உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க..,வை தோற்கடிக்க பா.ஜ., திட்டம்: வெற்றி நிச்சயம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க..,வை தோற்கடிக்க பா.ஜ., திட்டம்: வெற்றி நிச்சயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்' என்கிற ஒரே குறிக்கோளுடன், பா.ஜ., திட்டங்களை தீட்டி வருகிறது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணியும் அமைத்துள்ளது. மற்ற சிறு கட்சிகளையும், தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.சமீபத்தில், தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி திரும்பியதும் தமிழக அரசியல் குறித்து, பா.ஜ., சீனியர் தலைவர்களிடம் பேசி உள்ளார்.'அடுத்த மாதத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்திற்கு, 'விசிட்' செய்ய வேண்டும். பா.ஜ., கூட்டணிக்கு இப்போதிலிருந்தே தேர்தல் பிரசாரத்தை துவக்க வேண்டும்' என, உத்தரவிட்டுஉள்ளாராம்.மேலும், '234 சட்டசபை தொகுதிகள் அடங்கிய தமிழக சட்டசபையில், குறைந்தபட்சம், 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி இதைவிட கூடுதலாக, 50 தொகுதிகளில் வெற்றி பெறும்' என, பிரதமரிடமும், சக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளாராம் உள்துறை அமைச்சர்.'ஊழலில் திளைக்கும் தி.மு.க., அரசு மீது, மக்கள் கடுப்பில் உள்ளனர். வரும், 2026 சட்டசபை தேர்தல், தி.மு.க.,விற்கு சங்கு ஊதிவிடும்' எனவும், பா.ஜ., தலைவர்களிடம் தன் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளாராம் அமித் ஷா.'தேர்தல் விவகாரங்களில் உள்ளதை உள்ளபடி கட்சியினரிடம் பேசும் வழக்கம் கொண்டவர் அமித் ஷா. ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார்; தமிழக அரசியல் குறித்து ஆய்வு அல்லது ஏதாவது ரகசிய சர்வே நடத்தியிருப்பார்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajagurunathan V
ஜூன் 16, 2025 15:36

200 ரூபாய் மற்றும் வாட்டருக்கும் , பிரியாணிக்கும் அலையும் கூட்டம் உள்ள வரை திமுகவை வீழ்த்த எந்த சக்திபாலும் முடியாது. ஏனெனில் மதுவையும், போதைப்பொருள்களையும் கொண்டு சிந்திக்க விடாமல் செய்தது திராவிட கட்சிகள். அடுக்கு மொழி வசனம் பேச்சுக்கு மயங்கி பொற்கால காமராஜர் ஆட்சியை கவிழ்த்த இனம், நம் தமிழ் இனம்


George selvanathan
ஜூன் 16, 2025 14:26

பாஜகவால் அடிமைக் கட்சியான அதிமுகவை அழிக்க முடியும், ஆனால் தமிழ் / திராவிட மக்களின் இதயங்களை ஆளும் வலிமையான திமுகவை அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆரியர்கள் வேற்றுகிரகவாசிகள்


Pascal
ஜூன் 16, 2025 10:09

மதக்கலவரத்தை ஏற்படுத்தினாலும் எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தோற்பது உறுதி. தமிழக மக்களுக்கு என்ன செஞ்சீங்க என்று சொல்லி ஓட்டு கேளுங்க.


sudar
ஜூன் 15, 2025 18:12

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா...இவங்க கற்பனையை நினைச்சா


krishna
ஜூன் 15, 2025 21:46

UNNAI PONDRA GOPALAPURAM KOTADIMAI 200 ROOVAA COOLIE PAARTHA SIRIPPUTHAAN VARUM.


Oviya Vijay
ஜூன் 15, 2025 17:09

நிச்சயம் அடுத்த ஆட்சி இந்துக்களின் ஆட்சி...ஆம்... மத சார்பற்ற அதிமுக ஆட்சி...


எஸ் எஸ்
ஜூன் 15, 2025 13:52

பாஜக பற்றிய செய்திகள் வந்தால் ₹200 உபி க்கள் கதறுவதை பார்த்தாலே தெரிகிறது பாஜக வளர்ந்து விட்டது என்று!


venugopal s
ஜூன் 15, 2025 13:30

பாஜக திமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்க முடியும்! ஏனெனில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த எந்த கட்சியும் உருப்பட்டதில்லை!


krishna
ஜூன் 15, 2025 17:02

EERA VENGAAYAM VENUGOPAL 200 ROOVAAIKKU IPPADI MUTTU ASINGAM.AAMAM BJP INGU ILLAI ENDRAAL UN EJAMAAN THURU PIDITHU IRUMBU DHINAM EEN BJP MODI AMITH SHAH VERI BAYATHIL ULARI KONDU IRUKKIRAAR.


venu kopal,S
ஜூன் 15, 2025 12:10

ஆர்ட்டிஸ்ட் கதறல் அருமை.


sd tailor
ஜூன் 15, 2025 10:12

நிச்சயம் 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் திமுக மண்ணைக் கவ்வும்


Oviya Vijay
ஜூன் 15, 2025 10:01

மற்ற சிறு கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஓஹோ.. பலே பலே தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பிஜேபியே சின்னஞ்சிறு கட்சி தான்... டாடி வந்தா என்ன... ஷா வந்தா என்ன... யார் வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் தமிழகத்துல பிஜேபி எட்டி நின்று வேடிக்கை பார்க்க மட்டும் தான் லாயக்கே ஒழிய எந்த காலத்துலயும் அரியணை ஏற முடியாது...


vijai hindu
ஜூன் 15, 2025 12:54

இதையே பேசிகிட்டு கிட 200 ரூபாய் குவாட்டர் பிரியாணி


முக்கிய வீடியோ