்லாம் கதைக்கு உதவாது. முடிந்தால் அமெரிக்க மக்கள் தங்களது பங்குகளை சந்தையில் அடுத்தவர்களுக்கு விற்று விடலாம். அவ்வளவுதான் செய்யமுடியும். இன்று நடப்பது தூண்டி விடப்பட்ட அரசியல்.


Jbmadhavan Jbmadhavan
நவ 25, 2024 18:31

இப்பொழுது அமெரிக்கா கடும் நிதி சிக்கலில் உள்ளது. இந்நேரத்தில் அங்கு பங்கு நிதி திரட்டினால் நிலமை மோசம் ஆகும்.அதுமட்டும் இந்தியாவின் நிலமை மேலும் வலுவடையும்.அதை எப்படியாவது தடுக்க எடுத்த முடிவுதான் இது.


venugopal s
நவ 24, 2024 18:14

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது ஏன்?


ஆரூர் ரங்
நவ 24, 2024 11:03

அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாக பல நாடுகளில் விமான நிலையம் துறைமுக ஒப்பந்தங்களை அடானி பெற்றார். பழிவாங்க காத்திருந்த அந்நிருவனங்கள் அடானி அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்கள் விற்க முயன்ற போது யைடன் நிர்வாகத்தை சரிகட்டி இது போன்ற வழக்கை பதிவு செய்துள்ளனர். பைடனும் ட்ரம்புக்கு இந்தியா அளித்த ஆத்திரத்தில்தான் வழக்கை "உருவாக்கி"யிருக்கலாம்.


அப்பாவி
நவ 24, 2024 08:17

அதானி மட்டுமல்ல. சாதாரண குடிமகனும் அமெரிக்காவில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிதான். குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தினுடையது. அதனால் குற்றம் சாட்டும் முன்னாடியே ஹோம் ஒர்க் செஞ்சு முடிச்சிருப்பாங்க. நம்ம ஊர் மாதிரி ஒரு ஆதாரமும் இல்லாம சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிப்பது எல்லாம் அங்கே கிடையாது. பெரும்பான்மையான கேஸ்கள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொள்வதிலேயே முடியும்.


அப்பாவி
நவ 24, 2024 04:26

ஆனா 2000 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கிய மாநில ஆட்சிகளை சும்மா உட்டுருவோம். அதெல்லாம் சின்ன மீன்கள். திமிங்கிலம்தான் மாட்டக்.கூடாது.


சமீபத்திய செய்தி