உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் நம்பிக்கை!

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் நம்பிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., - -சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இவர்களுடன், சரத் பவார் கட்சியிலிருந்து பிரிந்த அஜித் பவாரும் உள்ளார். இவர், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை இரண்டாக பிரித்தவர். 'இவருடைய கட்சி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ்' என, தேர்தல் ஆணையமும் அறிவித்து விட்டது.இரண்டு மாதங்களுக்கு முன் வரை, பா.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என, சொல்லிக் கொண்டிருந்தனர்; ஆனால் இப்போது கள நிலவரம் மாறி விட்டது என, சொல்கின்றனர்.இதனால் பா.ஜ.,வினர் மகிழ்ச்சியாக இருந்தாலும், பல பிரச்னைகள் உள்ளன. ஆனால் இவை பா.ஜ.,விற்கு மட்டுமல்ல, காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு என அனைத்து கட்சிகளுக்கும் பிரச்னை உள்ளது.குறிப்பாக, காங்கிரஸ், சிவசேனா - உத்தவ் பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு ஆகிய கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இங்கு பலருக்கு சீட் கிடைக்கவில்லை; அவர்கள் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.பா.ஜ.,விலும், 'சீட்' கிடைக்காதவர்கள் சுயேச்சைகளாக, பா.ஜ.,விற்கு எதிராக போட்டியிடுகின்றனர். இப்படி சுயேச்சை அரசியல், மஹாராஷ்டிராவில் கொடி கட்டி பறக்கிறது. அடுத்து யார் ஆட்சி அமைத்தாலும், சுயேச்சைகளின் கை அதில் ஓங்கியிருக்கும் என, சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை